பொது செய்தி

இந்தியா

பிரதமருக்கு பாதுகாப்பு: உள்துறை விளக்கம்

Added : ஜூன் 28, 2018 | கருத்துகள் (13)
Advertisement
பிரதமர்,பாதுகாப்பு,உள்துறை,விளக்கம்

புதுடில்லி : 'பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, வழிகாட்டு விதிகள் வகுக்கப்படுவது, புதிய விஷயம் அல்ல' என, மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி உயிருக்கு ஆபத்து இருப்பதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்து உள்ளன. அதன் அடிப்படையில், அவருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கும் வகையில், என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படைக்கு, புதிய வழிகாட்டு விதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 'பிரதமர் நரேந்திர மோடி அருகில் செல்லும், அமைச்சர்கள், உயரதிகாரிகள் என அனைவரும், தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சாலை வழி பயணத்தை, பிரதமர் தவிர்க்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தொடர்பாக, புதிய வழிகாட்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இது, வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறையே. பிரதமர் உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
28-ஜூன்-201813:27:21 IST Report Abuse
sumutha - chennai இது வரை நடைமுறையில் உள்ள பிரதமர் பாதுகாப்பு அமைப்பை, பிரதமர் எந்த கட்சியை சேர்ந்தவரானால் என்ன அவர் பிரதமர் அவருக்கு பாதுகாப்பு என்பது அப்போதுள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கை. இதையெல்லாம் விவாத பொருளாக்குவது நாட்டிற்கு நல்லதில்லை. இதற்க்கு விளக்கங்கள் அளிக்கப்படுவதும் தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
28-ஜூன்-201812:13:03 IST Report Abuse
Syed Syed இதுக்குமுன்னாடி இருந்தே பிரதமர்களுக்கு ஏன் வழங்கவில்லை இந்த பாதுகாப்புகள். உலகம் சுற்றும் நபருக்கு இது தேவைதானா. வீண் செலவு.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
28-ஜூன்-201811:46:38 IST Report Abuse
Ramakrishnan Natesan வளர்ச்சி முன்னேற்றம் என்று எதையாவது பேசி ஓட்டு கேட்டு ஆட்சியை பிடிக்க பாருங்க.அதை விட்டு விட்டு மத உணர்வை தூண்டி மக்களை ஒருவரோடு ஒருவர் மோதி ரத்தம் சிந்த வைத்து அதன் மூலம் வாக்கு வங்கியை பெருக்கி கொண்டு ஆட்சியை பிடிக்க வியூகம் வகுப்பது நாட்டுக்கு நல்லதல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X