புதுடில்லி,:'பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை முடக்க, அமல்படுத்தபபட்டுள்ள அவசர சட்டத்தின் கீழ், மதுபான நிறுவன அதிபர், விஜய் மல்லையாவை, தலைமறைவு குற்றவாளி என, அறிவிக்க வேண்டும்; மேலும், மல்லையாவுக்கு சொந்தமான, 12 ஆயிரத்து, 500கோடி ரூபாய் மதிப்பு சொத்துகளை, பறிமுதல் செய்ய வேண்டும்' எனக்கோரி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி, அவற்றை திரும்பச் செலுத்தாமல், வெளிநாடுக்கு தப்பிச் செல்வோரின் சொத்து களை பறிமுதல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, பொருளா தார குற்ற வழக்குகளில் சிக்கி, வெளிநாட்டுக்கு தப்பியோரின் சொத்துகளை பறிமுதல் செய் வதற்கான மசோதா, மார்ச், 12ல், லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க் கட்சிகளின் அமளியால், பார்லி.,யின் இரு சபைகளுமே நடக்க வில்லை. அதனால், மசோதா நிறைவேற்றப்படவில்லை.
ஒப்புதல்
இதையடுத்து, இது தொடர்பாக அவசர சட்டம் நிறைவேற்ற, மத்திய அமைச்சரவை, ஏப்., ௨௧ல், ஒப்புதல் அளித்து, ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது. இதையேற்று, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.இதையடுத்து, பொருளா தார குற்ற வழக்குகளில், வங்கிகளை, நிதி நிறுவனங்களை, அரசு அமைப்புகளை மோசடி செய்து, நாட்டில் இருந்து தப்பியோடிய குற்றவாளி களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான, அவசர சட்டம் அமலுக்கு வந்தது.
மதுபான நிறுவன அதிபர், விஜய் மல்லையா, வங்கிகளில், 9,000கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி, அவற்றை திரும்பச் செலுத்தாமல், பிரிட்டன் தலைநகர், லண்டனில் பதுங்கி உள்ளான். அவனை, இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை எடுத்து வருகின்றன. இந்நிலையில், அவசர சட்டத்தின் கீழ்,
விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மஹாராஷ்டிரா
மாநிலம், மும்பை சிறப்பு கோர்ட்டில், அமலாக்கத் துறை சார்பில் தாக்கல்
செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: விஜய் மல்லையா, ஐ.டி.பி.ஐ.,
மற்றும் எஸ்.பி.ஐ., வங்கிகளில், 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி
உள்ளான். இது தொடர்பாக மல்லையா மீது, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், பண
மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுஉள்ளன.
இந்த இரு வழக்குகளிலும், அமலாக்கத் துறை சார்பில், குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப் பட்டு உள்ளன. இந்த வழக்குகளில், மல்லையா வுக்கு எதிராக, ஜாமினில் வெளிவர முடியாத, 'வாரன்ட்'கள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. மல்லையாவுக்கு, கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணம், ஒருபோதும் இருந்தது இல்லை. அவனுக்கும், அவனது மதுபான நிறுவனத்துக்கும், வாங்கிய கடன் தொகையின் மதிப்புக்கு மேல், சொத்துகள் உள்ளன.
மோசடி
ஆனாலும், கடனை வேண்டுமென்றை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளான். மதுபான நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்ட கடன்களை, வேறு தொழிலுக்கு திருப்பப்பட்ட மோசடியும் நடந்துள்ளது. மல்லையா மற்றும் அவனது நிறுவனங்களுக்குச் சொந்தமான, 8,040கோடி ரூபாய் சொத்துகளை, அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
எனவே, புதிய அவசர சட்டத்தீன் கீழ், விஜய் மல்லையாவை, தலைமறைவு குற்றவாளி என அறிவித்து, அவனுக்கும், அவனது நிறுவனங்களுக் கும் சொந்தமான, 12 ஆயிரத்து, 5௦௦ கோடி ரூபாய் மதிப்புடைய, அசையும் மற்றும் அசையா சொத்து களை பறிமுதல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அவசர சட்டம் ஏன்?
பொருளாதார குற்றங்களின் ஈடுபட்டவர்கள் மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பு வெளியாகும் வரை, அவர்களது சொத்துகளை, பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ்பறிமுதல் செய்ய முடியாது. விசாரணை முடிய பல ஆண்டுகள் ஆகும். இதனால் தான், மத்திய அரசு அவசர சட்டம்நிறைவேற்றியது.
இதன்படி,
பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு, விசாரணைக்கு ஆஜராகாமல், வெளிநாடுகளில்
பதுங்கி இருப்பவர்களை, தலைமறைவு
குற்றவாளிகள் என அறிவித்து, அவர்களது சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்ய, அவசர சட்டம் வழிவகுக்கிறது.மேலும்,
'செக்' மோசடி, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில், 100 கோடி ரூபாய்க்கு மேல்
கடன் வாங்கி, திரும்பச் செலுத்தாதவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும், அவசர சட்டம் வழிவகுத்துள்ளது.
நிரவ் மோடிக்கு, 'நோட்டீஸ்'
பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி, அதை திரும்பச் செலுத்தாமல், மும்பையைச் சேர்ந்த, வைர வியாபாரி, நிரவ் மோடியும், அவரது உறவினர், சோக்சியும், வெளிநாடுக்கு தப்பிச் சென்றனர்.அவர்கள், எந்த நாட்டில் பதுங்கி உள்ளனர் என, தெரியவில்லை. இது பற்றி, சி.பி.ஐ., விசாரிக்கிறது. நிரவ் மோடி மற்றும் சோக்சியை பிடிக்க, சர்வதேச போலீசான, 'இன்டர்போல்' உதவியை, சி.பி.ஐ., நாடி உள்ளது.நிரவ் மோடிக்கு எதிராக, மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த, ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட்களையும், குற்றப் பத்திரிகை விபரங்களையும், இன்டர்போலிடம், சி.பி.ஐ., வழங்கி உள்ளது. சி.பி.ஐ., தந்துள்ள விபரங்களை, இன்டர்போல் ஆய்வு செய்கிறது.
இந்நிலையில், சி.பி.ஐ., அளித்து உள்ள விபரங்கள், திருப்திகரமாக உள்ளதாகவும், நிரவ் மோடிக்கு எதிராக, 'ரெட் கார்னர்' நோட்டீஸ், அடுத்த வாரத்தில் வெளியிடப்படலாம் என்றும், இன்டர்போல் வட்டாரங்கள் தெரிவித் தன.ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட வர்கள், எந்த நாட்டில் இருந்தாலும், அந்த நாட்டு அரசு, அவர்களை கைது செய்து, இன்டர் போல் போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், இவர்கள், விமான நிலையங்களுக்கு வந்து, வேறு நாட்டுக்கு செல்ல முடியாது. விமான நிலையத்திலேயே, அவர்கள் கைது செய்யப்படுவர்.இதேபோல், நிரவ் மோடியின் உறவினர் சோக்சிக்கு எதிராகவும், 'ரெட் கார்னர்' நோட்டீஸ் வெளியிடப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (8)
Reply
Reply
Reply