புதுடில்லி: கைலாஷ் யாத்திரை செல்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது.இதில் காங்கிரஸ் கட்சியும் மதசார்பற்ற ஜனதா தள மும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியாக ஆட்சி அமைத்துள்ளது. தேர்தல் நேரத்தின் போது காங்., தலைவர் ராகுல் இந்து கோயில்களுக்கு வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் இந்துக்கள் புனித தலமாக கருதும் கைலாஷ் மானசாரோவர் யாத்திரைக்கு செல்ல ராகுல் விருப்பம் தெரிவித்து மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சாதாரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவரது விண்ணப்பத்திற்கு இதுவரை பதில் இல்லை என கூறி உள்ளது.
முன்னதாக யாத்திரை செல்வதற்காக மத்திய அரசால் கடந்த பிப்., மாதம் 21 விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச்23-ம் தேதி கடைசி நாள் என குறிப்பிட்டிருந்தது. இம் மாதம் 8-ம் தேதி துவங்கிய யாத்திரை வரும் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது.