ரகசியமாக, கங்காணியை தூக்கியது விஜிலென்சு...ராத்திரியில் தூள் கிளப்பியது பட்டாசு!| Dinamalar

ரகசியமாக, 'கங்காணி'யை தூக்கியது விஜிலென்சு...ராத்திரியில் தூள் கிளப்பியது பட்டாசு!

Added : ஜூன் 26, 2018
Share
காய்ச்சலில் பாதிக்கப்பட்ட அம்மாவுக்குத் துணையாக, வீட்டிலேயே இருந்தாள் மித்ரா; அவளைப் பார்க்க வந்த சித்ரா, அம்மாவின் உடல்நிலையை விசாரித்தபடி, உள்ளே நுழைந்தாள்.''பரவாயில்லைக்கா...மாடியில 'ரெஸ்ட்' எடுக்குறாங்க; நான் பொழுது போகாம, 'டிவி' பார்த்துட்டு இருக்கேன்'' என்று, சேனலை மாற்றினாள் மித்ரா.அதில் வந்த 'மருதமலை' காமெடி காட்சியைப் பார்த்ததும் சித்ரா
 ரகசியமாக, 'கங்காணி'யை தூக்கியது விஜிலென்சு...ராத்திரியில் தூள் கிளப்பியது பட்டாசு!

காய்ச்சலில் பாதிக்கப்பட்ட அம்மாவுக்குத் துணையாக, வீட்டிலேயே இருந்தாள் மித்ரா; அவளைப் பார்க்க வந்த சித்ரா, அம்மாவின் உடல்நிலையை விசாரித்தபடி, உள்ளே நுழைந்தாள்.''பரவாயில்லைக்கா...மாடியில 'ரெஸ்ட்' எடுக்குறாங்க; நான் பொழுது போகாம, 'டிவி' பார்த்துட்டு இருக்கேன்'' என்று, சேனலை மாற்றினாள் மித்ரா.அதில் வந்த 'மருதமலை' காமெடி காட்சியைப் பார்த்ததும் சித்ரா கேட்டாள்...''மித்து...நம்ம மருதமலையில, சிறுத்தை நடமாட்டம்னு சொன்னாங்க...பிடிச்சிட்டாங்களா?''''இருந்தால் தான பிடிக்கிறதுக்கு...கோவிலுக்கு வர்ற பக்தர்கள் பல பேரு, படிக்கட்டுலயும், பஸ் போற மலைப்பாதையிலயும் நடந்தே போறாங்களாம். வண்டிக்கு கலெக்ஷன் குறையுதுன்னு, இப்பிடி பீதியைக் கிளப்பி விட்ருக்காங்க'' என்றாள் மித்ரா.''அங்க எதை எடுத்தாலும் காசு தான்...யாராவது பக்தர்கள், ஏதாவது பொருள் செஞ்சு கொடுத்தா, அதைக் காமிச்சே, பல லட்ச ரூபா கலெக்ஷனைப் போட்டுர்றாங்களாம்; அன்னதானம் பண்ணப்போனா, 'வேண்டாம்; அதுக்குப் பதிலா காசைக் கொடுங்க'ன்னு கட்டாயப்படுத்துறாங்களாம்'' என்றாள் சித்ரா.''அங்க 'பேஷ்' ஆன பொறுப்புல இருக்குற ஒருத்தருதான், இதுக்கெல்லாம் காரணம்னு சொல்றாங்க; ஆனா, அவரை மாத்தவே மாட்டேங்கிறாங்களே!'' என்றாள் மித்ரா.''நம்ம ஊர்ல தப்பை தைரியமா செய்யலாம்; தப்பா எதையும் சொல்லத்தான் பயப்படணும்,'' என்றாள் சித்ரா.''என்னக்கா...புது தத்துவம் சொல்ற?'' என்று கேட்டாள் மித்ரா.''ஆமா மித்து...