பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில்
போலிகளை தடுக்க புதிய விதிமுறைகள்

சென்னை:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையில், போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில், மருத்துவ கல்வி இயக்ககம், விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது.

மருத்துவ, படிப்பு ,மாணவர்,சேர்க்கையில்,போலிகளை,தடுக்க புதிய,விதிமுறைகள்


தமிழகத்தில், 2017ல் நடைபெற்ற, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஒன்பது மாணவர்கள் போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்ததாக, புகார் எழுந்தது. இதனால், நடப்பாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில், முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், மருத்துவ கல்வி இயக்ககம், விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது.


அதன் விபரம்: * தமிழக ஒதுக்கீட்டு

இடங்களுக்கான, கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், 'தமிழர்' என, இடம் கோரமுடியாது


* 'நீட்' நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பத்தில், வேறுமாநிலத்தை, தன் சொந்த மாநிலமாக குறிப் பிட்டவர்கள், தமிழக இடங்களுக்கு, உரிமை கோர முடியாது


* தமிழகத்தில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்த மாணவர்கள், இருப்பிட சான்றிதழ் சமர்பிக்க வேண்டாம். ஆனால், தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, வேறு மாநிலங்களில் படித்திருந்தால், கட்டாயம் இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்


* அந்த மாணவரின் பெற்றோர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிவிக்க, அவர்களது பிறப்பு சான்றிதழ், 10ம் வகுப்பு சான்றிதழ்,பிளஸ் 2 சான்றிதழ், டிப்ளமா அல்லது இளநிலை கல்வி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப அட்டை போன்றவற்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.


சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்கள்,

Advertisement

பொது பிரிவினருக்கான பட்டியலில் தான் இடம் பெறுவர்.


* வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்து, தமிழகத்தில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்திருந்தால், நீட் தேர்வுக்கான விண்ணப்பத் தில், தமிழகத்தை சொந்த மாநிலமாக குறிப் பிட்டாலும், அவர்கள், பொது பிரிவினருக்கான பட்டியலில் தான் இடம் பெறுவர்

* போலியான சான்றிதழ்கள் கொடுத்து, படிப் பில் சேர்ந்தது தெரிய வந்தால், மாணவர்கள், கல்லுாரிகளில் இருந்து உடனே நீக்கப்படுவர். மேலும், மாணவர் மீதும், பெற்றோர் மீதும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manzur - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜூன்-201813:47:48 IST Report Abuse

ManzurTamil Nadu Medical colleges only for Tamil people for which d from Tamil people's taxes not only studies but also medical treatments.So Tamil people should enjoy first.Let all other states should more medical colleges for their state purpose.If they don't have sufficient funds let claim from central Govt.

Rate this:
Manzur - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜூன்-201812:44:44 IST Report Abuse

ManzurTamil Nadu Medical colleges only for Tamilan for which d from Tamil People taxes.So Tamil People should enjoy first. Let All States should more medical colleges for their state purpose only.

Rate this:
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
24-ஜூன்-201811:41:59 IST Report Abuse

Needhiyin Pakkam Nil மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்ற ஒன்பது மாணவர்கள் போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்ததாக, புகார் எழுந்தது. வீட்டில் உள்ள எல்லா ஆதாரத்தையும் மூட்டை கட்டி கொண்டு செல்லுங்கள் நல்ல தேசம் டா இது, படிப்பது அந்த மாணவன் மட்டும் தானே அந்த குடும்பமே இல்லையே, அப்போ ஒரு ஆதார் கார்டு மட்டும் போதும் முகவரிக்கு, அப்புறம் சாதி சான்றிதழ் சலுகைகளுக்காக, வெளிமாநிலத்தில் படித்தால் பள்ளி இறுதி சான்றிதழ் சொல்லிவிடும், அப்புறம் ஏன் மாணவர்களை குழப்புகிறீர்கள், வெளிநாடுகளில் அடையாள அட்டையை வைத்து அனைத்தையும் முடிவு செய்து விடுகிறார்கள், ஆனால் நம் நாட்டில் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் இந்த சான்றிதழ் குழப்பங்கள் இன்னும் நீங்கவே இல்லையே........

Rate this:
AR - ,
24-ஜூன்-201817:25:59 IST Report Abuse

ARSTUDENT IS A MINOR WHILE JOINING. PARENT IS A MAJOR AND HE ONLY FINANCES. SO PARENTS ARE EQUALLY RESPONSIBLE ...

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X