பதிவு செய்த நாள் :
நேபாளத்தில் சிக்கிய 150 இந்தியர்கள் மீட்பு;
மீதமுள்ளவர்களை மீட்க மத்திய அரசு தீவிரம்

புதுடில்லி : கனமழை காரணமாக, அண்டை நாடான, நேபாளத்தில் சிக்கிய, கைலாஷ் மானசரோவர் யாத்திரை பக்தர்களில், இரண்டு பெண்கள் உட்பட, மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 150 பேர், பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள பக்தர்களையும் மீட்க, மத்திய அரசு, மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

நேபாளம்,150 இந்தியர்கள்,மீட்பு,மீதமுள்ளவர்களை,மீட்க,மத்திய அரசு,தீவிரம்


இமயமலையில் உள்ள, புனித தலமான கைலாஷ் மானசரோவருக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர், நேபாள நாட்டின் வழியாக, ஒவ்வொரு ஆண்டும் யாத்திரை செல்வது வழக்கம். இந்தாண்டுக்கான, கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து, 1,500 பேர் சென்றனர். தரிசனம் முடிந்து, நேபாளம் வந்து, அங்கிருந்து விமானத்தில், அவர்கள் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நேபாளத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நேபாளம் மற்றும் சீன எல்லை பகுதியில் உள்ள, ஹில்சாவில் தங்கியிருந்த இந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள் சிலர், அங்கிருந்து வேறு இடங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவானது.

இது குறித்து, வெளியுறவு துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிட வசதிகளை செய்து தரும்படி, நேபாளத்தில் உள்ள, இந்திய துாதரக அதிகாரிகளுக்கு, வெளியுறவு துறை உத்தரவிட்டது. முதியோருக்கு மருத்துவ சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஹில்சாவில், 550 பேரும்; சிமிகோட்டில், 525; திபெத் பகுதியில், 500 பேரும் சிக்கினர். ஹில்சா பகுதியில், உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவு என்பதால், அங்கு சிக்கியவர்களை, சிமிகோட் பகுதிக்கு அழைத்து வர முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீட்பு பணிக்கு, மத்திய அரசு சார்பில், இரண்டு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று, ஹில்சா பகுதியில் இருந்து, 104 பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான சிமிகோட் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதுவரை, ஹில்சாவில் இருந்து, 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 'அவர்கள், சிமிகோட்டில்

இருந்து, விமானங்களில், நேபாள்கஞ்ச்சுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து சாலை வழியாக, உ.பி., மாநிலம், லக்னோ அனுப்பப்படுவர்' என, துாதரக அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே, ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த, கிராந்தி சுப்பாராவ், ஹில்சாவில் உயிரிழந்தார். 'அவரது உடல், நேபாள்கஞ்ச் எடுத்து வரப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பின், சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படும்' என, துாதரக அதிகாரிகள் கூறினர்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று திரும்பிய, கேரளாவை சேர்ந்த, லீலா மஹேந்திர நாராயண், 56, நேபாளத்தில், சிமிகோட் பகுதியில் தங்கியிருந்த போது உயிரிழந்தார். அவரது உடலில், ஆக்சிஜன் அளவு குறைந்ததால், உயிரிழந்ததாககூறப்படுகிறது.

திபெத்தில் சிக்கிய, ஆந்திராவை சேர்ந்த, சத்ய லக் ஷமி, மாரடைப்பால் உயிரிழந்தார். இருவரது உடல்களும், ஹெலிகாப்டரில், காத்மாண்டு மற்றும் நேபாள்கஞ்ச்சுக்கு எடுத்து வரப்படுவதாக துாதரக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

நேபாள தலைநகர், காத்மாண்டுவில் உள்ள, இந்திய துாதரக அதிகாரிகள், தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதுடன், பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

18 தமிழர்கள் மீட்பு :


வெளியுறவு அமைச்சக உதவியுடன், தமிழகத்தை சேர்ந்த, 18 பேர், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக, யாத்திரை சென்ற பக்தர்களில் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த, பெண் யாத்திரீகர், ஜி.ஆனந்தம், 53, கூறியதாவது: கடந்த ஜூன், 20ல், சென்னையில் இருந்து விமானம் மூலம், உ.பி., மாநிலம் லக்னோவுக்கு, 23 பேர் சென்றோம். கடந்த, 25ல், மானசரோவரில் பூஜைகள் முடித்து, தமிழகத்துக்கு திரும்ப தயாரானோம்; ஹில்சா பகுதியில் இருந்து, சிறிய ஹெலிகாப்டர் மூலம் சிமிகோட் வந்தோம். 29ல், நேபாள்கஞ்ச் செல்வதற்காக எங்களை போல் ஏராளமானோர் காத்திருந்தனர்.

