பொள்ளாச்சி;பொள்ளாச்சி நாச்சியார் வித்யாலயம் பள்ளியில், மாணவர் தலைவர் தேர்தல் நேற்று நடந்தது.தேர்தலில், 'மெய்நிகர் சுதந்திர அணி' சார்பாக தனுஷ்ரூபனும், 'பசுமை மாணவர் அணி' சார்பாக சிரஞ்சீவியும் போட்டியிட்டனர்.பள்ளி அறங்காவலர்கள் சின்னசாமி,
மனோரமா, பள்ளி தலைவர் மணி சின்னசாமி, தாளாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சகுந்தலாமணி, பெற்றோர் பங்கேற்றனர். நான்காம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் வரிசையில் நின்று ஓட்டுப்பதிவு செய்து, மாணவர் தலைவரை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டினர்.ஓட்டுப்பதிவுக்கு வர இயலாத மாணவர்கள் தொலைபேசியில் ஓட்டுப்பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில், 'மெய்நிகர் சுதந்திர அணியினர்' வெற்றி பெற்றனர்.