மேற்குத்தொடரச்சி மலையின் நாயகன் | Dinamalar

மேற்குத்தொடரச்சி மலையின் 'நாயகன்'

Added : ஜூன் 25, 2018 | |
தேனி மாவட்டத்தை சேர்ந்த லெனின் பாரதி இயக்கி, இளையராஜா இசையமைத்து நடிகர் விஜய்சேதுபதி தயாரித்த 'மேற்குத்தொடர்ச்சி மலை' படம் சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றது. பல படங்களில் காமெடி பாத்திரங்களில் கலக்கிய, தேனி அந்தோணிராஜ், இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்தடுத்த படங்களில் வாய்ப்புகள் வரும் நிலையில் தேனி வந்தவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக
மேற்குத்தொடரச்சி மலையின் 'நாயகன்'

தேனி மாவட்டத்தை சேர்ந்த லெனின் பாரதி இயக்கி, இளையராஜா இசையமைத்து நடிகர் விஜய்சேதுபதி தயாரித்த 'மேற்குத்தொடர்ச்சி மலை' படம் சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றது. பல படங்களில் காமெடி பாத்திரங்களில் கலக்கிய, தேனி அந்தோணிராஜ், இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்தடுத்த படங்களில் வாய்ப்புகள் வரும் நிலையில் தேனி வந்தவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக பேசியதிலிருந்து...

* பங்கு பெயர் எப்படிசினிமாத்துறை நண்பர்கள் என்னை 'பங்கு' என உரிமையுடன் அழைப்பர். சொந்த ஊர் பெரியகுளம். படித்தது வளர்ந்தது திண்டுக்கல்லில். திருச்சியில் கல்லுாரி படிப்பை முடித்தேன்.

* சினிமா ஆர்வம்எங்கள் மாவட்டத்தினர் பலர் சினிமாவில் கலக்கி கொண்டுள்ளனர். அவர்களை பார்த்து தான் சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது. பள்ளிக் காலங்களில் நாடகம், நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.

* கல்லுாரி வாழ்க்கைதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில் படித்த போது கலைநிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும். சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வர். ஆடல் பாடல், நகைச்சுவை, நடிப்பு என கல்லுாரி காலம் கடந்தது.

* முதல் பாராட்டுகல்லுாரி கலைநிகழ்ச்சியில் வெற்றி பெற்ற எனக்கு நடிகர் நாசர் பரிசு வழங்குவதாக இருந்தது. ஆனால் இந்த விழாவிற்கு வந்த என் குடும்பத்தினர் வழிதெரியாமல் அலைந்து கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து வருவதற்குள் விழா முடிந்து விட்டது. பரிசு பெறும் வாய்ப்பு தவறியது. இருப்பினும் இயக்குனர்கள் சரண், சுசிகணேசனிடம் விருதுகளை பெற்றுள்ளேன்.

* சினிமா பயணம்கல்லுாரி முடிந்து சென்னை லயோலா கல்லுாரியில் எம்.எஸ்.டபிள்யூ., படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் நடிக்கும் ஆசையில் படிப்பை தவிர்த்து, ஓட்டலில் சர்வராக சேர்ந்தேன். வீட்டிற்கு பணமும் அனுப்பி கொண்டு, சினிமா அலுவலகங்களில் வாய்ப்பு தேடினேன்.

* முதல் பட வாய்ப்புஎஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் 'ஈ' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தேன். ஆனால் அக்காட்சிகள் 'கட்' செய்யப்பட்டன. எவனோ ஒருவன், நேபாளி படங்களில் நடித்தேன். வெண்ணிலா கபடி குழுவில் என் கதாபாத்திரம் பேசப்பட்டது. விமல் நடித்த களவாணி படம் பெயர் பெற்று தந்தது.

* கதாநாயகனான அனுபவம்இயக்குனர் லெனின் பாரதியின் மேற்கு தொடர்ச்சி மலை படம் தமிழக, கேரள எல்லைப்பகுதி தொழிலாளர்களின் வாழ்வியலை பதிவு செய்துள்ளது. அதில் நடித்ததற்கு பெருமைப்படுகிறேன். வழக்கமாக சினிமா படப்பிடிப்பு போல் அல்லாமல் எங்களின் உடல்மொழி, யதார்த்தமான வசனங்களை கொண்டு எடுக்கப்பட்டது. விரைவில் வெளிவரவுள்ளது.

* இந்த பட தயாரிப்பாளர் விஜய் சேதுபதி பற்றிவெண்ணிலா கபடி குழு படத்தில், நானும் விஜய் சேதுபதியும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தோம். அப்போது இருந்தே அவருடன் பழக்கம். மேற்குத்தொடர்ச்சி மலை படத்தில் நடிக்க நான் தேர்வு செய்யப்பட்ட போது, இயக்குனரிடம் கஷ்டப்படுகிற நல்ல நடிகன் என ஊக்கப்படுத்தினார்.
வாழ்த்த 98412 62507

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X