ஏழைகளை காக்க வந்த கடவுளா ? - மோடி ஆவேசம்

Updated : ஜூன் 28, 2018 | Added : ஜூன் 28, 2018 | கருத்துகள் (54)
Advertisement
ஏழைகள், கடவுள், பிரதமர், மோடி,

வாரணாசி: அரசியல் லாபத்திற்காக அம்பேத்கர் பெயரை பயன்படுத்தும் அரசியல்வாதிகள் என பிரதமர் மோடி, வாரணாசி நகரில் நடந்த கபீர் குருவின் 500 வது நினைவு நாள் விழாவில் ஆவேசமாக பேசினார். அவர் மேலும் பேசியதாவது:

கபீர் ராமர் மீதும், அமைதி மீதும் நம்பிக்கை வைத்திருந்தார். கபீர் குறித்த உண்மையை மறைக்க எதிர்கட்சியினர் முயற்சிக்கின்றனர். அரசியல் ஆதாயத்திற்காக அம்பேத்கர் பெயரை பலர் பயன்படுத்துகின்றனர். பல வாரிசு அரசியல்வாதிகள் ஏழைகளை காக்க வந்த கடவுள் போல் தங்களை நினைத்து கொள்கின்றனர். ஏழைகளை ஏமாற்றும் அரசியல் பல நாட்கள் நீடிக்காது.

கடந்த ஆட்சியில் இருந்த அரசியல் வாதிகள் ( அகிலேஷ், மாயாவதி ) தங்களின் அரசு பங்களாவை காலி செய்ய மறுக்கின்றனர். எனது அரசாங்கம் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ஏழைகளுக்காகவும் உழைக்கிறது. ஜன்தன் யோஜனா மூலம் 5 கோடி பேருக்கு உ.பி.,யில் வங்கி கணக்கு துவக்கி கொடுத்துள்ளோம். முஸ்லிம்களுக்கென கொண்டு வந்த முத்தலாக் சட்டத்தை அரசியலாக்கின்றனர். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-ஜூன்-201823:00:51 IST Report Abuse
Pugazh V கொஞ்ச நாளா ஸேம் ஸைட் கோல் ஆடிக்கறாரே...என்ன ஆச்சு... போனவாரம்"பொய்களை சொன்னால் நிலைக்காது" ன்னார் அப்புறம் வன்முறை தீர்வு தராதுன்னார். இப்போது எந்த அரசியல் வாதியும் ஏழைகளை காக்க வரலைன்ற ர். ஏன் தடுயாறுது. நாலு வருஷமா மக்களுக்காக ஒரு ஆணியும் புடுங்கலை..என்னத்த சொல்லி ஓட்டு கேக்கறது. அதான் பிதற்றுவதை ஆரம்பித்து விட்டார்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-ஜூன்-201822:56:38 IST Report Abuse
Pugazh V bal, சென்னை எழுதறார் //நாடு உருபடாம போவதற்கு காரணம் இந்த திராவிடம்// ஒட்டுமொத்த தமிழகத்து பிராமணர்கள் அல்லாதவர்களை இப்படி அவமானப்படுத்தியும் யாருமே கோபப்படாததும் மறுக்காததும் மானங்கெட்ட சொரணைகெட்டவர்கள் என்பதைக் காட்டுகிறது. (நல்ல வேளை நான் ஆரியன் எனவே என்னை சொல்லவில்லை)
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-ஜூன்-201821:54:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //கடந்த ஆட்சியில் இருந்த அரசியல் வாதிகள் ( அகிலேஷ், மாயாவதி ) தங்களின் அரசு பங்களாவை காலி செய்ய மறுக்கின்றனர்.// பிரதமர் தினமலர் படிப்பதில்லையா? இருவரும் பங்களாக்களை காலி செய்து விட்டதாக செய்தி வந்திருந்ததே. அது டில்லியிலா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X