ஸ்ரீநகர்:காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில், சதர் பன் பகுதியில், ரோந்து சென்ற ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, ராணுவ வீரர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் இரு தரப்பிற்கு இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.
இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக மாநில போலீஸ் டிஜிபி கூறியுள்ளார். மற்றொரு பயங்கரவாதி ராணுவத்திடம் சரணடைந்தார். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிகிறது.
குல்காம் பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.