ஆர்.டி.ஓ.,க்கள் சொத்து விபரம் சமர்ப்பிக்க ஐகோர்ட் அதிரடி! Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 ஆர்.டி.ஓ.,  ,சொத்து விபரம்,சமர்ப்பிக்க,ஐகோர்ட்,அதிரடி!

சென்னை: தமிழகத்தில், வட்டார போக்குவரத்து அதிகாரிகளான, ஆர்.டி.ஓ.,க்கள், தங்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், புரோக்கர்கள் நடமாட்டத்தை தடுக்க, உடனடி யாக, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும், லஞ்ச, ஊழல் முறைகேடு களை தடுக்க, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அரசுக்கு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத் தில், தென்னிந்திய ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள்
கூட்டமைப்பின் தலைவர் சண்முகம், ஒரு மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், 'இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகன ஓட்டுனர்களுக்கு உரிமம் வழங்க, தானியங்கி ஓட்டுனர் தேர்வை, 'எச்' வடிவ பாதையில் நடத்துவது என்ற, புதிய முறையை, போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

'புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட தேர்வை அமல்படுத்த, தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.செல்வராஜ் ஆஜராகி, ''இலகு ரக வாகனங்களுக்கான ஓட்டுனர் பயிற்சி விதிகளின்படி, 'எஸ்' வடிவ பாதையில் ஓட்ட வேண்டும்; விதிகளில் திருத்தம் கொண்டு வந்த பின் தான், தானியங்கி ஓட்டுனர் தேர்வை, 'எச்' டிராக்கில் மேற்கொள்ள முடியும். அதுவரை, ஏற்கனவே இருந்த நடைமுறையை தான் பின்பற்ற வேண்டும்,'' என்றார்.

போக்குவரத்து துறை சார்பில் ஆஜரான, சிறப்பு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ''வழக்கு தொடர, மனுதாரருக்கு தகுதி இல்லை; ஓட்டுனர் தேர்வை எப்படி நடத்த வேண்டும் என்பது,போக்குவரத்து அதிகாரிகளின் முடிவு.

''ஓட்டுனர் தேர்வில் மாற்றங்கள் வருவதால், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை நடத்துவதில், எந்த பாதிப்பும் இல்லை,'' என்றார்.மனுவை விசாரித்த,

நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: ஓட்டுனர் தேர்வை முறையாக நடத்த வேண்டும் என்பது தான், விதிகளின் நோக்கம். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, தானியங்கி ஓட்டுனர் தேர்வை அறிமுகப்படுத்த வேண்டியது கட்டாயம். துல்லியமாக வாகனங்களை இயக்கும் திறனை கண்டறிய, இந்த புதிய தேர்வை, மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

புதிய முறையிலான தேர்வு குறித்து, ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு, ஏற்கனவே விளக்கப் பட்டு விட்டது. வாகனங்களை இயக்க தெரியாதவர் களுக்கு, விதிகள் தெரியாதவர் களுக்கு, ஓட்டுனர் உரிமம் வழங்கும் முறைகேடு களை தவிர்க்கவே, இந்த புதிய முறை அமலாகி உள்ளது. இதை, மனுதாரர் கேள்வி கேட்க முடியாது;அவர்களுக்கும், தேர்வுக்கும் சம்பந்தம் இல்லை.

துல்லியமான முறையில், ஓட்டும் திறனை ஆராயாமல், கவனமின்றி, ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், விபத்துக்கள் ஏராளமாக நடக்கின்றன. எனவே, மேம்படுத்தப்பட்ட தானியங்கி ஓட்டுனர் தேர்வு முறையை, அறிமுகம் செய்வதற்கான தருணம், இதுதான். முறையாக ஆய்வு செய்யாமல், முறைகேடு களாலும், ஊழல் நடவடிக்கை களாலும், ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப் படுவதை, உடனடியாக நிறுத்த வேண்டும். எனவே, புதிய தேர்வு முறை,

தற்போது அவசியம். அதில், எந்த குறைபாடும் இருப்பதாக தெரிய வில்லை. தேவைப் பட்டால், விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அதற்காக, புதிய தேர்வு

முறையை அமல்படுத்து வதை, தள்ளிவைக்க முடியாது.அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கைகளை குறைப்பதற்கு, இந்த புதிய முறை அவசியம் என, இந்த நீதிமன்றம் கருதுகிறது.

ஊழல் நடவடிக்கைகளால், பொது மக்கள் விரக்தி அடைந்து உள்ளனர். ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் நடத்துபவர்களும், போக்குவரத்து அதிகாரி களும் கைகோர்த்து, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை, யாரும் மறுக்க முடியாது.