தமிழகத்தை சேர்ந்த, 23 பேரில், நான் உட்பட, நான்கு பேர் மட்டுமே விமானத்தில் செல்ல, 'பாஸ்' கிடைத்தது. இதையடுத்து, நாங்கள் சென்னை திரும்பினோம். என் மகன், கோபாலகிருஷ்ணன், 21, உட்பட, மீதமுள்ள, 19 பேரும், பத்திரமாக திரும்பி விடுவர் என்ற நம்பிக்கையுடன் இருந்தபோது,

Advertisement

மோசமான வானிலையால், எந்த விமானமும் செல்லவில்லை என்பதை அறிந்து, அதிர்ச்சி அடைந்தோம். அதன் பின்னும், வானிலை மோசமாக இருந்ததால், ஜூன், 29 முதல், ஜூலை, 3 வரை, சிமிகோட்டிலேயே, 19 பேரும் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

போதிய மாற்று உடை, உணவு இன்றி, அவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாக நேரிட்டது. இதனால், சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, சிமிகோட்டில் சிக்கியிருந்த எங்கள் குழுவை சேர்ந்தவர்களில் ஒருவரான, தீனதயாளன், தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளர்களை தொடர்பு கொள்ள முடிந்தது. இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவி கிடைத்தது. வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகளின் உதவியால், விமானம் மூலம், ஒருவர் தவிர, மீதமுள்ள, 18 பேர், நேபாள்கஞ்ச் விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள், இன்று சென்னை திரும்புவர் என, எதிர்பார்க்கிறேன். எங்கள் குழுவை சேர்ந்தோரில் ஒருவர், உடல் நிலை சரியில்லாததால், அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த, 18 பேர் தவிர, மேலும் சில தமிழர்கள், நேபாளத்தில் சிக்கியுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

'நேபாளத்தில் சிக்கியோர் பாதுகாப்பாக உள்ளனர்' :

''நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழக யாத்ரீகர்கள், பாதுகாப்பாக உள்ளனர்,'' என, மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார். சென்னையில், அவர் கூறியதாவது: சென்னையை சேர்ந்த, 23 பேர், நேபாளத்திற்கு யாத்திரை சென்றனர். அங்கு வானிலை, மிக மோசமாக உள்ளது. 'சிமிகோட்' என்ற இடத்தில், அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். மத்திய அரசை தொடர்பு கொண்டதோடு, நேபாள நாட்டின், வெளியுறவுத் துறையையும் தொடர்பு கொண்டுள்ளோம். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை, அவர்கள் உறுதி செய்துள்ளனர். தற்போது, வானிலை மிக மோசமாக உள்ளது. நிலைமை சரியான பின், அவர்கள் பத்திரமாக தமிழகம் அழைத்து வரப்படுவர். இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
04-ஜூலை-201819:03:34 IST Report Abuse

Srinivasan Kannaiyaகைலாஷ் மானசரோவர் யாத்திரை சொல்லுபவர்கள் கிளம்புவதற்கு முன்பாக தமிழ் நாடு அரசுக்கு பிணைய தொகையாக ஐம்பதினாயிரம் கட்டவேண்டும் ,, அவர்கள் திரும்பி வந்தவுடன் அந்த தொகை திருப்பிதரப்படும்... இதுமாதிரியான ஆபத்து காலங்களில் அந்த தொகையை கொண்டு அவர்களை மீட்கலாம்... இந்த ஒரு தொகை இதுமாதிரி செல்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும்...

Rate this:
Ramesh Natarajan - chennai,இந்தியா
04-ஜூலை-201818:43:54 IST Report Abuse

Ramesh Natarajanஇந்த யாத்திரை செல்வதற்கு உகந்த மாதங்களை அறிவித்து, யாத்திரையை பத்திரமாக அப்போது மேற்கொள்ள மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும். ஏன் என்றால் இந்த நிகழ்வு மறுபடியும் மறுபடியும் ஏற்படுகிறது.

Rate this:
Thangam - Chennai,இந்தியா
04-ஜூலை-201814:44:29 IST Report Abuse

Thangamநலமுடன் திரும்பட்டும்

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X