சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மதுரை ஆர்.டி.ஓ., ஆபிசில் ரூ.10 கோடி ஊழல்

மதுரை: பள்ளிகள் பக்கம் 'மழைக்கு கூட ஒதுங்காத' 6,777 பேரிடம் 10 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று ஓட்டுனர் உரிமம், பேட்ஜ் வழங்கிய வட்டார போக்குவரத்து அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர், டிரைவிங் பள்ளி உரிமையாளர்கள் என 17 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 மதுரை,ஆர்.டி.ஓ., ஆபிசில், ரூ.10 கோடி, ஊழல்


ஊழல் பெருச்சாளிகளை கையும், களவுமாக பிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. மதுரையில் வடக்கு, தெற்கு, மத்திய உட்பட ஏழு வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில், பள்ளிகள் பக்கம் மழைக்கு கூட ஒதுங்காத ஆயிரக்கணக்கானோரிடம் 2015 - 16 ம் ஆண்டில் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று ஓட்டுனர் உரிமம், பேட்ஜ் வழங்கிய வகையில் 10 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வரை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஊழல் செய்துள்ளனர்.


தகுதி இல்லாதவர்களுக்கு உரிமம், பேட்ஜ் வழங்கியதால் நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவர்களின் உரிமங்கள், பேட்ஜ்களை ரத்து செய்ய வேண்டும். லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சென்னையில் உள்ள லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குனரிடம் புகார் அளிக்கப்பட்டது.


ரூ.10 கோடி ஊழல்


இயக்குனர் உத்தரவுப்படி மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரகுரு தலைமை யில் ரகசிய விசாரணை நடந்தது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமா கின. மதுரை அழகப்பா நகர், 32, சுந்தர் தெரு, டி.வி.எஸ்., நகரில் இயங்கும் திறந்த வெளி பள்ளிகளான ராகவேந்திரா வித்யாலயா, ஸ்ரீராம் வித்யாலயா, பெரியநாச்சி வித்யாலயா ஆகிய பள்ளிகளின் உரிமையாளர்கள் பணம் பெற்று

கொண்டு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக மாற்றுச்சான்றிதழ்களை, எழுத படிக்க தெரியாத வர்களுக்கு வழங்கியுள்ளனர்.


இச்சான்றிதழ்களை அடிப்படையாக கொண்டு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், மதுரை வட்டார போக்குவரத்து அதிகாரிகளை 'கவனித்து' போலி ஆசாமிகளுக்கு ஓட்டுனர் உரிமம், பேட்ஜ் பெற்று கொடுத்துள்ளனர். இதன் மூலம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் 10 கோடியே 67 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றது அம்பலமாகி உள்ளது.


17 பேர் மீது வழக்கு


மதுரை வடக்கு போக்குவரத்து அதிகாரி (ஆர்.டி.ஓ.) கே.கல்யாணகுமார் (தற்போது மத்திய), வடக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெ.பூர்ணலதா, ஏ.கே.முருகன், வடக்கு ஆர்.டி.ஓ., நேர்முக உதவி யாளர் எல்.ரேமாண்ட், கண்காணிப்பாளர் என்.புவனேஸ்வரி, இளநிலை உதவியாளர் எஸ்.சுப்பிரமணியன், ஸ்ரீராகவேந்திரா வித்யாலயா பள்ளி முதல்வர் கே.மணிகண்டன், ஸ்ரீராம் வித்யா லயா பள்ளி, பெரியநாச்சி வித்யாலயா பள்ளி நிர்வாகிகள் மணி, விஜி டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் எம்.செந்தில்குமார், ஓம் ஐயப்பா டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் ஜி.ராஜா, நியூ ஜெயலட்சுமி டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் கே.ஜெயக்குமார், செந்துார் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் எஸ்.பாண்டியராஜன், செல்வி டிரைவிங் ஸ்கூல் உரிமையார் வி.இளங்கோவன், நிர்மலா டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் ஆர். முருகேசன், கங்கா டிரைவிங் ஸ்கூல் உரிமையார் என்.நாகூர்கனி, அன்பு டிரைவிங் ஸ்கூல் உரிமை யாளர் எஸ்.அப்துல் மாலிக், தீட்சனா டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் ஆர்.ராஜா, மீனா டிரைவிங் ஸ்கூல் ஜெ.நாகராஜ் பிரசாத் ஆகியோர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புச்சட்டம், போலி ஆவணம் தயாரித்தல், போலி முத்திரை தயாரித்தல், தெரிந்தே தவறான ஆவணங் கள் தயாரித்தல், சதித்திட்டம் தீட்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்தனர்.


