பொது செய்தி

இந்தியா

இந்தி பேசுவோர் எண்ணிக்கை 44 சதவீதமாக அதிகரிப்பு

Updated : ஜூன் 27, 2018 | Added : ஜூன் 27, 2018 | கருத்துகள் (50)
Advertisement
இந்தி, அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகள்

புதுடில்லி : இந்தியாவில் அட்டவணைப்படுத்தப்பட்ட 22 மொழிகள் மற்றும் அட்டவணைப்படுத்தப்படாத மொழிகளை பேசுபவர்கள் குறித்த புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், 2001 ம் ஆண்டு 41.03 சதவீதமாக இருந்த இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 2011 ல் 43.63 சதவீதமாக அதிகரித்துள்ளது. மிக அதிகமானவர்கள் பேசும் மொழிகளின் பட்டியலில் இந்தியை தொடர்ந்து வங்காளம் 2 வது இடத்திலும், மராத்தி 3வது இடத்திலும் உள்ளது. தெலுங்கு 4வது இடத்திலும், தமிழ் 5வது (5.89%) இடத்திலும் உள்ளன. மிக குறைவானவர்களால் பேசப்படும் மொழியாக சமஸ்கிருதம் உள்ளது.
24,821 பேர் மட்டுமே போடோ, மணிப்பூரி, கொங்கணி, தோக்ரி போன்ற மொழிகளை பேசுகிறார்கள். அட்டவணைப்படுத்தப்படாத மொழிகளில் அதிகபட்சமாக 2.6 லட்சம் பேர் பேசும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஆங்கிலம் அதிகம் பேசும் மக்கள் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும், கர்நாடகா 3வது இடத்திலும் உள்ளன.
அதிகமானவர்கள் பேசும் மொழிகளின் பட்டியலில் உருது 6 வது இடத்திலும், குஜராத்தி 7வது இடத்திலும் உள்ளன. நாட்டின் மக்கள் தொகையில் 96.71 சதவீதம் பேர் அட்டவணைபடுத்தப்பட்ட 22 மொழிகளில் ஒன்றை தங்களின் தாய்மொழியாக பயன்படுத்தி வருகின்றனர். 3.29 சதவீதம் பேர் மட்டுமே பிற மொழிகளை தாய்மொழியாக கொண்டள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
28-ஜூன்-201803:16:10 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே ஐ, எங்கூருல பாய் மாறுங்க தான் இந்தி கலந்த பாஷை பேசுவாங்க, உங்கூருல எப்படி?
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28-ஜூன்-201801:29:13 IST Report Abuse
Mani . V இப்படி சொல்ல சொல்வதற்கு எத்தனை ஆயிரம் கோடி மக்களின் வரிப்பணம் கொட்டி கொடுக்கப்பட்டது? இது எல்லாம் மக்களை முட்டாள்களாக்கும் வடிகட்டிய பொய்கள். ஹிந்தியை தாய்மொழியாய் கொண்ட, ஹிந்தி பேசும் மாநிலங்களில், ஹிந்தியிலேயே படித்து விட்டு, ஹிந்தியிலேயே தேர்வு எழுதி, பத்தாம் வகுப்பு தேர்வில் 150 பள்ளிகளில் ஒருவர் கூட தேறவில்லை. இந்த லட்சணத்தில் ஹிந்திதான் அதிக மக்களால் பேசப்படுகிறதாம்
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
27-ஜூன்-201821:13:23 IST Report Abuse
Sanny எப்படியோ தமிழினம் அழிந்தால் சரி என்ற நிலைமை, இலங்கையில் பாதி தமிழினத்தை அழித்ததில் முக்கிய பங்கு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு, அதே இனி தமிழ்நாட்டில் யார் செய்வது என்று போட்டி.
Rate this:
Share this comment
Advaiti - Chennai,இந்தியா
28-ஜூன்-201813:21:25 IST Report Abuse
Advaitiகாங்க்ரஸ் கூட்டணியில் இருந்து இலங்கையில் பாதி தமிழினத்தை அழித்தவர்களே தமிழகத்திலும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X