சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது
ஏழை மாணவரின் மருத்துவர் கனவு

சிவகங்கை: தபால்துறை அஜாக்கிரதையால் சிவகங்கையைச் சேர்ந்த ஏழை மாணவர் பாண்டிச்செல்வத்தின் மருத்துவர் கனவு தகர்ந்தது.

தபால்துறை,  மாணவர், நீட் தேர்வு, மருத்துவ கல்வி




சிவகங்கை அருகே காஞ்சிரங்காலைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வம். வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மகன் வசந்த். பிளஸ் 2 ல் 1,125 மதிப்பெண்கள் பெற்றார். 'நீட்' தேர்வில் 384 மதிப்பெண்கள் பெற்றார். ஓ.பி.சி, பிரிவினர் 96 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி என்பதால், மருத்துவ படிப்பு எளிதில்

கிடைத்துவிடும் என நம்பிக்கையில் இருந்தார். மருத்துவப்படிப்பு விண்ணப்பத்தை ஜூன் 19 க்குள் சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும்.


அவர் ஜூன் 14 ல் காஞ்சிரங்கால் கிளை தபால் நிலையத்தில் விரைவு தபால் மூலம் அனுப்பினார். விண்ணப்பம் 9 நாட்கள் தாமதமாக ஜூன் 23 ல் இயக்குனரகத்திற்கு சென்றதால் நிராகரிக்கப்பட்டது. இதனால் வசந்த் அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து விசாரித்தபோது, சிவகங்கை கலெக்டர் வளாக தபால்நிலையத்தில், தபாலை தாமதமாக அனுப்பியது தெரியவந்தது. தபால்துறைஅதிகாரிகள் அஜாக்கிரதையால் ஏழை மாணவரின் மருத்துவர் கனவு பறிபோனது.


வசந்த் தாயார் ஞானஜோதி கூறுகையில், 'மருத்துவ கல்வி இயக்குனரக 'ஆன்லைனில்' பார்த்தபோது விண்ணப்பம் செல்லவில்லை என வந்தது. ஜூன் 18 ல்

Advertisement

கேட்டபோது, இணையம் செயல்படவில்லை. தபால் சென்றுவிடும் என அதிகாரிகள் கூறினார். ஆனால் தாமதமாக அனுப்பி மகனின் வாழ்க்கையை வீணாக்கிவிட்டனர்,' என்றார்.


தபால்நிலைய அதிகாரி திருக்குமரன் கூறுகையில், 'விரைவுத் தபாலை பதிவு செய்த ஊழியர் தவறு செய்துள்ளார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை,' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Iyer - Austin,இந்தியா
27-ஜூன்-201804:35:05 IST Report Abuse

Hari Iyerநீதிமன்றம் சென்றால் வெற்றி கிடைக்காது. வழக்கை நீட்டி நீட்டி சாகடித்து விடுவார்கள். மருத்துவ ஐயாக்குநரை பார்த்து சொல்லி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' தபால் இயக்குனர் மருத்துவ இயக்குனருக்கு கடிதம் எழுதவேண்டும். அரசியல் தலைவர்களிடம் போனால் காசு கொடுக்க வேண்டியது வரலாம். என்ன செய்தார்கள் என்ன பதில் கிடைத்தது என்பதை மீடியாக்களில் தெரிவிக்கவும்.

Rate this:
27-ஜூன்-201802:50:07 IST Report Abuse

ருத்ராமற்றவர்களின் பொறுப்பற்றதன்மைக்கு இளைஞரின் எதிர்காலம் பலியாகக்கூடாது. அரசு இவர் விஷயத்தில் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
27-ஜூன்-201800:25:07 IST Report Abuse

Mani . Vஇது வேண்டுமென்றே திட்டமிட்டு தாமதப்படுத்தப்பட்ட நிகழ்வு. இனி தமிழர்களுக்கு (வருங்கால கொத்தடிமைகளுக்கு) உயர்கல்வி கிடைக்கவே விடமாட்டார்கள்.

Rate this:
மேலும் 52 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X