Congress, Gandhis 'mentality' hasn't changed since Emergency: PM Modi | அவசர நிலை பிரகடனம் காங்., செய்த மாபெரும் பாவம்: பிரதமர் மோடி சரமாரி குற்றச்சாட்டு Dinamalar
பதிவு செய்த நாள் :
மாபெரும் பாவம்!
அவசர நிலை பிரகடனம் காங்., செய்த...
பிரதமர் மோடி சரமாரி குற்றச்சாட்டு

மும்பை: ''அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது, காங்., செய்த மாபெரும் பாவம்; ஒரு குடும்பத்துக்காக, அரசியலமைப்பு சாசனம் தவறாக பயன்படுத்தப்பட்டது,'' என, பிரதமர் நரேந்திர மோடி, கடுமையாக சாடியுள்ளார்.

அவசர நிலை,பிரகடனம்,காங்., பாவம் , பிரதமர் மோடி,


கடந்த, 1975ல், காங்.,கைச் சேர்ந்த, அப்போதைய பிரதமர், இந்திரா ஆட்சியில், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த சம்பவம் நடந்து, 43 ஆண்டுகள் ஆனதை நினைவு படுத்தும் வகையில், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நேற்று, பா.ஜ., ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

சுயநலம்


அப்போது, மோடி பேசியதாவது:காங்., கட்சியால், 43 ஆண்டுகளுக்கு முன், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் மூலம், அக்கட்சி, நாட்டு மக்களுக்கு மாபெரும் பாவம் செய்து விட்டது. அந்த சமயம், குறிப்பிட்ட ஒரு குடும்பத்திற்காக, அரசியல் சாசனம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது.

அவசர நிலையின்போது, அந்த குடும்பத்தின் சுயநலத்துக்காக, ஒட்டுமொத்த நாடும், சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அவசர நிலையின் போதும், தற்போதும், காங்., மனநிலையில் மாற்றம் எதுவும் காணப்படவில்லை. பா.ஜ., ஆட்சியில், நீதித்துறையில் பிரச்னை உள்ளதாகவும், ஊடகவியலாளர் தாக்கப்படுவதாகவும், எதிர்க்கட்சிகள் கிளப்பி விடும் புகார்களில் துளியும் உண்மை இல்லை.

மாறாக, அவசர நிலையின்போது, நீதிபதிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகினர். நீதித்துறையின் மாண்பு சீரழிக்கப்பட்டது. அந்த காலத்தில், பிரபல பாலிவுட் பாடகர், கிஷோர் குமார், காங்.,கிற்காக பாட மறுத்தார். அதனால், ரேடியோவில், அவரது பாடல்களை ஒலிபரப்ப அனுமதி மறுக்கப்பட்டது; அரசுக்கு எதிராக எழுத, பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஜனநாயகத்தின் மீது விழுந்த கரும்புள்ளியாக, அவசர நிலை உள்ளது. அவசர நிலை தினம், ஒரு கறுப்பு தினம் என கூறப்படுவது, காங்.,கை விமர்சிப்பதற்காக மட்டும் அல்ல. அவசர

நிலையின்போது, நாட்டில் எத்தனை கொடுமைகள் நிகழ்ந்தன என்பதை இக்கால தலைமுறையினரும், வருங்கால சமுதாயமும் தெரிந்து, ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாக்க வேண்டும்.

தற்போதைய ஆட்சியில், அரசியல் சாசனம், தலித்துகள், சிறுபான்மையினர் ஆபத்தில் இருப்பதாக, காங்., பொய் தகவல்களை பரப்பி வருகிறது. அப்படிப்பட்ட, காங்கிரசால், ஒருபோதும் வளர்ச்சி அடையவே முடியாது.சுயநலத்துக்காக, அதன் தலைவர்கள், தங்கள் கட்சியையே அழித்து விட்டனர்.

ஆட்சி அதிகார போதை, ஒரு குடும்பத்தின் மீது, முட்டாள் தனமான அர்ப்பணிப்பு ஆகிய வற்றால், நாட்டையே சிறைச்சாலையாக மாற்ற முடியும் என்பதை, நம்மால் கனவிலும் நினைத்து பார்க்க இயலாது. அவசர நிலையின்போது, பெரிய தலைவர்கள் அனைவரும், சிறையில் அடைக்கப்பட்டனர்; நாடு முழுதும் மக்கள் மத்தியில் அளவுகடந்த பீதி நிலவியது.

ஒரு குடும்பம், அரசியல் சாசனத்தை எவ்வாறு முறைகேடாக பயன்படுத்தியது என்பதை விவரிக்க, இதைவிட சிறந்த உதாரணம் எதையும் நம்மால் சொல்லவே முடியாது.காங்.,கும், அந்த குடும்பமும், அதிகாரத்தை இழக்கும்போதெல்லாம், நாடு கஷ்டமான சூழலில் சிக்கியிருப்பதாகவும், நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும், அதன் தலைவர்கள் கதறி ஓலமிடுவர்.

கண்டன தீர்மானம்


காங்., தலைவர்களுக்கு எதிராக, 'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், சமீபத்தில் குற்றச்சாட்டுகள் பதியப்பட்ட போது, நீதித்துறையை அச்சுறுத்தும் வகையில், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, கண்டனத் தீர்மானம் கொண்டு வர, காங்., முயன்றது.

