பதிவு செய்த நாள் :
ரஜினி மனைவி லதாவுக்கு
சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

புதுடில்லி : தனியார் நிறுவனத்திடம், 6.2 கோடி ரூபாய் பெற்று, அதை திரும்ப செலுத்தாத, நடிகர் ரஜினியின் மனைவி, லதாவுக்கு, வழக்கை சந்திக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஜினி,மனைவி,லதா,லதா ரஜினிகாந்த்,சுப்ரீம் கோர்ட்,எச்சரிக்கை


நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, 'மீடியா ஒன்' என்ற நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். கடந்த, 2014ல், ரஜினி நடித்த கோச்சடையான் படம் வெளியிடுவதற்கு முன், தனியார் விளம்பர நிறுவனத்திடமிருந்து, மீடியா ஒன் நிறுவனம், 6.2 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த பணத்தை, லதாவின் சொந்த உத்தரவாதத்தில், மீடியா ஒன் நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், மூன்று மாதத்திற்குள்

பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால், லதா, தன் சொந்த பணத்தை திரும்ப தருவதாக வாக்களித்ததாகவும், அந்த நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்த பணத்தை, லதா, திரும்ப செலுத்தாததால், இது தொடர்பாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கோர்ட்டில், விளம்பர நிறுவனம் தொடர்ந்த வழக்கை கர்நாடக உயர் நீதின்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, தனியார் விளம்பர நிறுவனத்தின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

லதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இதற்கு முன், லதா சார்பில் வாதாடிய வழக்கறிஞர், லதாவின் அனுமதியின்றி, அவரது சொந்த பணத்தை, தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதாக தவறான வாக்குறுதி அளித்துள்ளார்' என்றார்.

Advertisement

இதையடுத்து, மீடியா ஒன் நிறுவனம் சார்பில், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறியதாவது: ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலம் முடிந்து விட்டதால், லதா தான், தர வேண்டும். நீங்கள் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே, இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. அது, உண்மையா, இல்லையா என்பது விசாரணையின் முடிவில் தெரிய வரும். எனவே, வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். விசாரணை, அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sulikki - Pudukkottai,இந்தியா
04-ஜூலை-201823:25:45 IST Report Abuse

Sulikkiஇந்த லட்சணத்துல ரஜினியின் ஆட்சி வந்தா, தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது. யோகியன் வர்றான் சொம்புதூக்கி உள்ள வையுங்க மக்களே.

Rate this:
mariyappangopinathan - Chennai,இந்தியா
04-ஜூலை-201817:26:58 IST Report Abuse

mariyappangopinathanமகா ஜனங்களே நல்லா பாத்துக்குங்க. இங்க ரஜினி தான் ஜெ. லதா தான் ச. இந்த நிலைல ரஜினிக்கே ஒட்டு போடுங்க. ஆட்சி நல்லா இருக்கும்.இப்ப நடக்குற கூத்து போல நெறய பாக்கலாம். இந்த சந்தர்ப்பத்தை நழுவ உட்டுட்டா சிஸ்டம் நல்லா இருக்காது. தெரிஞ்சுக்குங்க சொல்லிட்டேன்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜூலை-201817:14:19 IST Report Abuse

Endrum Indianரஜினியின் உண்மையான மனைவி இவர்தான். ரஜினி சொல்வது ஆன்மீக அரசியல் அவர் மனைவி செய்வது அராஜக அரசியல். கணவனுக்கு நேர்மாறாக செய்வது தான் உண்மையான மனைவிகளின் அடையாளம்.

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
04-ஜூலை-201818:27:43 IST Report Abuse

BoochiMarunthuஜாடிக்கு ஏத்த மூடி என்று சொல் . இரண்டுபேரும் திட்டம் இட்டு தான் இப்படி செய்கிறார்கள் . ...

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X