பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஸ்டெர்லைட் ஆலை, திறக்க,கோரிக்கை,வலுக்கிறது

துாத்துக்குடி : மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையால், வேலை இழந்த தொழிலாளர்கள், மீண்டும் ஆலையை திறந்து, வேலை அளிக்க வேண்டும் என, அமைச்சர், கலெக்டர் மற்றும் சட்டக் குழுவிடம் மனு அளித்து வலியுறுத்தி உள்ளனர். தங்களை மூளை சலவை செய்து, போராட்டத்தை துாண்டிய போர்வையாளர்கள் மீது, கோபத்தை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர்.

துாத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மே, 22ல் கலெக்டர் அலுவலகத்தை முற்று கையிடும் போராட்டம் நடந்தது; இதில் வன்முறை வெடித்தது. போலீசாரின் துப்பாக்கி சூட்டில், 13 பேர் பலியாயினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலை, மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள கந்தக அமிலம், வெளியேற்றப்பட்டு வருகிறது. பாஸ்பாரிக் அமிலம் உள்ளிட்ட மற்ற வேதிப்பொருட்களையும், அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.

இந்நிலையில், 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் வக்கீல்கள் தான், எங்களைத் துாண்டி விட்டனர்' என, மடத்துார் கிராம மக்கள் சட்ட பணிகள் குழுவிடம், நேற்று முன்தினம் மனு அளித்தனர். இதன் மூலம் போராட்டத்தை துாண்டிய போர்வையாளர்கள் மீதான மக்களின் கோபம், வெளிப்படத் துவங்கிஉள்ளது தெரிகிறது.

ஆலை மூடப்பட்டதால், வேலை, வருமானம் இன்றி, துாத்துக்குடியை சுற்றியுள்ள மக்கள் அவதிப்படுவதும் தெரிய வந்து உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு, ஒன்றரை மாதம் ஆகியுள்ள நிலையில், அங்கு பணியாற்றிய நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், சப்ளையர்கள், லாரி தொழிலாளர்கள் என பலரும், வருமானம் இன்றித் தவிக்கின்றனர்.

அமைச்சரிடம் முறையீடு:


ஸ்டெர்லைட் ஆலையில் நேரடியாக, ௧,௦௦௦ ஊழியர்களும், ஒப்பந்த தொழிலாளர்கள், 5,000 பேரும் பணியாற்றினர். நேற்று முன்தினம் துாத்துக்குடி வந்த, செய்தித் துறை அமைச்சர் ராஜுவை சந்தித்த ஒப்பந்த தொழிலாளர்கள், தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு, மனு அளித்தனர்.

ஸ்டெர்லைட் அனைத்து ஒப்பந்ததாரர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர், தியாகராஜ், செயலர், திருமணி மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று முன்தினம் கலெக்டர், சந்தீப் நந்துாரியை சந்தித்து, ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சங்க தலைவர் தியாகராஜ் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலை மூலம், துாத்துக்குடி, பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை, 1996ல் செயல்பட துவங்கியதில் இருந்தே, அதில், நெல்லை, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த, 70 சதவீதம் பேர் பணியாற்றினர். நேரடி பணியாளர்களாக, 1,100 பேரும், ஒப்பந்த தொழிலாளர்களாக, 5,000 பேரும் பணியாற்றினர். லாரி தொழிலாளர்கள், சப்ளையர்கள் என, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். இவர்கள் அனைவரும், தற்போது வேலையை இழந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டெர்லைட் பணியாளர்கள் தரப்பில் கூறியதாவது: ஸ்டெர்லைட் நிறுவனம் மீது, ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் ஆலை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. ஆலையில் இருந்து, ஒரு சொட்டு கழிவு நீர் கூட வெளியேற்றப்படவில்லை.

உண்மை இல்லை :


அனைத்து விதமான திரவ கழிவுகளும், உள்ளேயே, உலகத்தரம் வாய்ந்த கருவிகள் உதவியுடன் சுத்திகரிக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் துாத்துக்குடியில் புற்றுநோய் பாதிப்பு

அதிகமாகியுள்ளது என்ற குற்றச்சாட்டிலும் உண்மையில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிபரங்களின்படி, புற்றுநோய் பாதிப்பில், துாத்துக்குடி, 14வது மாவட்டமாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் மூலம், துாத்துக்குடி வளர்ச்சியடைந்துள்ளது. துாத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஆண்டுதோறும் நடக்கும் ஏற்றுமதி, இறக்குமதியில், 17 சதவீத வருமானம், ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் கிடைத்து வந்தது.

