காக்கி சட்டைக்காரர்...கந்து வட்டி வசூலில் கெட்டிக்காரர்

Added : ஜூலை 03, 2018
Advertisement
தனது வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து, அலுவலகம் சம்பந்தமான கடிதங்களை, 'லேப்-டாப்'பில் பதிவு செய்து கொண்டிருந்தாள் சித்ரா. அப்போது உள்ள வந்த மித்ரா, ''ஹாய்.. அக்கா!,'' என்றபடியே, அவளது தோளை தட்டினாள்.''என்னடீ.. சொல்லாம.. கொள்ளாம வந்து நிற்கற. காலேஜ்க்கு போகலையா? ஏதோ இன்ஸ்பெக்ஷன்னு சொல்லி, ஒன்-ஹவர் முன்னாடியே போக சொல்லிட்டாங்க. அதான், நேரா இங்க வந்துட்டேன்,'' என்றாள்
 காக்கி சட்டைக்காரர்...கந்து வட்டி வசூலில் கெட்டிக்காரர்

தனது வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து, அலுவலகம் சம்பந்தமான கடிதங்களை, 'லேப்-டாப்'பில் பதிவு செய்து கொண்டிருந்தாள் சித்ரா. அப்போது உள்ள வந்த மித்ரா, ''ஹாய்.. அக்கா!,'' என்றபடியே, அவளது தோளை தட்டினாள்.
''என்னடீ.. சொல்லாம.. கொள்ளாம வந்து நிற்கற. காலேஜ்க்கு போகலையா? ஏதோ இன்ஸ்பெக்ஷன்னு சொல்லி, ஒன்-ஹவர் முன்னாடியே போக சொல்லிட்டாங்க. அதான், நேரா இங்க வந்துட்டேன்,'' என்றாள் மித்ரா.
''ஓ.கே., மித்து கொஞ்சம் வெயிட் பண்ணு. காபி போட்டுத்தரேன்'' ''சரிங்க்கா'' என்ற மித்ரா, டேபிள் மீதிருந்த நாளிதழை புரட்டியபடியே, ''பணத்துக்காக பனியன் தொழிலதிபரை கடத்தி கொலை செய்யப்பட்டதில், போலீசார் ரொம்ப ஸ்பீடா குற்றவாளிகளை பிடிச்சு, 'சபாஷ்' வாங்கிட்டாங்க்கா. இதே மாதிரி மற்ற விஷயங்களிலும், கவனத்தை செலுத்தலாமே..!'''என்றாள்.
''இது விஷயத்தில, 'மாஜி' மந்திரி டைரக்டா, சி.எம்., கிட்டே பேசியிருக்கார். அங்கிருந்து உத்தரவு வந்த பின்னாடிதான் போலீஸ் நெட்ஒர்க் இயங்குச்சாம். சம்பவம் நடந்த சூடு ஆறுவதற்குள், வேலை ஜரூரா நடந்திருக்கு,'' என்று சித்ரா சொன்னதும், ''ஓ... இதைத்தான், 'சிதம்பர' ரகசியமுன்னு சொல்றாங்களா?'' என, சிரித்தாள் மித்ரா.
''கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில், கெரசின் 2 லி., வாங்கினால் 3 லிட்டருக்கும், பருப்பு வாங்கியதாக பில் போட்டும், மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., வருதாம். கடையில், கேட்டால், அடுத்த மாதம் அதை சேர்த்து வாங்கிக்கோங்க. இப்படி பதிவு செய்தால் தான் பி.ஓ.எஸ்., மெஷின் வேலை செய்கிறதுன்னு, சமாளிக்கிறாராம். இதை யாரும் கேட்க மாட்டாங்களா அக்கா,''
''மித்து... நீ சொல்றது புரியுது. எந்த ஆபீசில் பார்த்தாலும், லஞ்சம் தாண்டவம் ஆடுது. ரேஷன் கடை மட்டுமே விதிவிலக்கா என்ன?''''இதெல்லாம் எப்ப மாறுமோ? அதை விடுங்க்கா. சூரியக்கட்சியின் மகளிர் அணி கூட்டத்தில் ஏதேனும் விசேஷம் உண்டுங்களா?''''இப்போ பதவியில் உள்ள பலர் மீதும் சரமாரியான குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. புடவை, பூ தருவதில் கூட பாரபட்சம் காட்டுகின்றனர் என புகார் பட்டியல் வாசிச்சாங்களாம். பதவி வாங்கி விட்டு கட்சி பணி செய்யாதவர்கள் எப்படி ஓட்டு வாங்கி தர முடியும் என ஏகத்துக்கும் எகிறீட்டாங்களாம். ஏற்கனவே, இந்த மாதிரி விஷயத்துல சூடுகண்ட பூனையான மாவட்டம், எதையும் வெளியே தெரியாத வகையில், தொடர்ந்து கமுக்கமாக கூட்டத்தை நடத்தி முடிச்சிட்டார் மித்து,''
''ஓேஹா... அதுதான் விஷயமா? ஆளுங்கட்சியில் மட்டும் என்ன வாழுது. மூடப்பட்ட 'டாஸ்மாக்' கடை திறப்பதில் இலை கட்சிக்குள் கோஷ்டி பிரச்னை முத்தி விட்டது தெரியுமா,''''இருங்க சொல்றேன். பல்லடம் ரோடு கடையை பற்றிதானே கேட்கறீங்க. மேலிடத்திலிருந்து கடை திறக்க வந்த உத்தரவை மோப்பம் பிடித்த ஒரு தரப்பு, அதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சிலரை ஏற்பாடு செய்து, மறியல் செய்ய அனுப்பியிருக்காங்க. ஆனா, பாதி வழியிலயே எதிரில் வந்த போலீசார், 'மறியல் பண்ணீங்கன்னா, ரிமாண்ட் பண்ணுவோம்,' என்று சொல்ல, போராட்டத்துக்கு வந்தவர்கள், 'கிரேட் எஸ்கேப்பாம்,''''அது.. சரிடீ... மதுக்கடைக்கு எதிரான போராட்டம் என்றால், அது நல்லதுதானே,''''அட... நீங்க வேற. போராட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சதே, அங்க 'பார்' நடத்தும் ரெண்டு வி.ஐ.பி., தானாம். இங்கு கடை வந்தால், விற்பனை பாதிக்குமுன்னு, இப்படி ஒரு டிராமாவை செட் பண்ணியிருக்காங்க,''
''ஓ... விஷயம் அப்படி போகுதா. இந்த மாதிரி ஆளுங்கட்சிக்காரங்க நடந்தால், மக்களிடம் 'அன்பு' அகத்திலும் இருக்காது. ஆனால், இப்படியே விட்டா, ஒரு 'நீதி'யும் கிடைக்காதுன்னு, 'கரை' கண்ட எம்.எல்.ஏ., 'என்ன ஆனாலும், சரி, கடையை திறக்காமல் விட மாட்டேன் என 'நடராஜர்' போல் நடனமாடினாராம்,''
''ஏன்.. மித்து ரொம்ப லேட்டாயிடுச்சா? வெயிட் பண்ணு. ரெண்டே நிமிஷத்தில, டீ போட்டு தரேன்,'' என்று சொல்லி கிச்சனுக்குள் நுழைந்தாள் சித்ரா.சொன்ன மாதிரியே, ஆவி பறக்க டீ, ஸ்னாக்ஸ் தட்டுடன் வந்த சித்ரா, ''ஏய்... மித்து சாப்பிடு,'' என்றாள்.''ஆஹா... சூப்பர் பக்கோடா. ஏலக்காய் டீ. செம காம்பினேஷன் போங்க,'' என்ற மித்ரா, பக்கோடாவை கொறித்தபடி, ''யார் செலவு பண்றதுங்கற போட்டியில, காவிரி மீட்பு வெற்றி விழா கூட்டம் நடத்தவே இல்லையாங்க்கா,'' என்றாள். ''என்ன, மாவட்டம் பூரா நடத்திட்ட மாதிரி சொல்ற? எங்கயுமே நடந்த மாதிரி தெரியலையே?'' என்றாள் சித்ரா.
