நைசா நுழையுது போலி:'பைசா அதிகாரிகள்' ஜாலி!

Added : ஜூன் 25, 2018
Advertisement
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை 'டிவி'யில் பார்த்து கொண்டிருந்த மித்ராவின் வீட்டுக்கு வந்த சித்ரா, ''என்ன மித்து... நான் வந்தது கூட தெரியாமல், புட்பால் பார்த்து கொண்டிருக்கிறாய்?'' என்றாள்.''சாரிங்க்கா... ஜெர்மனி கடைசி நிமிஷத்தில், 'கோல்' போட்டு, ஜெயிச்சது ரொம்ப 'த்ரிலிங்கா'இருந்தது. அதான், பார்த்துட்டு இருந்தேன்,'' என்று சொன்ன மித்ராவிடம், ''அட... விடுப்பா.
 நைசா நுழையுது  போலி:'பைசா அதிகாரிகள்' ஜாலி!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை 'டிவி'யில் பார்த்து கொண்டிருந்த மித்ராவின் வீட்டுக்கு வந்த சித்ரா, ''என்ன மித்து... நான் வந்தது கூட தெரியாமல், புட்பால் பார்த்து கொண்டிருக்கிறாய்?'' என்றாள்.''சாரிங்க்கா... ஜெர்மனி கடைசி நிமிஷத்தில், 'கோல்' போட்டு, ஜெயிச்சது ரொம்ப 'த்ரிலிங்கா'இருந்தது. அதான், பார்த்துட்டு இருந்தேன்,'' என்று சொன்ன மித்ராவிடம், ''அட... விடுப்பா. இது சகஜம்தானே. இதென்ன காலில் கட்டுப்போட்டிருக்கிறே,'' என்று சித்ரா பதட்டமானாள்.''நேத்து, மாடிப்படியில், கால் ஸ்லிப்' ஆயிடுச்சு. அதுக்குத்தான், கட்டு,''''இப்ப பரவாயில்லையா?'' சித்ரா கேட்டது, ''ம்..ம்... இதுக்கே இப்படி சொல்றீங்க. காலில் காயமே இல்லையேனு சொல்லிட்டு திரும்பி போயிட்டாங்களாம்,'' மித்ரா சொன்னதும், ''உளறாமல், புரியற மாதிரி சொல்லுடீ, '' என்றாள் சித்ரா.''ரெண்டு நாளைக்கு முன்னாடி, கலெக்டர் ஆபீசுக்கு, 108 ஆம்புலன்ஸ் வேகமாக வந்துட்டு, அதே வேகத்துல திரும்பி போயிருச்சு... என்னனு விசாரிச்சப்ப, நாலாவது மாடியில வேலை பார்க்கற அலுவலர் நடந்து வரும் போது, 'போர்டிக்கோ' படிக்கட்டுல தடுக்கி விழுந்துட்டாரு. ''போலீஸ்காரங்க, 108க்கு தகவல் கொடுத்திருக்காங்க. வேகமாக வந்த ஆம்புலன்ஸ் பணியாளர், 'காயமே இல்லையே. நல்லா நடந்து வர்றாரு,'ன்னு சந்தேகமா கேட்டிருக்காரு,'''டென்ஷன்' ஆன அந்த அலுவலர், 'அரை மணி நேரம் உட்கார்ந்து இருந்துட்டு நானே போய்க்கறேன்னு சொன்னதும், 108 ஊழியர்கள், சட்டென்று போயிட்டாங்களாம். இதைப்பார்த்துட்டு, மருத்துவ ஊழியர்கள், பொறுமையா இருக்க வேண்டாமா? ஏன்தான் இப்படி கோபப்படறாங்களோ?ன்னு, பக்கத்துல நின்னவங்க சத்தம் போட்டுருக்காங்க,''என்று விளக்கினாள் மித்ரா.''கமிஷனருக்கு தெரியாம எத்தனையோ விஷயம் நடக்குது. உனக்கு தெரியுமா,'' என்று கொக்கி போட்டாள் சித்ரா.''ஏங்க்கா.... அப்படி என்ன நடந்திருச்சு '' என்று ஆர்வமானாள் மித்ரா.''கார்ப்ரேஷன் கடைசி மண்டலத்துல, குளம் இருக்கற வார்டுக்குள்ள, 'சைட்' பிரிச்சிருக்காங்க. அப்ரூவலுக்கு, 10 'ல' கேட்டாங்களாம். 