கேரளாவுல 30 கோடி ரூபா மோசடி பண்ணுன ஒருத்தரு, ஆளுங்கட்சியில முக்கிய பொறுப்புல இருக்காராம். மேட்டுப்பாளையத்துல இருக்குற அவரை 'அரெஸ்ட்' பண்றதுக்கு, 'வாரன்ட்'டோட கேரளா போலீஸ் வந்திருக்காங்க. ஆனா, 'லோக்கல் போலீஸ்' சுத்தமா ஒத்துழைப்பு இல்லியாம்,'' என்றாள் சித்ரா.''அது சரி...தப்பா சொன்னது யாரு?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் மித்ரா.''குறிச்சி குளத்துக்கு தண்ணி வராததுக்குக்காரணம் இதுதான்னு 'வாட்ஸ் ஆப்'ல ஒரு தகவலைப் பரப்புனார்னு, சுரேஷ் குமார்னு ஒருத்தரை 'அரெஸ்ட்' பண்ணுனாங்களே...அவருதான்... இன்ஜினியரிங் முடிச்சிட்டு, பாங்க் எக்ஸாம் எழுதி, பாஸ் பண்ணி, வேலை கிடைச்ச நேரத்துல, 'அரெஸ்ட்' ஆனதால, வேலையில சேர முடியலையாம்!'' என்றாள் சித்ரா.''அவரு...மதுக்கரை பிஜேபி இளைஞரணி தலைவரா இருக்கார்ங்கிறாங்க...எப்பிடி இவ்ளோ தைரியமா 'அரெஸ்ட்' பண்ணுனாங்க... இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியும், எதுவும் நடக்கலையா?'' என்று கேட்டாள் மித்ரா.''ஒண்ணும் ஆகலை...'அரெஸ்ட்' பண்ணி, 'ரிமாண்ட்' பண்ணிட்டாங்க. அவரு சொன்ன 'மெசேஜ்' தப்பா இருக்கலாம்; ஆனா, குளத்துக்கு தண்ணி வரலைங்கிற ஆதங்கத்துல தான அதைப் போட்ருக்காரு. அவரை ஏன் மன்னிச்சு விடக்கூடாதுன்னு கேக்குறாங்க,'' என்றாள் சித்ரா.''நம்மூருல நல்ல விஷயத்துக்கு தான் போலீஸ் ஒத்துழைப்பு கெடைக்காது; புட்சேப்டி ஆபீசரம்மா, ஊருக்குள்ள ஏதாவது நல்லது பண்ணனும்னு முயற்சி பண்றாங்க...ஆனா, அவுங்களுக்கு போலீஸ், கார்ப்பரேஷன் எந்த டிபார்ட்மென்ட்டும் சுத்தமா ஒத்துழைக்கிறது இல்லியாம்.குறிப்பா, 'குட்கா' மேட்டர்ல, போலீஸ் ஒத்துழைப்பு இல்லாம, அவுங்களால 'ரெய்டு' போகவே முடியாது. இந்தம்மா எப்போ கூப்பிட்டாலும், போலீஸ் வர்றதே கிடையாதாம்!'' என்றாள் மித்ரா.''விசாரணைக்குக் கூப்பிட்டு, சரியான நேரத்துக்கு வரலைன்னு, நம்ம ஜி.எச்.,டீனுக்கு எதிரா 'ஹியூமன் ரைட்ஸ் போரம்'ல 'எக்ஸ்பார்ட்டி' தீர்ப்பு கொடுத்துட்டாங்களாமே!'' என்று கேட்டாள் சித்ரா.''முதல்ல அப்பிடித்தான் தகவல் வந்துச்சு...அவரைப் பத்தி, டாக்டர் கொடுத்த புகாரை விசாரிச்சப்போ, 'டீன்' கொஞ்சம் 'லேட்'டா போயிருக்காரு. அதுக்குள்ள 'எக்ஸ் பார்ட்டி' உத்தரவு போடத் தயாராயிட்டாங்களாம்.ஆனா, ஜி.எச்.,ல கேன்டீன் நடத்துற ஒருத்தரு, அங்க போயி, 'எப்பிடி நீங்க டைம் கொடுக்காமப் போச்சு'ன்னு பயங்கரமா 'சவுண்ட்' விட்டாராம். அப்புறம், வேற வழியில்லாம, வீட்டுக்குப் போயிட்ட 'டீனை' கூப்பிட்டு, மறுபடியும் 'என்கொயரி' பண்ணிருக்காங்க'' என்றாள் மித்ரா.''இது எனக்குத் தெரியாதே...ஆனா, 'டீன்' ஆதரவுல, அந்த 'கேன்டீன்'காரரு, 'டான்' மாதிரி ஆதிக்கம் பண்ணிட்டு இருக்கார்னு கேள்விப்பட்டேன்,'' என்றாள் சித்ரா.சிறையில் இருந்த வடிவேலுக்கு ஜாமின் கிடைக்காத காட்சி, 'டிவி'யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.''அக்கா...விஜிலென்ஸ்ல மாட்டுன கார்ப்பரேஷன் பில் கலெக்டர் மாலாவுக்கு, ஜாமின் கிடைச்சிருச்சு. லீவு நாளன்னிக்கு, அந்தம்மாவுக்கு ஒரு லேடி ஆபீசர் தான் கூப்பிட்டு, ஆபீசுக்குப் போகச் சொல்லி கட்டாயப்படுத்திருக்காங்க. காலையில 6:00 மணியில இருந்து 10:00 மணி வரைக்கும், அந்த ஆபீசர், இந்தம்மாவை எத்தனை தடவை கூப்பிட்டாங்கன்னு, 'கால் லிஸ்ட்'ல தகவல் கிடைச்சிருச்சாம்,'' என்றாள் மித்ரா.''அப்பிடின்னா, 'கால் லிஸ்ட்'டை வச்சே, எல்லாத்தையும் கண்டு பிடிச்சிடலாமே,'' என்றாள் சித்ரா.வெளியே பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதும் மித்ரா தொடர்ந்தாள்...''நம்மூர்ல வெஸ்ட் ஆர்.டி.ஓ., ஆபீஸ் முன்னால, போன வியாழக்கிழமை ராத்திரி திடீர்னு பட்டாசு வெடிச்சாங்க தெரியுமா?''''அங்க எதுக்குடி பட்டாசு வெடிச்சாங்க?''''அந்த ஆபீஸ்ல 'கங்காணி' வேலை பார்த்த ஒருத்தரை, பண்ணாரி செக்போஸ்ட்டுக்கு மாத்திட்டாங்க,''''அதுக்கெல்லாமா பட்டாசு வெடிப்பாங்க?''''பொறுமையா கேளுக்கா...அவரு காசும் வலுவா வாங்குவாராம்...நல்லா சட்டமும் பேசுவாராம்; வர்ற எல்லா பேப்பரையும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி திருப்பி அனுப்புவாராம்...போன வாரம் வியாழக்கிழமை காலையிலதான், அவரு பண்ணாரி செக்போஸ்ட்ல 'ஜாயின்' பண்ணிருக்காரு.அன்னிக்கு 'நைட்'டே, ரகசியமா கண்காணிச்ச விஜிலென்ஸ் போலீஸ்காரங்க, ரெண்டு லட்சத்து 64 ஆயிரம் ரூபா, கணக்குல காட்டாத பணத்தோட அவரை துாக்கிட்டாங்க. அதுக்கு தான் இந்த பட்டாசு!''''துாய்மை நகரங்கள் பட்டியல்ல, இந்த வருஷம் பத்துக்குள்ள வந்திருந்தா, நம்ம கார்ப்பரேஷன் ஆபீஸ்லயும் பட்டாசு வெடிச்சிருப்பாங்க'' என்றாள் சித்ரா.''