ஜம்மு:ஜம்மு - காஷ்மீரை, இந்தியாவில் இருந்து பிரிக்க, பா.ஜ., ஒருபோதும் அனுமதிக்காது என, அக்கட்சியின் தலைவர், அமித் ஷா கூறினார்.
ஜம்மு - காஷ்மீரில், மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்தது. பா.ஜ., அளித்து வந்த ஆதரவை, சமீபத்தில், 'வாபஸ்' பெற்றதை அடுத்து, அங்கு, கவர்னர் ஆட்சி நடக்கிறது.
வரவேற்பு:
ஆட்சி கலைக்கப்பட்ட பின்,
பா.ஜ., தலைவர் அமித் ஷா, முதல் முறையாக, நேற்று ஜம்மு - காஷ்மீர் சென்றார். அங்கு, பா.ஜ., தொண்டர்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தல் குறித்து, தேர்தல் கமிட்டி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.பின், ஜன சங்க நிறுவனர், சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது:பா.ஜ., தலைவர் களுக்கு வழிகாட்டியாக இருந்தவர், சியாமா பிரசாத் முகர்ஜி.
தியாகம்
ஜம்மு -
காஷ்மீர் மாநிலம், இந்தியாவிடம் இருந்து பிரிக்கப்படக் கூடாது என்பதற்காக,
பிரஜா பரிஷத் அமைப்பை துவங்கி போராடினார்; அதற்காக, தன் உயிரையும் தியாகம் செய்தார்.இன்றைய
இளைஞர்கள் அனைவரும், பிரஜா பரிஷத்தின் வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜம்மு - காஷ்மீர், இன்றைக்கு, இந்தியாவுடன் இணைந்து இருக்கிறது என்றால், அதற்கு, சியாமா பிரசாத் முகர்ஜி தான் காரணம்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதி. அதை பிரிக்க, பா.ஜ., ஒருபோதும் அனுமதிக்காது.இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (29)
Reply
Reply
Reply