லோக்சபாவில், 400 இடங்களில் இருந்து, 44 இடங்களை பெற்ற கட்சி யாக, காங்., சுருங்கிப் போனதை அடுத்து, மின்னணு ஓட்டு இயந்திரங்கள் மீதும், தேர்தல் கமிஷனின் செயல்பாடு பற்றியும், பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த, கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில், ம.ஜ.த.,வுடன் சேர்ந்து ஆட்சிஅமைத்த பின், ஓட்டு இயந்திரம் பற்றி, காங்., கேள்வி எழுப்புவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளி, கல்லுாரி பாடத்தில் அவசர நிலை உண்மைகள்


அவசர நிலை கால உண்மைகளை, பள்ளி, கல்லுாரி பாடப் புத்தகங்களில் சேர்க்க திட்டமிட்டு உள்ளதாக,

Advertisement

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நேற்று, அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: அவசர நிலை, ஜனநாயகத்தில் ஓர் கரும்புள்ளி. அதுபற்றிய முழு உண்மைகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவசர நிலை காலத்தில் நிகழ்ந்த கொடுமைகளை, வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், பள்ளி, கல்லுாரி பாட புத்தகங்களில், தக்க மாற்றம் செய்யப்படும்.

எந்தவொரு பொது விஷயத்துக்காகவும் அல்லாமல், ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, அவசர நிலையை, அப்போதைய, காங்., பிரகடனப்படுத்தியது.

கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில், பிரகடனப்படுத்தப்படாத அவசர நிலை நிலவுவதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளில் உண்மை கிடையாது. தற்போதைய அரசில், மக்கள் முழு சுதந்திரத்துடன் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

'உலக பொருளாதாரத்தில் பேரொளியாக திகழும் இந்தியா'

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் ஆண்டு கூட்டத்தில், பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்; அவர் பேசியதாவது: நாட்டின் பொருளாதாரம் சார்ந்த அடிப்படை விஷயங்கள் பலமாக உள்ளன. உள்நாட்டு பொருளாதாரம், 170 லட்சம் கோடி ரூபாயாக திகழ்கிறது. இதனால், நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 7.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக பொருளாதாரத்தில், பிரகாசிக்கும் பேரொளியாக, நம் நாடு உருவெடுத்துள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து, கடுமையாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், நாட்டின் பணவீக்க விகிதம், கட்டுக்குள் உள்ளது. நிதி நிலையை பலப்படுத்துவதில், அரசு உறுதியாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
29-ஜூன்-201821:07:32 IST Report Abuse

Poongavoor RaghupathyModiji seems to be afraid of Congress. Modiji is nowadays in most of the meetings talking about past Congress rulings in the Country. Is it not wise Modiji starts taking more on his promises to our People and what are his action plans to fulfill his own promises.Further in his ridiculing talks about Nehru he is giving false information about Bhagath Singh and Army Generals.As a Prime Minister of our Nation we do not expect false information from him to our people. Instead of emphasizing his party's actions he is bringing in old history with wrong information about Congress rule. We all know that as Congress became inefficient and corrupt Modiji was voted to power. It is welcome if Modiji talks about his PLAN-DO-CHECK-ACT on his promises to our people.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
27-ஜூன்-201817:40:22 IST Report Abuse

ganapati sbநேருவுக்கு பின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராய் இருந்த வரை நேர்மையாய் இருந்த தேசிய அரசியல் இந்திரா காந்தியின் சுயநலத்தால் சீர் கெட்டது ராஜாஜிக்கு பின் காமராஜர் வரை நேர்மையா இருந்த தமிழக அரசியல் கருணாநிதியின் சுயநலத்தால் சீர் கெட்டது வாஜ்பாயால் துளிர்த்த நல் மாற்றத்திற்கான நம்பிக்கை இந்திரா குடும்ப சோனியா ஊழலால் சிதைக்கப்பட்டபின் மோடியால் மீன்டும் வளருகிறது இந்திரா குடும்ப ராகுலால் தொய்வு ஏற்படாமல் தொடரட்டும் இந்த தேச முன்னேற்றத்திற்கான பயணம்

Rate this:
Balakrishnan - Kanyakumari,இந்தியா
27-ஜூன்-201818:41:02 IST Report Abuse

Balakrishnanஇது தான் உண்மை...

Rate this:
Anandan - chennai,இந்தியா
28-ஜூன்-201806:54:29 IST Report Abuse

Anandanஅது சரி கணபதி, இப்போது இந்திரா காந்தியின் நிர்வாக திறமை கூட இல்லாதவர் ஆட்சி செய்கிறாரே....

Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
27-ஜூன்-201817:32:27 IST Report Abuse

சுந்தரம் 1975 எமெர்ஜென்சி யை ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம். தவறு செய்யாதவர்கள் சிலர் பாதிக்கப்பட்டனர். ஆனால் தவறு செய்தவர்கள் அனைவருமே மிகவும் பாதிக்கப்பட்டனர். ஆனால் ஹிந்துக்களுக்காக, ஹிந்து மதத்துக்காக என்றெல்லாம் மாறி மாறி ஊதுகுழல் ஊதும் இந்த பாலியல் கட்சி இந்துக்களுக்கு பாதுகாப்பு என்று சொல்லி சொல்லியே பாபர் மசூதியை இடித்தது பாஜக. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்துக்கள்தான். வளைகுடா நாடுகளில் அதிக சம்பளத்தில் பணியாற்றிய இந்துக்களுக்கு வாய்ப்பு பறிபோனது. அந்த இடத்துக்கு இந்திய இஸ்லாமியர்கள் தேர்வானார்கள்.. இன்னமும் வளைகுடா நாடுகளின் விசா அணுகுமுறையில் இந்து என்றாலே விசா மறுப்புக்கு காரணம் தேடுகிறார்கள். இதைவிடவா அந்த எமர்ஜென்சி கொடுமை, மோசம்?

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X