பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள்-மீனவர்கள் குழு இன்று மாலை இலங்கை பயணம்

Added : ஜூன் 27, 2018
Share
Advertisement

ராமநாதபுரம் இலங்கை வசம் உள்ள படகுகளை மீட்க ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள்-மீனவர்கள் அடங்கிய குழு இன்று (ஜூன் 27) இலங்கை செல்கிறது.எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக பறிமுதல் செய்யப்பட்ட தமிழக படகுகளில் 10 படகுகளை இலங்கை அரசு ஜூன் 15ல் விடுவித்தது. இதில் பயன்படுத்தும் நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களின் 8 படகுகள் உள்ளன. இவற்றை பார்வையிட்டு உறுதி செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளனர். அதன் பிறகே படகுகள் தமிழகம் கொண்டு வரப்படும்.இதற்காக, ராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி சேசுராஜ், மெக்கானிக் ஆல்வின் பெர்னான்டோ, மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோபிநாத், இன்ஸ்பெக்டர் ரமேஷ் அடங்கிய நான்கு பேர் குழு இன்று மாலை மதுரையில் இருந்து விமானத்தில் இலங்கை செல்கின்றனர்.தற்போதைய நிலவரப்படி தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 184 படகுகள் இன்னும் மீட்கப்

படாமல் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X