எல்லை தாண்டி ஆயுதம், போதை மருந்து, கால்நடைகள் கடத்தல் அதிகரிப்பு

Updated : ஜூன் 24, 2018 | Added : ஜூன் 24, 2018 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி: எல்லை தாண்டி ஆயுதங்கள், போதை மருந்துகள், மற்றும் கால்நடைகள் கடத்தி செல்லப்படுவதும், அது தொடர்பாக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் கடந்த 3 ஆண்டில் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளி விவரம்: பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மியான்மர் நாட்டை ஒட்டிய எல்லைகளில், ஆயுதங்கள், போதை மருந்து
ஆயுதம், போதை மருந்து, கால்நடைகள், கடத்தல், எல்லை

புதுடில்லி: எல்லை தாண்டி ஆயுதங்கள், போதை மருந்துகள், மற்றும் கால்நடைகள் கடத்தி செல்லப்படுவதும், அது தொடர்பாக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் கடந்த 3 ஆண்டில் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளி விவரம்: பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மியான்மர் நாட்டை ஒட்டிய எல்லைகளில், ஆயுதங்கள், போதை மருந்து கடத்தியதாக 2015ல் 19.537 - 2016 ல் 23,198 - 2017 ல் 31,593 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்படும் கடத்தல் காரர்களின் எண்ணிக்கையும் 2015ல் 1,501 ஆக இருந்தது, 2016 ல் 1,893 பேராகவும், 2017 ல் 2,299 பேராகவும் அதிகரித்துள்ளது.வங்கதேச எல்லையில் கடந்த 2015ல் 18,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, 655 பேர் கைது செய்யப்பட்டனர். 2016ல் 21,771 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 751 பேர் கைது செய்யப்பட்டனர். 2017 ல், 29,693 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 633 பேர் கைது செய்யப்பட்டனர். நேபாள எல்லையில், 2015ல் 1,158 வழக்குகளும், 2015ல் 1,173 வழக்குகளும், 2017 ல் ,563 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்திய சீன எல்லையில் கடத்தல் சம்பவங்கள் நடந்ததாக வழக்குகள் ஏதும் பதிவாகவில்லை.எல்லை தாண்டி, அனுமதியின்றி கடத்த முயன்றதாக பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை 2015ல் 1,63,180 ஆகவும், 2016 ல் 1,71,869 ஆகவும், 2017 ல், 1,30,806 ஆகவும் இருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (13)

Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-ஜூன்-201807:55:16 IST Report Abuse
Srinivasan Kannaiya இங்கேதான் ரியல் எஸ்டேட்டின் அசுர வளர்ச்சியால் விவசாயம் படுத்து போச்சு... அதன் முதுகு எலும்பாகிய கால்நடைகளின் வாழ்வும் கேள்வி குறியாகிவிட்டது... இந்துக்களுக்கு மட்டும் இந்த அரசு என்று மார் தட்டும் பிஜெ பி.. விவசாயிகள் என்ற பெயரில் பணக்காரர்களுக்கு பணததை வாரிக்கொடுக்கிறது... அது உண்மையான பயனாளிகளுக்கு கிடைப்பதில்லை... கால்நடைகளையும் கண்டு கொள்வதில்லை.. அந்த கால்நடைகளை கொண்டு போகிறவர்கள் அவற்றை உண்ணாமல்,, உபயோகமான வழியில் பயன்படுத்த இறைவனை வேண்டலாம்...
Rate this:
Murugesan - Bangalore,இந்தியா
25-ஜூன்-201810:04:16 IST Report Abuse
Murugesanநீ மட்டும் மஸ்கட்டில் விவசாயமே பண்றே ???...
Rate this:
Cancel
raja -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூன்-201800:22:31 IST Report Abuse
raja all digital india hai, smuggling india hai,bahooth acha hai, no educated people to tun govt,shame on,
Rate this:
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
24-ஜூன்-201821:11:43 IST Report Abuse
balakrishnan எந்த விஷயத்திலும் பி.ஜெ.பி யும் அவர்களின் தலைவர் மோடியும் எதுவும் செய்தபாடில்லை, மோடி பிரதமர் வேட்பாளராக நாடு முழுவதும் என்ன காரணங்களை எல்லாம் எடுத்து சொல்லி பிரச்சாரம் செய்தாரோ, அதில் ஒன்றை கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை,
Rate this:
Renga Naayagi - Delhi,இந்தியா
25-ஜூன்-201805:29:46 IST Report Abuse
Renga Naayagiஇப்படியே பொருமிக்கொண்டு இருந்தால் அல்சர் தான் வரும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X