கூடலுார்: கூடலுார், நாடுகாணியில் அமைக்கப்பட்டுள்ள ஜீன்பூல் சூழல் சுற்றுலா மையம், சுற்றுலா பயணியர் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே, நாடுகாணி நிலம்பூர் சாலையை ஒட்டி, தாவர ஆராய்ச்சிக்காக, 1989ல், 500 ஏக்கர் பரப்பளவில், ஜீன்பூல் தாவர மையம் அமைக்கப்பட்டது. காலப்போக்கில், அங்கு பணியில் இருந்த தாவர ஆராய்ச்சியாளர்கள் பலர் பணியிலிருந்து சென்று விட்டனர்; ஒரு சிலர் மட்டும் பணியாற்றி வந்தனர்.இந்நிலையில், ஆதிவாசி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், இம்மையத்தை சூழல் சார்ந்த சுற்றுலா மையமாக மாற்றும் நடவடிக்கையை, வனத்துறையினர் மேற்கொண்டனர். இதற்காக, தாவர மையத்தில் உள்ள,
கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு, பார்க்கிங், தங்கும் விடுதி வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
இம்மையத்தின் திறப்பு விழா எளிய முறையில் நடந்தது.தொடர்ந்து, சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டனர். நுழைவு கட்டணமாக, 30 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணியரை, வன ஊழியர்கள் அழைத்து சென்று, சில பகுதிகளை பார்வையிட
அனுமதித்தனர்.தினமும் காலை, 10:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை செயல்படும்.