புதுடில்லி, உச்ச நீதிமன்ற நீதிபதி, ஜெ.செலமேஸ்வர், நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர், நீதிபதி ஜெ.செலமேஸ்வர்.
கேரளா மற்றும் கவுகாத்தி உயர் நீதிமன்றங்களில், தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்; பின், உச்ச நீதிமன்ற நீதிபதி
ஆக இருந்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து, பத்திரிகையாளர்களிடம், சமீபத்தில் வெளிப்படையாக குற்றம் சாட்டிய சம்பவத்தில், இவர் பரபரப்பாக பேசப்பட்டார்.
நீதிபதிகளை நியமிக்கும், 'கொலீஜியத்தில்' உறுப்பினராக இருந்தார். இந்நிலையில், நேற்று இவர், பணி ஓய்வு பெற்றார்.