பொது செய்தி

இந்தியா

48 மாதங்களில் 52 நாடுகளுக்கு மோடி வெளிநாட்டு பயணம்: ஆர்.டி.ஐ. தகவல்

Added : ஜூன் 28, 2018 | கருத்துகள் (54)
Share
Advertisement
48 மாதங்களில் 52 நாடுகளுக்கு மோடி வெளிநாட்டு பயணம்: ஆர்.டி.ஐ. தகவல்

புதுடில்லி: பிரதமராக பதவியேற்ற மோடி 4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடு பயணித்து 52 நாடுகளுக்கு சென்றுள்ளதும் இவரின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 355 கோடி என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்றார். நான்காண்டுகளை நிறைவு செய்த பிரதமர் மோடி இதுவரை சென்றுள்ள வெளிநாட்டு பயண விவரம், செலவுகள் குறித்து பெங்களூருரைச் சேர்ந்தவர் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தார்.அதற்கு அளித்துள்ள பதிலில், பிரதமராக மோடி கடந்த 48 மாதங்களில் 41 முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டு 51 நாடுகளுக்கு சென்றுள்ளார். இவரது வெளிநாட்டு பயண செலவு ரூ. 355 கோடியாகும்.இதில் அதிகபட்சமாக 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய மூன்று நாடுகளுக்கு சென்ற வகையில் ரூ. 31 கோடியே 25 லட்சத்து 78 ஆயிரம் செலவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் பூட்டான் பயணம் மேற்கொண்ட வகையில் ரூ. 2 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரத்து 465 செலவாகியுள்ளது.இவ்வாறு அந்த பதிலில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kaliyan Pillai - Chennai,இந்தியா
29-ஜூன்-201813:48:20 IST Report Abuse
Kaliyan Pillai தேர்தல் நேரத்தில் ஒட்டு சேகரிக்க தெருத்தெருவாய் ஊருக்கு ஊர் அலையும் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி ஒட்டு வாங்கி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தவுடன் மக்களை மறந்து மக்கள் வரிப்பணத்தில் உல்லாசப்பயணம் போகிறார்கள். அடுத்த தேர்தலுக்கு மீண்டும் தெருவுக்கு வரத்தான் போகிறார்கள். அப்போது ஏமாளி மக்கள் சூடு சொரணை இருந்தால் நல்ல கவனிப்பு செய்வார்கள் இல்லையேல் மீண்டும் பல்லை இளித்துக்கொண்டு ஆரத்தி எடுத்து அனுப்புவார்கள். அதுதான் இந்தியா
Rate this:
Cancel
29-ஜூன்-201813:14:41 IST Report Abuse
ராமகிருஷ்ணன் ஊழல் செய்யாத மோடி இன்னும் ஆயிரம் கோடி செலவு செய்து நம் நாட்டிற்கு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வரட்டும்.
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
29-ஜூன்-201812:05:14 IST Report Abuse
சுந்தரம் இங்க இருக்குற பூட்டான் நாட்டுக்கு போனதுக்கு இரண்டு கோடிக்கும் மேல செலவா? ஒருவேளை அந்த ஊருல இருக்குற யானைக்கெல்லாம் திருநெல்வேலியிலேந்து அல்வா வாங்கிட்டு போனாங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X