கேரளாவில் இளம்பெண் பலாத்காரம்: 5 பாதிரியார்கள் கைது?

Added : ஜூன் 27, 2018 | கருத்துகள் (278)
Advertisement
கேரளா இளம்பெண், பலாத்காரம், பாதிரியார்கள், சர்ச் நிர்வாகம் ,  ஐந்து பாதிரியார்கள், பாதிரியார்கள் கைது, கேரளா பெண் பலாத்காரம்,
Kerala , priests, church, five priests, priests arrested, Kerala woman rape,

கோட்டயம்: கேரளாவில், பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி, பலாத்காரம் செய்ததாக, ஐந்து பாதிரியார்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, விடுமுறையில் செல்லும்படி, அந்த ஐந்து பாதிரியார்களுக்கும், சர்ச் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சர்ச் ஒன்றில், கேரளாவை சேர்ந்த நான்கு பேரும், டில்லியைச் சேர்ந்த ஒருவரும், பாதிரியார்களாக உள்ளனர்.


பாவமன்னிப்பு கேட்ட பெண்ணை பங்குபோட்ட பாதிரியார்கள்

பாவ மன்னிப்பு :

இந்நிலையில், கோட்டயம் மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த ஒருவர், சர்ச் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டிருந்ததாவது: ஒருவர் கேட்ட பாவ மன்னிப்பை, மற்றவர்களிடம் சொல்ல கூடாது. ஆனால், என் மனைவி கேட்ட, பாவ மன்னிப்பை வைத்து, அவரை மிரட்டி, ஐந்து பாதிரியார்கள் உட்பட எட்டு பேர், பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில், சர்ச் நிர்வாகி ஒருவரும், அந்தப் பெண்ணின் கணவரும், பேசிய பேச்சுகள் பதிவான, 'ஆடியோ சிடி' வெளியானது. அதில், பெண்ணின் கணவர் கூறியிருந்ததாவது: என் மனைவியை, திருமணத்துக்கு முன்பே, பாதிரியார் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். திருமணத்துக்கு பின், இதற்காக, சர்ச்சில், மற்றொரு பாதிரியாரிடம், பாவ மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், அந்த பாதிரியார், இந்த விவகாரத்தை வெளியில் சொல்வேன் என மிரட்டி, என் மனைவியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், மூன்று பாதிரியார்களிடம், அவர், இது பற்றி தெரிவித்துள்ளார், அவர்களும், என் மனைவியை மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர்.


பரபரப்பு :

இது பற்றி வெளியில் கூறினால், கொலை செய்து விடுவோம் என, மிரட்டி உள்ளனர். இது பற்றி, எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது. இவ்வாறு அதில், அந்த பெண்ணின் கணவர் கூறியுள்ளார். இதுகுறித்து சர்ச் தரப்பில், விசாரணைக்குபின் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பாதிரியார்களும், விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.

பெண்ணின் தரப்பிலும், போலீசில் இதுவரை புகார் செய்யப்படவில்லை. எனினும், சமூக வலைதளங்களில், இந்த செய்தி வெளியாகியுள்ளதையடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெண் தரப்பில், போலீசில் புகார் செய்யப்படும் என, தெரிகிறது. அதனால், ஐந்து பாதிரியார்களும் கைது செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (278)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ganesh - Chennai,இந்தியா
05-ஜூலை-201803:04:43 IST Report Abuse
Jaya Ganesh இவனுகளும் ரௌடிகளுக்கு ஒப்பானவர்கள் ...சுட்டு கொல்லனும் இந்த காமுக கயவர்களை ..கேடுகெட்ட சர்ச் நிர்வாகம் அந்த காமுகங்களை விடுமுறையில் போக சொல்லி இருக்கிறதாம் ? என்ன ஒரு கயமை தனம்..சர்ச் நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
pavithran - jubail,சவுதி அரேபியா
02-ஜூலை-201814:51:39 IST Report Abuse
pavithran சந்நியாசம் போகிறவர்களை அவர்களின் செக்ஸ் என்னும் உணர்வு நரம்பை துண்டித்து கொள்ளவேண்டும் .அதன் பிறகு சந்நியாசம் என்னும் பட்டத்தை கொடுக்கவேண்டும் .அதன் பிறகு இப்படிப்பட்ட செய்திகளை நாம் பார்க்கமுடியாது .
Rate this:
Share this comment
mannan - Madurai,இந்தியா
03-ஜூலை-201811:42:01 IST Report Abuse
mannanநீங்க சொல்லிடீங்கள்ல, செஞ்சுறலாம் ......
Rate this:
Share this comment
Cancel
amalan - thanjavur,டிஜிபௌசி
01-ஜூலை-201812:28:07 IST Report Abuse
amalan கடவுளை வழிபடுவதற்கும், நமது பாவங்களை சொல்லி மன்னிப்புக்கேட்பதற்கும், எந்த ஏஜெண்டும் நமக்கு தேவை இல்லை. நாம் நேரடியாக கடவுளிடம் சொல்லலாமே. ஏன் பூசாரி, சந்நியாசி, பாதிரியாரிடம் போகவேண்டும்? Most of guys of those are criminals and thieves.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X