கோடீஸ்வர அதிகாரிகள்


வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரியாக கல்யாணகுமார் 9.12.13 முதல் 23.3.17 வரை, வடக்கு கிரேடு 1 மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணலதா 6.4.15 முதல் 15.9.17 வரை, வடக்கு கிரேடு 1 மோட்டார் வாகன ஆய்வாளர் முருகன் 25.3.15 முதல் 3.3.16 வரை,கண்காணிப்பாளர் புனவேஸ்வரி 8.3.13 முதல் 23.10.13 வரை, இளநிலை உதவியாளர் சுப்பிரமணியன் 5.5.15 முதல் தற்போது வரை

Advertisement

பணியாற்றி உள்ளனர். இக்குறிப்பிட்ட சில ஆண்டுகளில் ஓட்டுனர் உரிமம், பேட்ஜ் வழங் கிய இனங்களில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கும் மேல் லஞ்சம் பெற்றது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


நேர்முக உதவியாளர் ரேமண்ட் 3.7.13 முதல் 12.12.15 பணியாற்றினார். இவர் மீதான லஞ்ச புகாரால் 11.1.16 முதல் 29.1.18 வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். தற்போது லஞ்ச வழக்கில் சிக்கி கொண்டார். வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் புரோக்கர்களாக சில ஏஜென்ட்டுகள் செயல்படுகின்றனர். அவர் கள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பார்வை திரும்பியுள்ளது.


சி.பி.சி.ஐ.டி., விசாரணை


மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் கூறிய தாவது: தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் கோரத்தாண்டவம் ஆடுவது வெட்ட வெளிச்சம் தான். எனினும் வழக்கில் சிக்கியது வடக்கு வட்டார போக்கு வரத்து அலுவலகம் மட்டுமே. இது ஒரு சாம்பிள் மட்டுமே. வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக உள்ளனர். இ வர்கள் பினாமிகள் பெயரில் அசையும், அசையாத சொத்துக்களை குவித்து வருகின்ற னர். இத்துறையில் தலை விரித்தாடும் லஞ்சம், ஊழல் குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.


சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையின் கீழ் விசா ரணை நடந்தால் லஞ்ச அதிகாரிகள் ஒருவர் கூட தப்ப முடியாது. அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் புரோக்கர்களாக செயல்படுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-201811:35:16 IST Report Abuse

நெல்லை மணி,ஒரு இந்தியன் தாத்தா திரும்பவும் வர வேண்டும் போல் உள்ளது. (கமல் படம் இந்தியன் (1996 திரைப்படம்) மீண்டும் திரை யிட்டு ஆர்.டி.ஓ., ஆபிசில் வேலை பார்க்கும் அனைவரும் கட்டாயமாக பார்க்கும்படி செய்து கையொப்பம் வாங்கிக்கொண்டு மீறினால் இந்தியன் தாத்தா கொலை செய்வார் என்று சொல்லவேண்டியதுதான்.

Rate this:
jayabharath - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜூன்-201816:30:15 IST Report Abuse

jayabharathநாட்டில் குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்க வேண்டும், அது யாராக இருந்தாலும் சரி. ஜன நாயக நாடு.. ஜன நாயக நாடு என்று சொல்லியே நாசமா போய் கொண்டிருக்கிறது.

Rate this:
28-ஜூன்-201813:24:24 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்இதுபோல லஞ்சம் பெற்று போக்குவரத்து விதிகள் தெரியாத நபர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கினால் அவர்கள் ஏடாகூடமாக வண்டியை ஒட்டி மற்றவர்களை கொல்கிறார்கள். இது உடனடியாக தடுக்கப்படவேண்டிய ஒன்று. அரைகுறை படித்த நகரத்தில் உள்ள இளைஞ்சர்கள் இன்று எப்படி வண்டி ஓட்டவேண்டும் என்று தெரியாமலேயே குறுக்கும் நெடுக்குமாக ஓட்டுகிறார்கள் , குறிப்பாக வளைவில் வலதுபுறம் திரும்பவேண்டும் என்றால் நேரிடையாக வலது ஓரம் வண்டியை ஒட்டி இடதுபுறம் வரும் வண்டியில் மோதுகிறார்கள் , இது தினமும் சென்னையில் நான் பார்ப்பது. இடதுபுறமாக சென்று வலது திரும்பவேண்டும் என்ற அடிப்படை விஷயம் கூட தெரிவதில்லை.

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X