பதிவு செய்த நாள் :
இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டுவோம்!
பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்

புதுடில்லி, : ''உலக வர்த்தகத்தில், இந்தியாவின் பங்கை, இரு மடங்காக உயர்த்தும் வகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை, இரட்டை இலக்கம் உடையதாக அதிகரிக்கச் செய்ய வேண்டும்,'' என,பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இரட்டை, இலக்க, வளர்ச்சியை, எட்டுவோம்! ,பிரதமர் ,நரேந்திர மோடி ,திட்டவட்டம்


டில்லியில் நேற்று, மத்திய வர்த்தக அமைச்ச கத்தின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த விழா வில் பங்கேற்ற, பிரதமர் மோடி பேசியதாவது:கடந்த, 2017 - 18 நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.7 சதவீதமாக உயர்ந்தது. அடுத்த கட்டமாக, உலக வர்த்தகத் தில் இந்தியாவின் பங்கு, 1.6 சதவீதமாக உள்ளது; இதை, இரு மடங்காக உயர்த்த வேண்டும்.அதற்கு நாட்டின்

பொருளாதார உற்பத்தி விகிதம், இரட்டை இலக்கம் உடையதாக மாற்றப்பட வேண்டும்.


இதன் மூலம், 325 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு பொருளாதாரம் உடைய நாடுகளின்பட்டியலில், நம் நாடும் இடம்பெறும்.பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். மத்திய அரசின் இந்த முயற்சியில், மாநிலங்கள், துடிப்புள்ள பங்குதாரர்களாக செயலாற்ற வேண்டும்.


அதேசமயம், உள்நாட்டுஉற்பத்தியை அதிகரித்து, இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்ற வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் துறை உற்பத்தி யில், இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் துறைக்கு இருந்து வந்த இடையூறுகள், தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்த பின், முற்றிலும் அகற்றப் பட்டன.

10க்கும் மேற்பட்ட மறைமுக வரிகளை நீக்கி, ஒரே வரியாக, ஜி.எஸ்.டி., எனப் படும், சரக்கு மற்றும் சேவை வரி, அமல்படுத்தபட்டது. அதனால், தொழில் செய்வது, மிகவும் எளிதாகி உள்ளது. வரி செலுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.புதிய வரி நடைமுறையின் கீழ்,

Advertisement

புதிதாக, 54 லட்சம் பேர், தங்களை இணைத்து உள்ளனர். இதனால், மறைமுக வரி செலுத்து வோர் எண்ணிக்கை, ஒரு கோடியை தாண்டி உள்ளது.


ஜி.எஸ்.டி.,அமலாவதற்கு முந்தைய காலத்தில், மறைமுக வரி செலுத்து வோர் எண்ணிக்கை, 60 லட்சமாக மட்டுமே இருந்தது.பல்வேறு சீர் திருத்தங்களால், அன்னிய முதலீடுகள் அதிக அளவில் குவிந்து வருகின்றன. இதனால், அன்னிய செலாவணி இருப்பு, முன்னெப் போதும் இல்லாத வகையில், புதிய சாதனை படைத்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜூன்-201816:31:02 IST Report Abuse

jayaramakrishnanlike good management importance in a company, India needs good pm .India is in implementation phase of various schemes.definitely in 10 years lot of inclusive growth can be witnessed.another thing modi has attitude of good governance and work on the same.

Rate this:
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-201815:08:42 IST Report Abuse

Dr Kannanமோடிஜி சரியான வாய் வித்தைக்காரர் 2014 தேர்தல் நேரத்தில் பிள்ளை பிறக்குமுன் பெயர் சூட்டி கொண்டிருந்தார் ...நான்கு வருடங்கள் மலடியாகவே இருந்திவிட்டதால் பிள்ளையை காணோம் இந்த 2018 இல் சாவப்போகுமுன் சங்கர சங்கர என்று ஜெபித்து கொண்டிருக்கிறார். மோடிஜி திருக்குறளுக்கு உதாரணமாக உள்ளார்: Kural: சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.. மோடிஜி பீட் (EET - POLITICAL LIGIBILITY ENTRANCE TEST) தேர்வுக்கு எதாவது கோச்சிங் சென்டருக்கு போக்கவேண்டியதுதான் வாழ்த்துக்கள் மோடிஜி

Rate this:
Anandan - chennai,இந்தியா
23-ஜூன்-201820:34:35 IST Report Abuse

Anandanநெத்தியடி கண்ணன். ...

Rate this:
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
23-ஜூன்-201812:54:13 IST Report Abuse

Devanatha Jagannathanசிதம்பரத்தின் உயிர் நண்பன் அருண் ஜைதிலிய டிஸ்மிஸ் பண்ணா நடக்கலாம்.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X