''எப்படி தெரியுங்கறேன். யார் தலையில செலவ கட்டலாம்னு மாவட்ட நிர்வாகிங்க யோசிக்கறாங்க. எம்.எல்.ஏ.,க்களே செலவ செய்ய வேண்டியிருக்கறதால, சில தொகுதிகளில், 'சிக்கனமா' செலவு முடிஞ்சிருச்சு. 'சவுத்'தில், தண்ணியிலயே வெண்ணெய் எடுத்துடுவாங்க,''''ஆளுங்கட்சியா இருக்கறப்பவே இந்த நெலமைன்னா, கட்சி எங்க போயி முட்டி மோதி நிக்கும்னு தெரியலைன்னு, இலைக்கட்சி தொண்டர்கள் கண்ணீர் வடிச்சுட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''வாங்குவாங்க.. கொடுக்க மாட்டாங்க. எல்லாம் ஒன்வேதான் மித்து. இந்த கூத்தைக்கேளு. நான்காம் குடிநீர் திட்டத்துக்கு, மேட்டுப்பாளையத்துல, திருப்பூர் கார்ப்ரேஷன் சார்பில், அஞ்சு ஏக்கர் நிலம் வாங்கியிருக்காங்க. அதுக்கு போறதுக்கு தடம் இல்லையாம். இதனால, 85 சென்ட் தனியா வாங்கப்போறாங்களாம்''''ஆனா, அந்த இடம், 28 பங்காளிகளுக்கு சொந்தங்கிறதால, 'சவுத்' பிரதிநிதியோட, ஆளுங்க, அந்த 28 பங்காளிங்களை, தேடி கண்டுபிடிக்கற வேலையில இறங்கிட்டாங்களாம்,''''அப்புறம் இடம் வாங்கினாங்களா.. இல்லையா?''''அட... நீ வேற. 'நிலம் வாங்கறதுக்கான வசூல் வேட்டையில, எப்பவும்போல, 'சவுத்' தான் முன்னிலையில இருக்காராம். வி.ஐ.பி.,க்களை சந்திச்சு, 'செம' கலெக்ஷன் பண்ணிட்டாராம். ஏதாவது ஒரு பஞ்சாயத்து வந்தா, அங்க போயி பேசி, ஒரு 'தொகை'யை கறந்துடறாராம்,''''யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. மேட்டுப்பாளையம் தண்ணீர் வேணும்னா, பணம் வசூல் பண்ணித்தான் ஆகோணும்'ன்னு தைரியமா சொல்லியே, வசூல் பண்ணிட்டு இருக்கார்னா பார்த்துக்கோ,'' என்று நீ....ண்ட விளக்கமளித்தாள் சித்ரா.''அடேங்கப்பா,'' என்ற மித்ரா, ''நார்த் தாசில்தார் நிம்மதியா 'ரிட்டயர்டு' ஆகிட்டாரு தெரியுங்களா''என்றாள்.
''ஆமாம், நாம கூட, டெய்லி, இருட்டான பின்னாடி மட்டுமே ஆபீசுக்கு வர்றார்னு பேசியிருந்தோம். அவருக்கு, சென்னை ஐகோர்ட், 50 ஆயிரம் ரூபாய் பைன் போட்டுடுச்சுடீ''''இதைப்பத்தி, மேலதிகாரிகள் கேட்டப்ப, 'எனக்கு, கோர்ட்ல இருந்து யாருமே தகவல் சொல்லலை. தெரிஞ்சிருந்தா, ஆஜர் ஆகியிருப்பேன்'ன்னு சாக்குபோக்கு சொல்லி சமாளிச்சுட்டாரு. உடனே, ஐகோர்ட்டுக்கு போன தாசில்தார் ''ஐயா, நான் ரிட்டயர்டு ஆகப்போறேன். என்னை விட்டுடுங்க'ன்னு, சரண்டர் ஆகிட்டாரு,''''கலெக்டர் சொன்னா, வேலையை செய்ய முடியாதா? இதுக்கு கோர்ட்டுக்கு வந்துதான் முடிக்கணும்மா'ன்னு, '50 ஆயிரம் ரூபா அபராதத்தையும் ரத்து செஞ்சுட்டாங்க.' 'அப்பாடா... தப்பிச்சோம்... பிழைச்சோம்,'ன்னு, திருப்பூருக்கு ஓடி வந்திட்டாரு,''''அப்ப, ஒரு வழியா தப்பிச்சிட்டாருன்னு சொல்லுங்க,'' சொல்லி சிரித்த மித்ரா, ''ஏங்க்கா, சிட்டியில முக்கிய பொறுப்பு வகிக்கும் போலீஸ் அதிகாரி, குடியிருக்கிற வீட்டுக்கு வாடகையே தர்றதில்லையாம்,'' என்றாள்.
