பொது செய்தி

இந்தியா

பிஷப் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார்

Added : ஜூன் 30, 2018 | கருத்துகள் (82)
Advertisement
கேரளா, சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச், பிஷப், கன்னியாஸ்திரி, கற்பழிப்பு

கோட்டயம்: கேரளாவில், சிரியோ மலபார் கத்தோலிக்க பிஷப் மீது கன்னியாஸ்திரி ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார்.


பிஷப் மீது போலீசில் புகார்


கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச்சுக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் உள்ள பிஷப் மீது, கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். அப்புகாரில் கடந்த, 2014ம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடு விடுதியில் வைத்து பிஷப் பிரான்கோ முல்லக்கல் என்பவர் தன்னை கற்பழித்தார். அதன் பிறகு பல முறை அந்த கொடூர செயல் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இரண்டு தரப்பும் புகார்


இது குறித்து கோட்டயம் மாவட்ட போலீஸ் தரப்பு கூறுகையில், தான் கற்பழிக்கப்பட்டது குறித்து சர்ச் நிர்வாகத்திடம் அந்த கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார். ஆனால், சர்ச் நிர்வாகம் அதை பொருட்படுத்தாததால், தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

அதே நேரத்தில், பணியிட மாற்றம் செய்ததால் தன் மீது அந்த கன்னியாஸ்திரி அபாண்டமாக புகார் அளித்துள்ளார் என்று பிஷப் முல்லக்கல் தரப்பில், கோட்டயம் மாவட்ட எஸ்.பி., அரிசங்கரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்பில் இருந்தும் புகார் வந்துள்ளதை எஸ்.பி., அரிசங்கர் உறுதி செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
02-ஜூலை-201812:05:14 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய் இதே பொழப்பா போச்சு..... ஒன்னு மதம் மாத்த வேண்டியது இல்ல இந்த மாதிரி கேவலமான வேல செய்யவேண்டியது.....
Rate this:
Share this comment
Cancel
Rajendra Kumar - College Station,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-201820:51:24 IST Report Abuse
Rajendra Kumar காலங்காலமா நடக்குற விஷயம் தான். வாட்டிகன் இல் ரொம்ப பிரபலம்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-ஜூலை-201801:33:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்வாடிகனில் மட்டுமில்லை. இதையும் அனர்த்தமாக கொள்ளவேண்டாம்.. பல சர்ச் நிர்வாகங்களில் இது சகஜம் தான். அப்படி அனர்த்தமாக கொண்டாலும், அதுவும் உண்மை தான்......
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
30-ஜூன்-201819:59:02 IST Report Abuse
vbs manian தேவனே என்னை பாருங்கள் .என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X