மாணவியை கற்பழித்த இலங்கை அகதி போக்சோவில் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியை கற்பழித்த இலங்கை அகதி போக்சோவில் கைது

Added : ஜூன் 25, 2018
Advertisement

செய்யாறு: மாணவியை கற்பழித்த, இலங்கை அகதி, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, தவசி கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த, 17 வயது மாணவி பிளஸ் 2, தேர்வில் பெயிலாகி மீண்டும், மறு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். அதற்காக, செய்யாறு டவுன் பகுதியில், கணவருடன் வசிக்கும் அக்கா வீட்டில் தங்கி, டியூசன் சென்று படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவி வீட்டில் தனியாக இருந்தார். இதையறிந்த, தமிழர் முகாமை சேர்ந்த உதயன், 36, பெயின்ட் தொழிலாளி, வீட்டுக்குள் புகுந்து, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவேன் என மிரட்டி சென்றார். வீடு திரும்பிய தனது அக்காவிடம், தனக்கு நேர்ந்த கொடுமையைக்கூறி, மாணவி கதறி அழுதார். செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, போக்சோ சட்டத்தின் கீழ், உதயனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X