அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மெகா கூட்டணி: ராகுல், கமல் ஆலோசனை

வரும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், தி.மு.க., - காங்கிரஸ் தலைமையில், மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக, ராகுலிடம், கமல் ஆலோசனை நடத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

 மெகா, கூட்டணி, ராகுல், கமல், ஆலோசனை


மதுரையில், மக்கள் நீதி மையம் என்ற பெயரில், புது கட்சியை, நடிகர் கமல் துவக்கினார். தேர்தல் கமிஷனிடம், அங்கீகாரம் கேட்டு, அக்கட்சியின் நிர்வாகிகள் மனு அளித்தனர். அதற்கு, நேரில் ஆஜராகும்படி, தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்தது. அதை ஏற்று, டில்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், கமல் ஆஜராகி விளக்கம் அளித்தார்.


பரபரப்பு
பின், காங்கிரஸ் தலைவர் ராகுலையும், மூத்த தலைவர் சோனியாவையும், கமல் சந்தித்து பேசினார். இது, தமிழக அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.இது குறித்து, அவரது கட்சி வட்டாரங்கள் கூறிய தாவது: ராகுலுடன் கமல், ஒரு மணி நேரம் பேசி உள்ளார். அப்போது, பிரியங்காவும் உடனிருந்துள்ளார். கர்நாடகா மாநில முதல்வர், குமாரசாமி பதவி ஏற்பு விழாவில், ராகுல் பங்கேற்றபோது, அங்கு அவரை, கமல் சந்தித்தார். அப்போது, ராகுலிடம், 'தங்களை தனியாக சந்திக்க வேண்டும்' என்றார் கமல். அதற்கு, 'நீங்கள், டில்லிக்கு வரும்போது சந்திக்கலாம்' என கூறிஉள்ளார்.


தேர்தல் கமிஷன் பணிகள் தொடர்பாக, டில்லி

சென்ற கமல், ராகுலை சந்தித்தார். அப்போது, ராகுலிடம், கமல் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், பா.ஜ., அணியை வீழ்த்த வேண்டும்; இது, நம் பொதுவான நோக்கம். மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும், பிரிந்து விடாமல் ஒருங்கிணைந்து, தேர்தலை சந்திக்க வேண்டும்.


கடந்த, 2004 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், தி.மு.க., தலைமையில் காங்கிரஸ், பா.ம.க., இரு கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் பெரிய கூட்டணி அமைந்தும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு கிடைத்த ஓட்டுகள் குறைய வில்லை. மொத்தம், 39 லோக்சபா தொகுதிகளில், தலா, ஒரு தொகுதியில், குறைந்தபட்சமாக, 11 லட்சம் ஓட்டுகளும், அதிகபட்சமாக, 15 லட்சம் ஓட்டுகளும் உள்ளன.


மீண்டும் பேச தயார்ஒரு சட்டசபை தொகுதிக்கு, 50 ஆயிரம் முதல், 60 ஆயிரம் ஓட்டு வங்கி, அ.தி.மு.க.,வுக்கு உள்ளது. அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டால், ஒரு லோக்சபா தொகுதிக்கு, மூன்று லட்சம் ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.


இதனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை வீழ்த்த வேண்டும் எனில், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஓட்டுகள் மட்டும் போதாது.இந்த கட்சிகளுடன், மக்கள் நீதி மையம், பா.ம.க., - தே.மு.தி.க., - அ.ம.மு.க., போன்ற கட்சி களையும் இணைத்து, 'மெகா' கூட்டணியை உருவாக்கினால் தான், வெற்றி கூட்டணியாக அமையும்.


தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்தை, நான் ஏற்கனவே சந்தித்து பேசியுள்ளேன். மீண்டும், நான் சந்தித்து பேச தயாராக உள்ளேன்.தினகரன் கட்சி நிர்வாகி தங்க தமிழ்செல்வன், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி போன்றவர்கள், நான் கூட்டியிருந்த விவசாயிகள் சங்கஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் கட்சிகளின்

Advertisement

தலைமையிடமும், நானே பேசி, கூட்டணிக்கு அழைத்து வருகிறேன். தொகுதி பங்கீட்டில், தி.மு.க., 15 தொகுதிகளை எடுத்து விட்டு, மீதமுள்ள, 24 தொகுதிகளை காங்கிரசிடம் தர வேண்டும். நாம் அனைவரும், கட்சியின் தகுதி அடிப்படையில், பங்கிட்டு கொள்ளலாம்.


பா.ஜ.,வுக்கு எதிராக, அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் இணைய வேண்டும் என்ற பாடத்தை, கர்நாடகா தேர்தல் உணர்த்தி உள்ளதால், இந்த முடிவை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.


திட்டம்இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும், கமல் வாயிலாக, மற்றொரு வியூகம் அமைத்துள்ளார்.அதாவது, காங்கிரஸ் கட்சிக்கு, ஒற்றை இலக்கத்தில், 'சீட்' ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., முன்வந்தால், அதை தவிர்த்து விட்டு, மக்கள் நீதி மையம், தே.மு.தி.க., - பா.ம.க., அ.ம.மு.க., மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டி யிடலாம் என்ற, திட்டத்தை வகுத்துள்ளார்.


அதனால் தான், ராகுல், சோனியாவை, கமல் சந்திக்க, திருநாவுக்கரசர் பின்னணியில் இருந்துள்ளார்.இவ்வாறு மக்கள் நீதி மையம் கட்சி வட்டாரங்கள் கூறின.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூன்-201822:14:55 IST Report Abuse

kulandhaiKannanவைகோ???

Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
24-ஜூன்-201822:09:47 IST Report Abuse

Krish Samiஇவர் யாரென்று தெரிகிறதா? இப்போது புரிகிறதா? கமல் ஒரு டம்மி சோப்பளங்கி என்று எப்போதுமே நமக்கு தெரியும். எல்லோரும் எம்ஜியாரா, என்ன தனியாக நின்று (அன்று திண்டுக்கல்லில்) காங்கிரஸ் தி மு க இரண்டுக்கும் டெபாசிட் இழந்த கதை மீண்டும் நிகழ?

Rate this:
Arasu - Ballary,இந்தியா
25-ஜூன்-201814:21:15 IST Report Abuse

Arasuகமல் செய்வது நல்லது. திமுக இதற்க்கு ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது. காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் இருந்தால் நல்லது பிஜேபி எதிர்ப்பு வாக்குகள் சிதறும்...

Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
25-ஜூன்-201819:45:20 IST Report Abuse

Krish Samiதமிழ்நாட்டில் பா ஜ கவுக்கு வாக்கு மிக மிக குறைவு. ஜெயலலிதா இல்லாத நிலையிலும் எம்ஜிஆர் வோட்டு வங்கியில் மிக சிறிதே வரக்கூடும். ஆர் கே நகரில் பா ஜ க பரிதாபமாக டெபாசிட் இழந்தது நினைவில் இருக்கலாம். ரஜினிகாந்த் தாக்கம், ஜெயலலிதா இல்லாத நிலையில், எந்த அளவுக்கு இருக்கும் என்பதும் கணிக்கமுடியாதது. அவர் எம்ஜிஆர் & ஜெயலலிதா வாக்கு வங்கியை குறிப்பிட்ட அளவுக்கு சிதற வைத்தால், அது தி மு க வுக்கே நன்மையாக முடியும். அவரால் பெரிய அளவில் வாக்குகளை பெற முடியாவிட்டால், அ இ அ தி மு க வுக்கு இப்போது ஒரு வாய்ப்பு இருக்கவே செய்கிறது. இதுதான் நிதர்சனம். மற்ற எல்லா கணிப்புகளும், just wishful thinking....

Rate this:
Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ
24-ஜூன்-201821:18:38 IST Report Abuse

Seitheeeகமல் ஒரு லூசு போல இருக்கு. ஒரு பொய் இன்னும் ஒரு பொய்யுடன் போய் பேசுகிறது. முஸ்லிம்கள், கிறித்துவர்கள் கட்சி மதசார்பற்ற கட்சி கமலுக்கு. என்ன, தமிழ் நாட்டு மக்களை இளிச்சவாய்கள் என்று நினைக்கிறாயா? கமலே ? நீ உருப்படாமல் போவதற்கு நேரம் சீக்கிரம் வரும். நீ ஒரு நாட்டு விரோதி. நீ அரசியலில் தோற்பது நிச்சயம்.

Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X