ராபர்ட் வதேராவுக்கு பிடி இறுகுகிறது

Added : ஜூன் 28, 2018 | கருத்துகள் (33)
Advertisement
ராபர்ட் வதோரா, வருமான வரி துறை ரெய்டு, சோனியா மருமகன் ராபர்ட் வதோரா,  பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா , காங்கிரஸ் ஆட்சி, காங்கிரஸ், ராபர்ட் வதோரா வரி ஏய்ப்பு  , 
Robert Vadora, income tax department raid, sonia nephew Robert Vadora, Priyanka husband Robert Vadora, Congress rule, Congress, Robert Vadora tax evasion,

புதுடில்லி: வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்., முன்னாள் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்கா கணவருமான ராபர்ட் வதேரா மீதான வருமான வரித்துறையின் பிடி இறுகுகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ராபர்ட் வதேரா நடத்திய பல்வேறு நிறுவனங்களில் பல கோடி கணக்கல் வருமானம் வந்ததாகவும், இதில் உரிய வரி செலுத்தாமல் எத்தனித்ததாகவும் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.




17 நிறுவனங்கள்


இந்நிலையில் ராபர்ட் வதேரா குறித்து அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டதில் பல ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அவர் 17 நிறுவனங்கள் நடத்தி வந்துள்ளார். ரியல் எஸ்டேட், ஐ.டி., துறை, இயற்கை தாது விற்பனை உள்ளிட்ட பிரிவுகளில் பல நிறுவனங்கள் இயங்கி வந்தன.




இதில் வதேராவின் தாயார் பெயரில் 6 நிறுவனங்களும், ஏனைய பினாமி பெயரிலும், சில நிதி நிறுவனங்களில் வட்டியில்லா கடன் பெற்றுள்ளார். எந்தவொரு வருமானத்தையும் முறையாக தெரிவிக்கவில்லை. ஆவணங்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அரியானா, ராஜஸ்தானில், பல ஏக்கர் நிலங்களை வாங்கி அதிக விலைக்கு விற்றுள்ளார். இது போன்ற பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருமான வரி மற்றும் அமலாக்க துறையினர் போதிய ஆதாரங்களை திரட்டி வருவதாகவும், விரைவில் உரிய நடவடிக்கையில் இறங்கும் என்றும் டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-ஜூன்-201823:11:22 IST Report Abuse
Pugazh V ஹா ஹா ஹா..இதவிட சீப்பான அரசியல் செய்ய யாராவயும் முடியாது. பிடி இறுகுதாம். அதுக்குள்ள நாலு பேர் இங்கே தீர்ப்பே எழுதிட்டாங்க. சென்னை பல் (bal) என்பவர் இனவாத அரசியல் செய்யறார். திராவிடம் என்று எழுதி அதில் வாட்ரா வையும் சேத்துட்டர். விஜய் மல்லையா, நிரவ்மோடி கூட திராவிடரோ?? பிடி இறுகுதா எது, அவரோட காலை பிடிச்சு கிட்டு சுத்தறவங்களோட பிடியா? கூலி எச்சா வேணும்னா வாய தொறந்து கேளுங்கப்பு ..போட்டு குடுப்பர்..பிடிய இறுக்காதேள்..உங்கள் கைதான் வலிக்கப் போறது. இவாளுக்கு இசட் பாதுகாப்பு வேணாம் னும் ஏர்போர்ட்டில் கூட விஐபி மரியாதை வேண்டாம் னு இவாளே சொல்லி யும் அரசு கேக்கலை. ஏன்னா காவி தீவிரவாதி யாராச்சும் போட்டு தள்ளிட்டா? காவி குண்டாஸை கண்ட்ரோல் பண்ண அரசால் முடியாததால் இசட் பிரிவு. இதெல்லாம் டீக்கடை பெஞ்ச் அரசியல் வாதிகளுக்கு என்ன புண்ணாக்கு தெரியும்??
Rate this:
Share this comment
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
28-ஜூன்-201822:17:00 IST Report Abuse
Suman இவர் ஒரு தமிழரா இருந்தால்...எதாவது கட்சி நடத்தி தப்பிச்சிருக்கலாம் வட நாட்ல மாட்டிகிட்டாப்ல எலக்ஷன் வேற வர போகுது லாலுவை உள்ள வச்ச மாதிரி வச்சிடுவாங்க போல...நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-ஜூன்-201820:29:59 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "பிடி இறுகுகிறது" அப்புறம் உருகுகிறதா? அது ஏன் உள்ளே போடாமல் கூவி கூவி கீரி - பாம்பு சண்டை காட்டி என்ன லேகியம் விற்கிறார்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X