ஊழலை கட்டுப்படுத்த, அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கும் போது, அதிகாரிகளும், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை நடத்துபவர்களும், ஊழலுக்கு புதிய வழி முறையை கண்டுபிடிக்கின்றனர். லஞ்ச ஒழிப்பு துறையின் பிடியில் இருந்து தப்பவும், வழி கண்டு பிடிக்கின்றனர். லஞ்ச ஒழிப்பு துறையும், திறமையுடன் செயல்படுகிறதா என்ற சந்தேகம், இந்த நீதிமன்றத்துக்கு உள்ளது. இந்த துறையின் அதி காரிகள், அறிவார்ந்தவர் களாக மட்டும் அல்லாமல், ஊழல் அதிகாரிகளை, எப்படி பிடிப்பது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். அதனால், அடிக்கடி, அனைத்து மட்டங்களிலும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஊழல், நம் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது. போக்குவரத்து, பத்திரப்பதிவு, வணிக வரி போன்ற துறைகளில், முடிந்த வரை, ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டிய கடமை, அரசுக்கு உள்ளது. மாநிலத்தில் நிலவும் ஒட்டு மொத்த சூழ்நிலை யையும் கருத்தில் கொண்டு, சில உத்தரவு களை பிறப்பிக்க வேண்டியது அவசிய மானதாக உள்ளது.

* மனுதாரர் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

தானியங்கி ஓட்டுனர் தேர்வை, அரசு அமல்படுத்த வேண்டும்

* வட்டார போக்குவரத்து அலுவலகமான, அனைத்து ஆர்.டி.ஓ., அலுவலகங் களிலும், மூன்று மாதங் களுக்குள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும்படி, போக்குவரத்து துறை செயலர் மற்றும் ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது

* இந்த கேமராக்கள், எப்போதும் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.ஒரு வாரம் தொடர்ந்து இயங்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

* வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், எந்த காரணமும் இன்றி, புரோக்கர்கள், தரகர்கள்,
ஓட்டுனர் பயிற்சி பள்ளி ஊழியர்கள், சுதந்திரமாக நடமாட, அனுமதிக்கக் கூடாது. நடமாட்டம் இருந்தால், அந்த அலுவலக அதிகாரி தான் பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

* ஆர்.டி.ஓ., மற்றும் அதன் தொடர்புடைய அலுவலகங்களில், அடிக்கடி, திடீர் சோதனை களை மேற்கொள்ள, தனி குழுக்களை, போக்கு வரத்து துறை செயலரும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரும் நியமிக்க வேண்டும். ஊழலில் ஈடுபடுவோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில், கருணை காட்டக் கூடாது

* வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத் துறையில் உள்ள இதர உயர் அதிகாரிகளின், அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை, போக்குவரத்து துறை செயலர், ஆணையர் பெற வேண்டும். பின், பணி பதிவேட்டில் காட்டப்பட்ட சொத்து விபரங்களுடன், அதை சரிபார்க்க வேண்டும். இதில், முரண்பாடுகள் இருந்தால்,அவர்களிடம் விளக்கம் பெற்று, தகுந்த நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூன்-201817:32:11 IST Report Abuse

நக்கல்தனியார் மயம் ஒன்றே வழி... இவங்க திருந்த மாட்டனுங்க...

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
30-ஜூன்-201820:01:29 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்ஹா..ஹா..ஹா... ஒழுங்காக மக்களை ஏமாற்றாமல், ஆளும்கட்சிக்கு லஞ்சம் தராமல், லாபி செய்து சட்டங்களை தங்களுக்கு சாதகமாக தாங்களே எழுதி கொள்ளாத உருப்படியாக வேலை செய்யும் தனியார் துறை ஒன்றை காட்டு பாப்போம்....

Rate this:
rajan. - kerala,இந்தியா
30-ஜூன்-201816:50:45 IST Report Abuse

rajan.  இந்த ஏஜென்ட் புரோக்கர் எனும்க தொழில்களை ஒழித்து கட்ட வேண்டும். இவர்களின் உழைப்பு லஞ்சம் சார்ந்த ஒன்று. ஒவ்வோரு வேலைக்கு ரேட் வைப்பது இவர்கள் தான். அரசு ஊழியர்களின் கைக்கூலிகள் இவீங்கதான். மக்கள் இந்த இரு கூட்டங்களுக்கும் படியளந்து மாளவில்லை. விதி

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
30-ஜூன்-201815:54:02 IST Report Abuse

இந்தியன் kumarலஞ்சம் வாங்கும் போக்கிரிகளை நடுச்சந்தியில் நிப்பாட்டி கசையடி கொடுக்க வேண்டும் . வேலை உடனடியாக டிஸ்மிஸ் பண்ண வேண்டும்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
30-ஜூன்-201820:03:51 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்அமைச்சன் ஒருத்தன் விடாமல் லஞ்சம் வாங்குறான்.. அதிகாரி அடி முதல் முடி லஞ்சம் வாங்குறான். போலீஸ் கேவலத்திலும் கேவலம். பிச்சைகாரன் கிட்டே கூட லஞ்சம் வாங்குறான். பெரும்பான்மை நீதிபதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள். இதை கேள்வி கேக்குறவனை மாவோயிஸ்ட், நக்ஸலைட்டு, சமூகவிரோதின்னு அமைச்சன் சொல்றன். ஏவல்துறை பிடிக்கிறான்....

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X