பொது செய்தி

இந்தியா

548 பேரிடம் மட்டுமே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு

Updated : ஜூன் 29, 2018 | Added : ஜூன் 29, 2018 | கருத்துகள் (107)
Share
Advertisement
கருத்துக்கணிப்பு,  பெண்கள் பாதுகாப்பு ,தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனம், பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடு,  ஐநா சபை, இந்தியா முதலிடம்,பெண்கள் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம் , 
Survey, women safety, Thomas Reuters Institute,
Women Risk Country, UN Council, India First, Womens Development, Womens Progress,

புதுடில்லி : வெறும் 548 பேரிடம் மட்டுமே கருத்துக்கணிப்பு நடத்திய தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனம், பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக முடிவை வெளியிட்டுள்ளது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கம் அளிக்கும்படி ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் மத்திய அரசு கேட்டுள்ளது.
இங்கிலாந்தில் தாமஸ் ராய்ட்டர்ஸ் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இது ஐ.நா., சபையில் இடம்பெற்றுள்ள 193 நாடுகளில் பெண்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில் பாலியல் தொழிலில் அடிமை, பணிப்பெண் சேவை, பெண் கடத்தல், கட்டாய திருமணம், கல் எறிந்து கொல்லுதல் மற்றும் பெண் சிசு கொலை உள்ளிட்ட நடைமுறைகளில் பெண்களுக்கு அதிக ஆபத்து நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக முடிவை அறிவித்தது.

கடந்த மார்ச் 26ம் தேதியில் இருந்து மே 4ம் தேதி வரை, 548 பேரிடம் மட்டுமே ஆன்லைன், தொலைபேசி, நேரடியாகவும் கருத்துக்கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசு தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் உள்ள மற்ற நாடுகளை காட்டிலும், பெண்கள் வளர்ச்சி, முன்னேற்றம் கடந்த ஆண்டுகளை விட, இந்தியா நல்ல நிலையில் உள்ளதாகவும், கருத்துக்கணிப்பில் கலந்து கொண்ட 548 பேர் குறித்த விவரங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakash - tirunelveli,இந்தியா
03-ஜூலை-201815:23:35 IST Report Abuse
prakash இந்த சர்வே செய்தது இந்தியாவுக்கு வந்து செய்த்திருக்கவேண்டும் .பணத்தை வாங்கிகிட்டு ஒன்லைன் சர்வே பண்றது ரீசேர்ச் பணத்தை கொள்ளை அடிக்க மட்டுமே. இந்த சர்வே உண்மை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-ஜூலை-201806:21:26 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இங்கே அட் லீஸ்ட் 548 பேரிடமாவது கணிப்பு எடுத்திருக்கிறார்கள். 8 வழி சாலையால் பாதிக்கப்படும் ஒருவரிடமும் விசாரிக்கவில்லை. கொடுத்த ஆய்வறிக்கை மொத்தமாக காப்பி, பேஸ்ட் செய்த போலி அறிக்கை. சைனாவில் எதோ ஒரு நிறுவனம் சாலை விரிவாக்கத்திற்கு செய்த அறிக்கையை பெயர், இடம் மாற்றி, தப்பும் தவறுதலாகவும் கொடுத்துள்ளது இந்த டுபாக்கூர் நிறுவனம் ஃபீட்பேக் இன்ஃப்ரா.. அந்த 280 கி.மீ பாதையையும் எந்த ஆய்வும் செய்யாமல், மக்களுடன் தகவலும் பரிமாற்றி கொள்ளாமல், பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்து, பேசி, கலந்தாலோசித்து முடிவெடுத்தது போல தில்லுமுல்லுகளை செய்துள்ளார்கள். ஒருவேளை ஆதார் கார்டில் இருந்து கையெழுத்தை திருடி இவர்களே போட்டு வைத்து ஏமாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மோசடி சர்க்காரின் இதெல்லாம் நிச்சயம் நடக்க வாய்ப்புள்ளது. டிஜிட்டல் சர்க்கார் ஆச்சே.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
01-ஜூலை-201811:07:16 IST Report Abuse
Darmavanஇவ்வளவு திருட்டு வழிகளை சொல்லும் உன் பேச்சை மட்டும் உண்மை என்று எப்படி எடுத்துக்கொள்வது....
Rate this:
Share this comment
Cancel
Sathyasundaram Lakshminarayanan - Mumbai,இந்தியா
29-ஜூன்-201817:32:54 IST Report Abuse
Sathyasundaram Lakshminarayanan உண்மை. இரு தினங்களாக இவர்களது பங்கு தந்தையின் லீலைகள் வரும்போது நம்பவேண்டி இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X