''ஆமாம். உண்மைதான். அந்த அதிகாரி, வேலம்பாளையத்துக்கு பக்கத்திலுள்ள 'தங்க'மான புரியில் உள்ள பெரிய வீட்டில் குடியிருக்கிறார். வீட்டு உரிமையாளர் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கிறார். அவரிடம் கடன் வாங்கிட்டு, கொடுக்காதவர்களிடத்தில், பணத்தை வசூலிக்க இந்த அதிகாரி மூலமாக காய் நகர்த்துறாராம்,''''இதற்கு பிரதிபலனா, வீட்டுக்கு வாட கையை வாங்குறதில்லையாம். எப்படி 'டீல்' ஓ.கே., வா?'' என்றாள் சித்ரா.''இப்படியும் நடக்குமாங்க்கா''
''வட்டிக்கு வசூல் பண்றதுக்கு சப்போர்ட் பண்ணறது தெரிஞ்சு, மத்த அதிகாரிங்கிட்ட, இவருக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறதாம்,'' என சித்ரா சொல்லி கொண்டிருக்கும்போதே, 'ஆட்டமா... தேரோட்டமா...' என அவளது மொபைல் போன் ரிங்டோனை வெளியிட்டது. பேசி விட்டு போனை அணைத்து வைத்த சித்ராவிடம், ''ஏங்க்கா... நீங்க வைச்சிருக்கிற பாட்டு, 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் வர்றதுதானே,'' என்று மித்ரா சந்தேகம் கேட்டாள்.''பரவாயில்லையே... கரெக்டா கண்டுபிடிச்சுட்டியே. வெரிகுட்,'' என்றாள் சித்ரா.''ரொம்ப டேங்ஸ்,'' என காமெடியாக சொன்ன மித்ரா, ''இரு ஸ்டேஷன் எல்லையில, மணியகாரம்பாளையம் நொய்யல் ஆத்துப்பாலம் அருகே உள்ள சுடுகாட்டில் ஒரு நம்பர் லாட்டரி ஓேஹான்னு விக்குதாமா?'' என்றாள்.
''ஆமாம். பாலத்துக்கு ரெண்டு பக்கம் அமைந்துள்ள 'டாஸ்மாக்' பாரிலும், லாட்டரி விக்கிறாங்க. இது 'வடக்கா, ரூரலா'ன்னு போலீசார் குழம்பறதால, லாட்டரி விற்கறவங்க காட்ல மழையாம். கரெக்டான லிமிட்டில் இருந்தாலும் விப்பாங்க. இங்க எல்லைப்பிரச்னை தெரிஞ்சும், சும்மா புகுந்து விளையாடுறாங்களாம்,'' சித்ரா விளக்கியதும், ''காஷ்மீரில்தான் எல்லை பிரச்னைன்னு சொன்ன, இங்கயுமா?'' என்றாள் மித்ரா.
''இந்த 'டாஸ்மாக்' கடையினால், ஏற்படும் பிரச்னை ஓயாது போலிருக்கு. அனுப்பர்பாளையத்தில் உள்ள ஒரு மதுக்கடையில் இருந்து சரக்குகளை, பெட்டி பெட்டியா, பிரைவேட் பாருக்கு விற்கிறாங்களாம். பிரைவேட் பார் நடத்தறவங்க, அரசிடம் நேரடியாக கொள்முதல் செய்தால், விலை ஜாஸ்திங்கறதால, 'டாஸ்மாக்' கடையில், சிலரை கைக்குள்ள போட்டுக்கிட்டு, இப்படி செய்யறாங்க. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு. ஊழியருக்கு அதிகரிப்பு... வேறென்ன?'' என்று சலித்து கொண்டாள் சித்ரா.
''நேரமாச்சுக்கா. நான் கெளம்பறேன்,'' மித்ரா சொன்னதும், ''இரு.. நான் வண்டியில டிராப் பண்றேன்,'' என்ற சித்ரா, ஹெல்மெட் சகிதம் புறப்பட, மித்ரா பின்னே சென்றாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X