பதிவு செய்த நாள் :
 காவிரி, நதி நீர், கர்நாடக முதல்வர்,அடாவடி!

பெங்களூரு:காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசு தயாரித்துள்ள திட்டத்தை ஏற்க, கர்நாடக முதல்வர் குமாரசாமி, அடாவடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். காவிரி நதி நீர் ஆணையம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைக்கு, கர்நாடக மாநில அனைத்து கட்சியினர், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பார்லிமென்டில், தங்கள் மாநில, எம்.பி.,க்கள் வாயிலாக, இந்த பிரச்னையை எழுப்ப, அவர்கள் முடிவு செய்துள்ளனர்; உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
காவிரி பிரச்னையை தீர்க்க, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநிலம்
சார்பில், தலா இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், நாளை, டில்லியில் நடக்கிறது.இந்நிலையில், கர்நாடக முதல்வர், குமாரசாமி, பெங்களூரு விதான் சவுதாவில், அனைத்துக் கட்சி கூட்டத்தை நேற்று நடத்தினார்.துணை முதல்வர், பரமேஸ்வர், எதிர்க்கட்சி தலைவர், எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள், அனந்தகுமார், சதானந்த கவுடா, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய
அமைச்சர், வீரப்ப மொய்லி, கே.எச்.முனியப்பா, ராஜ்யசபா மற்றும் லோக்சபா, எம்.பி.,க்கள்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், சட்ட வல்லுனர்கள், நீர்வளத்துறை வல்லுனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் முதல்வர், சித்தராமையா பங்கேற்கவில்லை.

கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள்:
* டில்லியில் நாளை நடக்கும் கூட்டத்தில், கர்நாடகா தரப்பில், அதிகாரிகள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது

* மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், அனந்தகுமார் தலைமையில், கர்நாட
காவின் ராஜ்யசபா மற்றும் லோக்சபாவின், 40 எம்.பி.,க்கள், அடுத்த கூட்டத்தொடரில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

* உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உருவாக்கப்பட்ட திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதான வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய

வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆலோசனைக் கூட்டத்துக்கு பின், கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர், டி.கே.சிவகுமார் அளித்த பேட்டி:காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடகாவுக்கு, 14.75 டி.எம்.சி., தண்ணீர் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளும்படி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மத்திய அரசு உருவாக்கியுள்ள திட்டம், கர்நாடகாவுக்கு எதிராக உள்ளது.இதுபற்றி ஆராய்ந்து, மேலாண்மை ஆணையம் அமைக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஆகியோரிடம், முதல்வர் குமாரசாமி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

ஆனால், மத்திய அரசு, மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைத்து விட்டது.
எனவே, பிரதான வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, அனைத்து கட்சியினரும் ஒருமனதாகமுடிவு செய்துள்ளோம்.சட்டப்படி, பார்லிமென்டில் விவாதித்துதான் திட்டம் தயாரிக்க வேண்டும்.

எனவே, கர்நாடகா, எம்.பி.,க்கள், கட்சி பேதமின்றி பார்லிமென்டின் அடுத்த கூட்டத்தொடரில், இந்த விவகாரத்தை கிளப்புவர்.

மத்திய அமைச்சர், சதானந்த கவுடா, முன்னாள் மத்திய அமைச்சர், வீரப்ப மொய்லி ஆகியோர், சட்டத்துறை அமைச்சராக பணியாற்றி உள்ளனர்.அவர்களின் ஆலோசனைப்படி, டில்லியில் சட்ட வல்லுனர்கள் மற்றும் அட்வகேட் ஜெனரல் ஆகியோருடன் ஆலோசித்து, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

காவிரி ஆணையத்துக்கு எதிராக, லோக்சபாவில் குரல் எழுப்பப்படும். முடிந்தால், அரசியலமைப்பு குழுவில் பேசுவோம். நீர், நிலம், மொழி விஷயத்தில், மாநில நலன் கருதி, அரசு எடுக்கும் முடிவுக்கு, ஆதரவாக இருப்போம். காவிரி விவகாரத்தில், காங்., - ம.ஜ.த., கூட்டணி அரசுக்கு, பா.ஜ., முழு ஒத்துழைப்பு தரும்.
எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர், கர்நாடகா

காவிரி விவகாரத்தில், கர்நாடகாவுக்கு இழைக்கப்பட்டுள்ள அநியாயத்தை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். உச்ச நீதிமன்றத்தில் செய்யப்படும் மேல்முறையீட்டில், எந்தெந்த விஷயத்தை முன்வைக்க வேண்டும் என்பது பற்றி,சட்ட வல்லு னர்கள் முடிவு செய்வர்.
குமாரசாமி, முதல்வர், கர்நாடகா


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
02-ஜூலை-201811:13:57 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>திமுக அண்ட் அதிமுக நம்பிக்கையே டாஸ்மாக் மட்டுமேதான் ஒரு வருவாய் இதுலெமட்டும்தானே

Rate this:
jagan - Chennai,இந்தியா
01-ஜூலை-201817:06:31 IST Report Abuse

jagan.....ஆனதை பார்த்து கொள்ளுங்கள்....மழை அதிகம் இருந்தால் சொல்லாம கொள்ளாம அணை திறப்போம், இந்த தண்ணீரை 2 இல்ல 3 வருஷ கணக்கில் சேர்ப்போம், என்ன செய்ய உத்தேசம்

Rate this:
jagan - Chennai,இந்தியா
01-ஜூலை-201816:41:14 IST Report Abuse

jaganதமிழ்நாடு ரொம்ப தண்ணீர் வேண்டும் என்று பிடிவாதம் செய்தால், கோவை, ஈரோடு மாவட்டங்களை கர்நாடகாவில் சேர்க்கவேண்டும் என்று போராட்டம் தொடங்க வேண்டியது தான்...இங்கு எல்லாம் கவுண்டர் (அதாவது கன்னட கவுடா ) இனம் அதிகம் (14 மற்றும் 15 ம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த கங்க வமிசத்து சிப்பாய்கள்) , மேலும் இங்கு கன்னடம் தாய்மொழியாக கொண்டவர்களே அதிகம் (கன்னட ஈ வே நாயக்கரவாளை தலையில் தூக்கி கொண்டாடும் கூட்டம் தானே, இப்போ கூட சிவகுமார், சத்யராஜ் , சூர்யா என கன்னட தாய்மொழி கார்கள்தான்)

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X