பயங்கரவாத அமைப்பில் இணைந்த போலீஸ் அதிகாரி

Added : ஜூன் 27, 2018 | கருத்துகள் (26)
Advertisement
காஷ்மீர், போலீஸ் அதிகாரி, பயங்கரவாத அமைப்பு

ஸ்ரீநகர்:காஷ்மீரில் கடந்த வாரம் மாயமான போலீஸ் அதிகாரி, தங்களது அமைப்பில் இணைந்துவிட்டதாக, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.


மாயம்

காஷ்மீர் மாநில சிறப்பு போலீஸ் படை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் இர்பான் அகமது தர். புல்வாமா மாவட்டத்தில் உளள நெகமா ககபோரா பகுதியை சேர்ந்த இவர் ஒரு சில நாட்களுக்கு முன், பணிக்காக வழங்கப்பட்ட ஏகே 47 ரக துப்பாக்கியுடன் மாயமானார். அவர் எங்கே சென்றார் என தெரியாத நிலையில் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இர்பான் அகமது தங்களது அமைப்பில் இணைந்துவிட்டதாக ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. பணியில் உள்ள போலீசாரும் ராஜினாமா செய்து விட்டு தங்களது அமைப்பில் இணைய வேண்டும் என தெரிவித்துள்ளது.



மிரட்டல்

இந்நிலையில், புல்வமா மாவட்டத்தில் சிறப்பு போலீஸ் படையில் பணிபுரியும் ஷாகிர் அகமது பட் மற்றும் சஜத் அகமது ஆகியோது வீட்டிற்குள் புகுந்த பயங்கரவாதிகள், அவர்களை தாக்கி விட்டு பணியை ராஜினாமா செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர்.



கைது

ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்ட 4 பேரை சோபோர் மாவட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து கையெறி குண்டுகள், ஆயுதங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravichandran - avudayarkoil,இந்தியா
28-ஜூன்-201811:36:12 IST Report Abuse
ravichandran நம்ம விஜயகுமார் சார் போய்ட்டாருல்ல வீரப்பனை போட்டுத்தள்ள வெல்லத்துரையா அனுப்பினது மாதிரி இந்த அதிகாரியையும் அனுப்பி இருக்கலாம் விரைவில் நல்ல சேதி வரும்
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
28-ஜூன்-201803:15:15 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இவர்களுக்கெல்லாம் சொறியா சட்டம் தான் சரி போல? அம்பேத்கரையும் அகிம்சாவையும் இவர்கள் ஏற்காமல் இருப்பது பெரிய இழுக்கு
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
27-ஜூன்-201821:41:29 IST Report Abuse
sumutha - chennai அவர் அந்த இயக்கத்தின் மீது பற்று கொண்டு போய் இணைந்திருந்தால் அவர் இந்த தேசத்தின் துரோகி என தாராளமாக முத்திரை குத்திவிடலாம். ஆனால் இவ்வளவு நாட்கள் பொறுத்து சரியாக நடவடிக்கை எடுக்கும் இந்த நேரத்தில் அங்கே சென்றிருப்பது என்னவோ அவர்களை நோட்டமிட்டு நமக்கு தகவல் அளிப்பதற்க்காகவும் இருக்கலாம். எப்படி சென்றிருப்பார் என்பது அவரின் மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த விஷயம். சிறிது காலம் பொறுத்து பார்ப்போம்.
Rate this:
Share this comment
Raman - kottambatti,இந்தியா
28-ஜூன்-201806:15:20 IST Report Abuse
Ramanஅதெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது.. அவன் தேசத்துரோகி.. உடனே அவனை கொல்ல வேண்டும்.. அவன் பிஜேபி யில் சேர்ந்தால் அவன் மீண்டும் புனிதன் ஆகிவிடுவான்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X