பதிவு செய்த நாள் :
சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல சுஷ்மா :
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் அதிரடி பேச்சு

புதுடில்லி:'உ.பி.,யில், 'பாஸ்போர்ட்' பெற வந்த கலப்புத் திருமண தம்பதியை அவமானப் படுத்தியதற்காக, பணி இடமாற்றம் செய்யப் பட்ட அதிகாரி, தன் தரப்பு நியாயத்தை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும். 'மத்திய அமைச்சர் என்பதால், சுஷ்மா சுவராஜ், சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர், ராஜிவ் துலி, கருத்து தெரிவித்துள்ளார்.

சட்டத்துக்கு ,அப்பாற்பட்டவர், அல்ல, சுஷ்மா, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் ,அதிரடி ,பேச்சு


உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நொய்டாவைச் சேர்ந்த, முகமது அனாஸ் சித்திக் மற்றும் தன்வி சேத் என்ற கலப்பு திருமண தம்பதி, பாஸ்போர்ட் பெறுவதற்காக,

சமீபத்தில், லக்னோவில் உள்ள, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வந்தனர்.


புகார்அங்கு, விகாஸ் மிஸ்ரா என்ற அதிகாரி, தன்விசேத்தின் ஆவணங்களை சரிபார்த்தார். 'இஸ்லாமியரை மணந்த நீங்கள், ஏன் பெயர் மாற்றம் செய்யவில்லை? இருவரில் ஒருவர், மதம் மாறினால் மட்டுமே, பாஸ்போர்ட் வழங்க முடியும்' என,சத்தமாக கூறியவர், அந்த தம்பதியின் விண்ணப்பத்தை நிராகரிததார்.


இதனால், அவமானத்துக்கு உள்ளான தம்பதி, வெளியுறவுத் துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜின், 'டுவிட்டர்' பக்கத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் பதிவு செய்தனர்.இதையடுத்து, அந்த தம்பதிக்கு உடனடியாக பாஸ்போர்ட் வழங்க, அமைச்சர் உத்தரவிட்டார். அதிகாரி விகாஸ்மிஸ்ரா, கரக்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

விசாரணை:

இந்த சம்பவம் தொடர்பாக,

Advertisement

டில்லியைச் சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., தலைவர், ராஜிவ் துலி, 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.அதில், அவர் கூறியிருப்ப தாவது:இந்த சம்பவம் தொடர்பாக, தன் தரப்பு நியாயத்தை விவரிக்க, பாஸ்போர்ட் அதிகாரி, விகாஸ் மிஸ்ராவுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.


மத்திய அமைச்சர் என்பதால், சுஷ்மா சுவராஜ், சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. இந்த சம்பவத்தில், நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த அதிகாரிக்கு நீதி கிடைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish Sami - Trivandrum,இந்தியா
24-ஜூன்-201808:44:01 IST Report Abuse

Krish Samiயாரையும் மணக்கலாம். விரும்பும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதுதானே ஒரு நாகரீக சமுதாயத்தின் அடையாளம். பெண்ணோ, ஆணோ திருமணம் காரணமாக மதத்தை மாற்றிக்கொள்ள வற்புறுத்தப்படுவது நியாயமல்ல. சட்டம் எப்படியென்று எனக்கு தெரியாது. ஆனால், மேடம். சுஷ்மா சுவராஜ் தலையீடு நியாயத்தின்பாற் பட்டது.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
23-ஜூன்-201817:58:47 IST Report Abuse

Endrum Indianசுஷ்மா அவசரப்பட்டு விட்டார் உண்மை நிலை தெரியாமல் என்று தெரிகின்றது இதனால். அமெரிக்க விசா கிடைக்கவில்லை பழைய பாஸ்போர்ட் முஸ்லீம் பெண் பெயர் இருந்ததால் அதை மாற்ற இந்த நாடகம்.

Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
23-ஜூன்-201817:10:21 IST Report Abuse

Pannadai Pandianஇவுங்க ரெண்டு பேருக்கும் பாஸ்போர்ட்டே கொடுக்க கூடாது....இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானவர்கள்....

Rate this:
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
24-ஜூன்-201812:28:16 IST Report Abuse

Ramesh Sundramஉண்மை தான் பாக்கிஸ்தான் அனுப்பி விட்டு அங்கே பாஸ்போர்ட் வாங்கி கொள்ளலாம் என்று சொல்லி இருக்கலாம் ...

Rate this:
மேலும் 46 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X