கழிப்பறைகளை மேம்படுத்த ரயில்வே அதிரடி முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கழிப்பறைகளை மேம்படுத்த ரயில்வே அதிரடி முடிவு

Added : ஜூன் 24, 2018 | கருத்துகள் (24)
Advertisement
ரயில்வே, கழிப்பறை

'மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளையொட்டி, வரும், அக்., 2க்குள், அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும், கழிப்பறைகளை மேம்படுத்த வேண்டும்' என, ரயில்வே வாரியம் கெடு விதித்துள்ளது.

தேசப்பிதா மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை, ஒரு ஆண்டுக்கு கொண்டாட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கும், ரயில்வே வாரிய தலைவர், அஷ்வனி லோஹானி அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும், ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய வகையில், கழிப்பறை அமைத்திருக்க வேண்டும். ஏற்கனவே உள்ள கழிப்பறைகளை, சுத்தமாக பராமரிப்பதுடன், தேவையான தண்ணீர் வசதி செய்ய வேண்டும். கதவுகள், இணைப்புகள், சாதனங்கள் மற்றும் தரை ஆகியவற்றின் தரத்தை மேம்படுத்த வேண்டும். கழிப்பறை இல்லாத ரயில்வே ஸ்டேஷன்களிலும், செப். 30க்குள் கழிப்பறை கட்டப்பட வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாமல், அசுத்தமாக உள்ளதாக, அதிகளவில் புகார்கள் வந்துள்ளன. எனவே, ரயில்வே ஸ்டேஷன் பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ், கழிப்பறை சுத்தம் செய்யும் பணியையும் இணைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூன்-201817:20:30 IST Report Abuse
jayaramakrishnan apart from good maintenance of toilets by railways dept ,passengers should also flush well.
Rate this:
Share this comment
Cancel
Biil Brace - kandala,ஆப்கானிஸ்தான்
24-ஜூன்-201814:02:04 IST Report Abuse
Biil Brace நியூ டெல்லி முதல் நடை மேடை டாய்லெட் சென்றேன், காலை வைக்க முடிய வில்லை, அதை முதலில் நம் விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் மாதிரி சுத்தமாக வைத்திருங்கள்
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - sel,இந்தியா
24-ஜூன்-201812:13:27 IST Report Abuse
makkal neethi இனி வரும் எமது மூன்றாவது தலைமுறைக்கு சுத்தமான கழிவறை கிடைக்கும் என்று நம்புவோமாக.. வாழ்க் வல்லரசு இந்தியா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X