''சீனாவில், 'ஆகச்சிறந்த அடிமையாதல் தான் கற்பு' என்று பழமொழி உண்டு. அந்த பழமொழிக்கு சிறந்த உதாரணம் தமிழ்நாட்டு பெண்கள். நம் பெண் குழந்தைகளுக்கு நல்ல உணவு கொடுக்கிறார்களோ இல்லையோ, அடிமை எண்ணத்தை நன்றாக கொடுக்கிறார்கள்...'' என மனம் திறக்கிறார் நடிகை ஆதிரா. கணிதன், அப்பா, ஆறாது சினம், பாம்புச் சட்டை, மருது, ஒரு குப்பைக் கதை, அச்சமில்லை அச்சமில்லை, ஆந்திரா மெஸ், சர்வம் தாளமயம், டூ-லெட் ஆகிய படங்களில் எளிதில் மறக்க முடியாத பாத்திரங்களில் நடித்தவர்.அவருடன் ஒரு நேர்காணல்...
* ஆதிரா என்ற தனி மனுஷிக்குள் ஏன் இவ்வளவு கோபம்?நான் தனி மனுஷியென்று யார் சொன்னது... வாழ்வு முழுவதும் வலியும் வேதனையும் நிறைந்த பெண்களின் தொகுப்பு நான். சமூக கவனத்தில் இருந்து விலகிய, விளிம்பு நிலை மக்களின் பிம்பம் நான். 'நான் யார்' என்ற கேள்வியால் துரத்தப்பட்டு விடை தேடி அலையும் கூட்டத்தின் கடைசியில் நிற்கும் 'கேள்வி' நான்.
* நடிகையாக உங்கள் பங்களிப்பு என்ன?கொஞ்சமாய் படங்கள் என்றாலும் பெயர் சொல்லும் பாத்திரங்களில் நடித்துள்ளேன். இது மட்டுமல்லாது 'ஆதிரா நவீன கூத்துப்பட்டறை' என்ற ஒரு பள்ளியையும் ஆரம்பித்துள்ளேன். அதன் வழியாக நம்முடைய பண்டைய கலைகளான கூத்து, சிலம்பம், தப்பாட்டம், களரி போன்றவற்றை நவீனப்படுத்தி கொண்டிருக்கிறேன்.
* ஒரு நடிகையாக நீங்கள் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக்கொள்ள முடிகிறதா?முடியாது. அதனால் தான் இயக்குனர் அவதாரம் எடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறேன்...நம் ஆண்களிடம் ஒரு 'நல்ல' பழக்கம் இருக்கிறது; அவர்கள் பெண்களுக்கு கொலுசு வாங்கித்தருவது அழகு பார்ப்பதற்கு மட்டுமல்ல, வேவு பார்ப்பதற்கும் தான். எவ்வளவு பெரிய அநியாயம்...?! இது அநியாயம் என்று கூட அறியாத பெண்கள் இன்றும் இருக்கின்றனர். காலக்கொடுமை தான். காலத்தை மாற்ற முடியாது. ஆனால் இந்த கோலத்தை மாற்ற முடியும் என்று நம்பி, நான் இயக்கப் போகும் படம் தான் 'மாதொருபாகன்'.
* மாதொருபாகன் என்ன செய்யும்?இந்தப் படம் இதுவரை நீங்கள் சந்தித்திராத அம்மா-மகன் வாழ்க்கையை உங்களுக்கு காட்டும். ஒவ்வொரு குடும்பப் பெண்ணின் மனசாட்சியையும் உலகத்திற்கு அறிவிக்கும். இது 'பெண்களுக்கான படம்' என்று தவறாக நினைத்து விட வேண்டாம். இது முழுக்க முழுக்க ஆண்களுக்கான படம்!
மேலும் பேச: 95972 27230
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE