புதுடில்லி: எல்லை தாண்டி ஆயுதங்கள், போதை மருந்துகள், மற்றும் கால்நடைகள் கடத்தி செல்லப்படுவதும், அது தொடர்பாக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் கடந்த 3 ஆண்டில் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளி விவரம்: பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மியான்மர் நாட்டை ஒட்டிய எல்லைகளில், ஆயுதங்கள், போதை மருந்து கடத்தியதாக 2015ல் 19.537 - 2016 ல் 23,198 - 2017 ல் 31,593 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்படும் கடத்தல் காரர்களின் எண்ணிக்கையும் 2015ல் 1,501 ஆக இருந்தது, 2016 ல் 1,893 பேராகவும், 2017 ல் 2,299 பேராகவும் அதிகரித்துள்ளது.
வங்கதேச எல்லையில் கடந்த 2015ல் 18,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, 655 பேர் கைது செய்யப்பட்டனர். 2016ல் 21,771 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 751 பேர் கைது செய்யப்பட்டனர். 2017 ல், 29,693 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 633 பேர் கைது செய்யப்பட்டனர். நேபாள எல்லையில், 2015ல் 1,158 வழக்குகளும், 2015ல் 1,173 வழக்குகளும், 2017 ல் ,563 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்திய சீன எல்லையில் கடத்தல் சம்பவங்கள் நடந்ததாக வழக்குகள் ஏதும் பதிவாகவில்லை.
எல்லை தாண்டி, அனுமதியின்றி கடத்த முயன்றதாக பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை 2015ல் 1,63,180 ஆகவும், 2016 ல் 1,71,869 ஆகவும், 2017 ல், 1,30,806 ஆகவும் இருந்தது.