ஜூன், 25, 1931
விஸ்வநாத் பிரதாப் சிங் என அழைக்கப்படும், வி.பி.சிங்: உ.பி., மாநிலம், அலகாபாத் நகரில், ராஜ வம்சத்தில், 1931 ஜூன், 25ல் பிறந்தார். அலகாபாத் மற்றும் புனே பல்கலைகளில், இயற்பியல் பட்டம் பெற்றார். ஏழைகள் மீது அன்பு கொண்டு, வினோபாவேயின் பூமி தான இயக்கத்தில் இணைந்து, தன் நிலங்களை தானமாக அளித்தார்.
அரசியலில் இறங்கியவர், காங்கிரசில் பணியாற்றினார். இவர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த போது, போபர்ஸ் ஊழல் விவகாரத்தில், பிரதமர் ராஜிவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்; அதன் காரணமாக, அமைச்சரவை மற்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
ராஜிவுக்கு எதிரான, காங்கிரஸ் தலைவர்களையும், பிற கட்சிகளையும் திரட்டி, தேசிய முன்னணியை துவக்கினார். 1989 லோக்சபா தேர்தலில், இக்கூட்டணி பெரும்பான்மை பெற்றது. பா.ஜ., ஆதரவுடன், 1989 - 90ல், வி.பி.சிங் பிரதமராக இருந்தார். 2008 நவ., 27ல் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.