'சைட்'காரங்க, கொடுக்காததால், வியாபாரம் நின்னுடுச்சாம். ஆனா, கமிஷனர் 'லீவில்' போயிருந்தப்ப, மத்த அதிகாரிகள் விளையாடிட்டாங்களாம்''''அதிகாரியோட பங்காளியா 'சிட்டி'யில் இருக்கிற 'சாமி' பேச்சு நடத்தி, 'சைட் ஓனர்'கிட்ட, 'வைட்டமின் ப' வாங்கிட்டாராம். அதிகாரிகளுக்கு 'கிள்ளி' கொடுத்துட்டு, மீதியை போட்டு தாக்கிட்டாராம். கமிஷனர் நிறுத்தி வச்சிருந்த வேலைய, அவர் இல்லாத நேரத்துல 'ஓகே' பண்ணி கொடுத்திருக்காங்க,''''சிட்டியில், என்ன நடக்குதுனே தெரியல! எங்களுக்கே தெரியாம வேலைய முடிச்சுக்கிட்டாங்களே,''அந்த வார்டு ஆளுங்கட்சிக்காரங்க 'லபோ திபோ'ன்னு அடிச்சுக்கறாங்களாம்,'' என்றாள் சித்ரா.''இவங்களை 'பழனி' 'முருகன்' தான் காப்பாத்தணும்,'' என்று சிரித்து கொண்டே, தலைக்கு மேல் கும்பிடு போட்டவாறே, சமையலறைக்குள் சென்றாள் மித்ரா.''இந்தக்காலை வைச்சுட்டு, அங்கே ஏன் போற? அம்மா எங்கே?''என, சித்ரா கேட்டதும், ''அம்மா.. வெளியே போயிருக்காங்க. இருங்க... டீ வைச்சுட்டு வர்றேன்,'' என்றாள் மித்ரா.''இரு... இரு.. நானும் வர்றேன்,'' என்ற சித்ரா, ''சனிக்கிழமையில், கலெக்டர் ஆபீைஸ ஸ்பெஷலா கவனிக்க வேண்டியிருக்குனு போலீஸ்காரங்க புலம்பறாங்க,'' என்றாள் மித்ரா.''அந்தன்னைக்கு லீவுதானே. யாரும் வர மாட்டாங்களே,'' என்றாள் சித்ரா.''அதானே விஷயமே. எம்ப்ளாய்மென்ட் ஆபீசில், போட்டி தேர்வுக்கு பயிற்சி நடக்குது. அதுக்காக வர்ற சிலர், படிக்கறோம்னு சொல்லி, ஆட்கள் நடமாட்டம் இல்லாத, 7 வது மாடிக்கு, ஜோடியா படிக்க போயிடறாங்க''''இதைப்பத்தி, போலீசார் கேட்டா, 'படிக்க போகிறோம்'ன்னு பதில் சொல்றாங்களாம். படிக்கறவங்க, எம்பிளாய் மென்ட் ஆபீசுல இருக்கற 'ஸ்டடி' ரூம்ல உட்கார்ந்து படிக்கலாம். எதுக்கு அங்க போறாங்க'ன்னு, 'லேடி'ஆபீசருங்க கோபமா இருக்காங்க''''கலெக்டர்கிட்ட சொல்லி, 'ஏழாவது மாடியில இப்போதைக்கு குளோஸ் பண்ணி வைக்கணும். இல்லாட்டி, ஏதாவது 'ஏழரை'யை பண்ணிடுவாங்க'ன்னு, கலெக்டர் ஆபீஸ் ஸ்டாப் பேசிக்கறாங்களாம்,'' என்றாள் மித்ரா.மீண்டும் ஹாலுக்கு வந்து, சோபாவில் அமர்ந்து, கால்பந்து 'ைஹலைட்சை' இருவரும், பார்க்க துவங்கினர். ''கோவில் நிலங்கள் மீட்கும் விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனம் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே வருது பார்த்தியா?'என்றாள் சித்ரா. ''அக்கா... எந்தக்கோவில் 'லேண்ட்' பத்தி சொல்றீங்க?'' என்றாள் மித்ரா.''அவிநாசிகிட்ட இருக்கிற சேவூர் அனுமந்தராயர் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. இதை மீட்டு கோவிலுக்கு சேர்ப்பதில், அறநிலையத்துறையினர் ஆர்வம் காட்டறதில்லையாம். ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள், 'எந்த லெவலுக்கும்' இறங்க தயாராகிட்டாங்களாம்,''''இந்த விசாரணை, இப்போ டி.ஆர்.ஓ., விடம் போயிருக்கு. போன வாரம் விசாரணை நடந்த போது, 'இதில், டி.ஆர்.ஓ., விசாரிக்க அதிகாரமில்லை'ன்னு, ஒரு மனுவை ஆக்கிரமிப்பாளர்கள் கொடுத்திருக்காங்க. இதற்கு உரிய பதில் தர, கோவில் தரப்பில் யாருமே இல்லையாம். இதனால, மறுபடியும் விசாரணையை ஒத்தி வைச்சிருக்காங்களாம்,'' சித்ரா, படபடவென்று கோபமாக பேசினாள். ''தெய்வம் நின்று கொல்லும் சொல்றாங்க. இது விஷயத்துல, என்ன நடக்குதுன்னு, பார்க்கலாங்க்கா,'' என்றாள் மித்ரா.அதற்குள் டிவியில், எண்ணெய் விளம்பரம் ஒளிபரப்பாகவே, ''மறந்தே போச்சு. சமீபத்தில் கலப்பட எண்ணெய் பிடிபடுவது ஜாஸ்தியாக இருக்குது பாத்தியா,'' என்றாள் சித்ரா. ''ஆமாங்க்கா. 'வாட்ஸ்அப்'பில், 'கம்ப்ளைன்ட்' செய்யறதால, நிறைய பேர், ரகசியமாக தகவல் அனுப்பறாங்களாம். இது நல்ல விழிப்புணர்வு தான்,'' என்றாள் மித்ரா. ''ெஷரீப் காலனியில் போலி எண்ணெய் விற்பனை நடந்திருக்கு. இது குறித்து திருப்பூர் மாவட்ட அலுவலர்களுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். சென்னைக்கு புகார் சென்று, அங்கிருந்து திருப்பூருக்கு பார்வர்ட் செஞ்சு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துருக்காங்க. அதுக்கப்புறம், பல்லடம், அவிநாசி... இப்படி, பல பகுதியிலும், கலப்பட எண்ணெய் பெட்டி பெட்டியா சிக்கியிருக்கு,''''பத்து நாளில், 15 ஆயிரம் லிட்டர் பிடிச்சிருக்காங்க இதெல்லாம் எத்தனை வருசமா நடந்துச்சோ?'' என்றாள் சித்ரா. ''ஆமாம். இப்படி பகிரங்கமா ேபாலி எண்ணெயை இப்பதான், பிடிக்கறாங்க. அதிகாரிகளுக்கு தெரியாமலா, போலி வந்திருக்கும்.''''இதுல எவ்வளவு 'மேட்டர்' கைமாறுச்சுனு தெரியல. இனியாவது உஷாராகி, தேங்காய் எண்ணெயில், நடக்கும் 'சல்பர்' கலப்படம் நாளுக்கு நாள் அதிகமாகத்தான் இருக்கு. இதையும், அதிகாரிகள், கவனிச்சா பரவாயில்லையே,'' என்று ஆதங்கப்பட்டாள் மித்ரா.''இன்னும்.. கொஞ்சம் டீ தரட்டா?'' என்ற சித்ராவிடம், ''வேண்டாம்... மித்து. இந்த 'சிட்டி'போலீசில் நடப்பதை கேட்டாலே, 'செம' டென்ஷனா இருக்கு,'' என்றாள் சித்ரா.''ஏன்... அப்படி என்ன நடக்குது,'' என்று கேள்வி கேட்டாள் மித்ரா.''வைட்டமின் 'ப' வாங்கிட்டு, திருடனை தப்பிக்க விட்ட எஸ்.ஐ., ஒருவரை, இதுக்கு முன்னாடி இருந்த கமிஷனர் 'சஸ்பெண்ட்' செய்தார். புது கமிஷனர் வந்தவுடன், அவர் மீண்டும் 'டியூட்டி'யில் சேர்ந்து விட்டார். ''இவர் மேல பல 'கம்ப்ளைன்ட்' இருந்தும், பல ஆண்டுகளாக திருப்பூருக்குள்ளே சுத்திச்சுத்தி வர்றாராம்''''இதைப்பார்த்த மத்த போலீஸ்காரங்க, இந்த மாயக்கண்ணனுக்கு மணி கட்டுறது யாருன்னு, புலம்பறாங்களாம்,'' என்றாள் சித்ரா. ''புது கமிஷனருக்கு இது தெரியாதா?'' என்றாள் மித்ரா.''