பிளாஸ்டிக்கை தடை செய்யும் நடைமுறை முதன் முதலாக, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட
பகுதிகளிலுள்ள, அரசு அலுவலகங்களில் ஜூலை, 1 முதல் அமலுக்கு வருகிறது. தமிழக அரசு அறிவித்த, பிளாஸ்டிக்கிற்கு தடை உத்தரவை அமல்படுத்த, அவகாசம் இருந்தும், மற்ற மாவட்டங்களை முந்தி, சேலம் மாநகராட்சி களத்தில் இறங்குகிறது. இதனால், மற்ற மாவட்டங்களிலும், விரைவில் தடை உத்தரவு அமலாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'தமிழகத்தில், 2019 ஜனவரி, 1ம் தேதி முதல், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்
படும்' என, சட்டசபையில், முதல்வர் பழனிசாமி சில நாட்களுக்கு முன்,அறிவித்தார். நீர் நிலைகள், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கும் விதமாக, தமிழக அரசு இந்த முடிவை எடுத்தது. இதனால், பாக்கு மட்டை, வாழை இலைகள் பயன்பாடு அதிகரிக்கும் என்றும், அரசு தெரிவித்தது.
பொதுமக்களும், வியாபாரிகளும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப்பைகள், காகித உறைகள் போன்றவற்றை பயன்படுத்தும் பழக்கத்திற்கு மாற வேண்டும் என்பதற்காக, அதற்கு அவகாசம் கொடுக்கும் வகையில், தடை உடனடியாக அமலுக்கு வரவில்லை.
பாராட்டு
வரும், ஜன., 1 முதல் அமலுக்கு வருகிறது என,
அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது. அரசின் இந்த முடிவுக்கு, அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், ஜூலை, 1 முதல், தடை உத்தரவை அமல்படுத்தப் படுகிறது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் அரசு அலுவலங்களில், பிளாஸ்டிக்கை தடை செய்ய அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சேலம் மாநகராட்சியில், தினமும், 400 டன் குப்பை சேகரமாகிறது. இதில், 45 சதவீதம் பிளாஸ்டிக் கழிவு.அவை, சாக்கடை கால்வாய், நீர்நிலைகளில் வீசப்பட்டு தேங்கின. கடந்தாண்டு, சேலம் மாவட்டத்தில் உருவான டெங்கு பாதிப்பு, தமிழகத்தையே உலுக்கியது. அதற்கான காரணங்களை, மாநகராட்சி ஆய்வு செய்தபோது, பிளாஸ்டிக்கின் பங்கு அதிகளவில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பிளாஸ்டிக் கழிவை குறைக்க, நான்கு மண்டலங்களில், தலா ஒரு உலர்கழிவு மையம் அமைக்கப்பட்டு, தனியே சேகரிக்கப்பட்டது. அங்கு,
துப்புரவு ஊழியர்கள் மற்றும் மக்களால் வழங்கப்படும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு, மதிப்பூதியம் வழங்கப் படுவதால், நல்ல பலன் கிடைத்தது.மேலும், சாக்கடை, கால்வாய் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் பொருட்கள் வீசப்படுவதை தடுக்க, அதன் பயன்பாட்டை குறைக்க, சிறு, பெரு வியாபாரிகளுக்கு, விழிப்புணர்வு கூட்டங் களும் நடத்தப்பட்டன. அதன் எதிரொலியாக, 20 சதவீத கழிவை, மறு சுழற்சிக்கு சேகரிக்க முடிந்தது.
அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க,
தீவிர நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. ஜூலை, 1 முதல், சேலம் மாநகராட்சி பகுதி
களிலுள்ள, மத்திய - மாநில அரசு அலுவலக வளாகங்கள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளி வளாகங்கள் உள்ளிட்டவற்றில், ஒருமுறை பயன்படுத்தி துாக்கியெறியும், மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது,
முழுமையாக தடை செய்யப்படுகிறது.
இது குறித்து, சேலம் மாநகராட்சி கமிஷனர், சதீஷ் கூறியதாவது:முதல்கட்டமாக, அரசு அலுவலகங்களில் தடை அமல்படுத்தப் படுகிறது. படிப்படியாக, சிறு, பெரு வியாபாரிகள், மக்கள் என, முழு பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்படும். அதற்கு மாற்றாக, பாரம்பரியமாக பயன்படுத்தக்கூடிய, வாழை இலை, பாக்கு மட்டை தட்டுகள், தாமரை இலைகள் ஆகியவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேநேரத்தில், மருத்துவ பொருட்களுக்கான, பிளாஸ்டிக் உறைகளுக்கு மட்டும், விலக்கு அளிக்கப் படுகிறது. அனைத்து தரப் பினரும், இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கட்டாயம்
பிளாஸ்டிக்கை தடை செய்வது, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அரசு அலுவல கங் களில் அமலாவதன் காரணமாக, மற்ற மாவட்டங் களிலும், விரைவில், உத்தரவை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு, அதிகாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.சேலத்தில் தடை உத்தரவு அமலுக்கு வந்த பின், மக்கள் மத்தியில் எழும் சந்தேககங்கள், கேள்வி களுக்கு விடை காணும் வகையில், மற்ற மாவட்டங் களில் அதை சரி செய்து, உத்தரவை அமல்படுத்து வதற்கு வாய்ப்பாக அமையும். - நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (20)
Reply
Reply
Reply