அப்பிடித்தான் நம்பிட்டு இருந்தாங்க. டாக்குமென்டேஷனும் 'பக்கா'வா பண்ணீட்டாங்களாம். ஆனா, குப்பை அள்ளுறதுல ஊழல் குறையலை; குப்பையும் குறையலை. அதனால தான், மேல, கீழ போகாம, 16வது இடத்தைத் தக்க வச்சுக்கிட்டாங்க'' என்றாள் மித்ரா.''ஆளுங்கட்சியோட செல்லப்பிள்ளையா வலம் வந்த சவுத் ஏ.சி.,ரவி, வர்ற 30ம் தேதி 'ரிட்டயர்டு' ஆகுறாரு. அவரோட 'போஸ்ட்டிங்'கை பிடிக்க கடுமையான போட்டி ஆரம்பிச்சிருச்சு.அதே மாதிரி, கிழக்கு, மேற்குல பல வருஷமா 'ஏசி'யா இருக்குற 'ரெவின்யூ' டிபார்ட்மென்ட் ஆபீசர்களை மாத்திட்டு, கார்ப்பரேஷன் ஆபீசர்களுக்கு வாய்ப்பு தரணும்கிற கோரிக்கையும் வலுவாயிருக்கு'' என்றாள் சித்ரா.''அக்கா...நம்மூர்ல குடி தண்ணி வினியோகத்தை, பிரான்ஸ் கம்பெனிக்கு மொத்தமா குத்தகைக்கு விட்டுட்டாங்கன்னு, 'சோஷியல் மீடியா'வுல தகவல் பரவிட்டு இருக்கே...உண்மையா?'' என்று கேட்டாள் மித்ரா.''அதுல கொஞ்சம் உண்மையும் இருக்கு; அந்த 'ஸ்கீம்'ல நிறைய நன்மையும் இருக்கு!'' என்றாள் சித்ரா.''கார்ப்பரேஷன் சார்புலயே, அதை விரிவா விளக்குனா நல்லாருக்கும்!'' என்றாள் மித்ரா.''மித்து...நம்ம ஊர்ல புது விதமான பிஸினஸ் துவங்கிருக்கு...அரசு உதவி பெறும் பள்ளிகளை எல்லாம் மூடி, அந்த இடங்களை விக்கிறதுக்கு வேலை நடக்குது. திருச்சி ரோட்டுல 60 வருஷம் பழமையான 'எய்டடு ஸ்கூல்'ல போதுமான 'அட்மிஷன்' இல்லைன்னு காரணம் காட்டி, மூட முயற்சி நடக்குது!'' என்றாள் சித்ரா.அதைக் கவனிக்காத மித்ரா, அலைபேசி அழைப்பை ஏற்று, ''ராஜலட்சுமி! நீ சாயங்காலம் வீட்டுக்கு வர்றியா...நேர்ல பேசுவோம்'' என்று கூறி விட்டு, சித்ராவிடம் பேச்சை தொடர்ந்தாள்...''தி.மு.க., நிர்வாகிகள் மாற்றத்துல, தொண்டர்கள் கடுமையான அதிருப்தியில இருக்காங்க. ஆளுங்கட்சியோட 'டை அப்'ல இருக்குறவுங்களுக்கு இப்பிடி பொறுப்பைக் கொடுத்துட்டாங்களேன்னு கொந்தளிக்கிறாங்க''''அதை அவுங்க தளபதி கிட்ட சொல்றதுக்கு போனப்பதான், 'நான்தான் அவுங்களை மாத்துனேன்; என்கிட்டயே புகார் சொல்ல வர்றீங்களா'ன்னு கேட்டு, முகம் கொடுத்தே பேசலையாம். போனவுங்க, நொந்து நுாடுல்ஸ் ஆகி திரும்பிருக்காங்க'' என்றாள்.''சாரி...நீ வந்ததுல இருந்து, பேசிட்டே இருந்துட்டேன்...ரெண்டு பேருக்கும் 'டீ' போட்டு எடுத்துட்டு வர்றேன்,'' என்று அடுக்களைக்குள் நுழைந்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X