தெரியுமான்னு தெரியலே. சில இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,கள் சிலர், 'ஏ.சி.,' மூலம், தங்கள் விருப்பப்பட்ட ஸ்டேஷனுக்கு, செல்வதற்கு, ரொம்ப தீவிரம் காட்டறாங்களாம். ''இப்படியே பல வருஷமாக, குப்பை கொட்டுற போலீசாரை பாரபட்சம் பார்க்காமல், 'ரேஞ்ச் டூ ரேஞ்ச்' மாற்றினால் மட்டுமே, நல்லாயிருக்குமுன்னு, பலரும் சொல்றாங்களாம்,'' என்றாள் சித்ரா.''அக்கா.. நான் ஒரு மேட்டர் சொல்றேன் கேளுங்க. கோல்டன் நகர் கே.எஸ்., தியேட்டர் ரோட்டில் கோவில் அருகே, கடந்த சில வாரங்களாக ஒரு 'கிளப்' நடக்குதாம். இதைப்பத்தி தெரிஞ்சும்கூட, போலீசார் அமுக்கமாக இருக்கறாங்களாம். இதுக்காக, மாசாமாசம் 'கரெக்டா' கவனிச்சிடறாங்களாம்,'' மித்ரா சொன்னதும், ''ஓ... அது உனக்கும் தெரிஞ்சிடுச்சா,'' என்றாள் சித்ரா.''இந்த கொடுமையை கேளு மித்து. போலீசார் மக்களின் காவலனா? அல்லது அதிகாரிகளுக்கா?ன்னா தெரியலே. அனுப்பர்பாளையம் பக்கத்துல, தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்துட்டாரு. இதற்கு, மின்வாரிய அதிகாரிகளின் அலட்சிய போக்கால் நடந்ததுன்னு, இறந்தவரின் மனைவி, புகார் கொடுத்தாராம்,'' ''ஆனால், சம்பந்தப்பட்ட ஸ்டே ஷன் அதிகாரி, 'உங்க இஷ்டத்துக்கு எல்லாம் எழுதி கொடுக்கக்கூடாது'ன்னு புகாரை வாங்க மறுத்துட்டு சத்தம் போட்டாராம். 'காவல் துறை உங்கள் நண்பன்'அப்படின்னு எழுதிப்போட்டா மட்டும் போதாது. உண்மையிலே அதுமாதிரி நடந்துட்டா, தேவலை,'' என்று கவலைப்பட்டாள் சித்ரா.''நீங்க சொல்றது சரிதாங்க்கா. போன வாரம், அவிநாசி பைபாஸ் ரோட்டில், டூவீலர் மீது கார் மோதிய விபத்தில், கணவனும், மனைவியும் அநியாயமாக இறந்தனர். விபத்துக்கு காரணமே, பைபாஸ் ரோட்டில், எம்.வி.ஐ., ஆறு வழிச்சாலையில் நின்னுட்டு, சோதனை செஞ்சதால்தான் விபத்து நடந்ததுன்னு, நேரில் பார்த்த பலரும் சொல்றாங்க,'' ''ஆனால், அனுப்பர்பாளையம் போலீசோ, யாரும், அப்படி ஒரு புகார் கொடுக்கவோ இல்லைன்னு, சொல்றாங்க. சட்டத்துக்குள் புகுந்து எப்படி தப்ப வைக்கிறாங்க பாருங்க. இப்படி அதிகாரிங்க இருந்தாக்கா, எங்கே போய் நியாயம் கிடைக்கும்,'' என்று சலித்து கொண்டாள் மித்ரா.அப்போது, மொபைல் போனில் மணியை பார்த்தவாறே, ''ஓ.கே.,ப்பா. டைம் ஆயிடுச்சு. நான் கெளம்பறேன்,'' என்றவாறு, ெஹல்மெட்டுடன், வண்டி அருகில் சென்றாள் சித்ரா. ''ஓ.கே., பை...பை...'' என்றாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X