குறிப்பாக, ஓர் ஆண்டுக்கு தாமிர தாது, 10 லட்சம் டன்னும், ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளில் இருந்து ராக்பாஸ்பேட் எனும் தாதுப்பொருள், 7 லட்சம் டன்னும் இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும், 'சல்ப்யூரிக் ஆசிட்' எனப்படும் கந்தக அமிலம், பல்வேறு தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளாக பயன்படுகிறது.

துாத்துக்குடியில் ஸ்பிக் தொழிற்சாலை, கொச்சி பேக்ட் தொழிற்சாலை, கோழித்தீவன தொழிற்சாலைகள், சோப்பு கம்பெனி போன்றவற்றிற்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்தது. ஒரு டன் கந்தக அமிலம், 4,000 ரூபாய்க்கு சப்ளை செய்து வந்த நிலையில், தற்போது குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து இதே தொழிற்சாலைகள், ஒரு டன் கந்தக அமிலத்தை, 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து பெறுகின்றன.

தென் மாவட்டங்களில் இயங்கும் தனியார் சிமென்ட் ஆலைக்கு ஜிப்சம் சப்ளை அளித்துவந்தது. தற்போது அதுவும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஸ்டெர்லைட் மூலம் எந்த ஆபத்தும் இல்லை என, நிரூபிக்கப்பட்ட நிலையில் வேண்டுமென்றே குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அவற்றில், தற்போது உண்மையில்லை என்பது மக்களுக்கு தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

துாத்துக்குடி துறைமுகத்திற்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் இடையிலேயே தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகள் இயங்கிக் கொண்டிருக்கும். மேலும் ஸ்டெர்லைட்டிற்கு மெஷின் சப்ளையர்கள், ஹார்ட்வேர்ட் பொருட்கள் சப்ளையர்கள் என துாத்துக்குடி வியாபாரிகளும் பயன்பெற்றனர்.

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நம்பியிருக்கும் குடோன்கள், ஓட்டல் தொழிலாளர்கள் துாத்துக்குடியில் வசிக்கும் ஆலை தொழிலாளர்கள், வருமானம் இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக வருமானம் இன்றி, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே அரசு மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை, அனைத்து தரப்பிலும் வலுக்கிறது.

கோபம் :


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை துாண்டியது, மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி, நாம் தமிழர் போன்ற அமைப்பினர் தான் என்பது தற்போதைய நடவடிக்கைகளால் மக்களுக்கு தெரியவந்துள்ளது. இது அவர்கள் அளித்து வரும் மனுக்களை வைத்தே அறிய முடிகிறது.

தங்களை மூளைச்சலவை செய்து, போராட்டத்தை துாண்டிவிட்டது இவர்கள் தான், என துாத்துக்குடி திரேஸ்புரம் மீனவ மக்களும், மடத்துார் மக்களும் சட்டக்குழுவிடம் மனு அளித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில், நேற்று துாத்துக்குடியை அடுத்துள்ள புதியம்புத்துாரில் ஒரு திருமண மண்டபத்தில், கலெக்டர் சந்தீப் நந்துாரி சுற்றுவட்டார மக்களை சந்தித்து பேசினார். அங்கு வந்த மக்களும் இக்கருத்தையே குறிப்பிட்டு, மீண்டும் சுமுகமான சூழல் ஏற்படவேண்டும் என்பதை வலியுறுத்தினர். துாத்துக்குடியில் நேரடியாகவும், மறைமுகமாக வேலைவாய்ப்பு இழந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.


Advertisement

வாசகர் கருத்து (234)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amarnath - manchester,யுனைடெட் கிங்டம்
10-ஜூலை-201800:44:49 IST Report Abuse

amarnathஎல்லாம் காசு சார், இங்க தயாரிக்கிறது ருதுல 80 % வெளிநாடு குத்தான் போது சோ ஒரேடியா பூட்டிவிடலாம், இப்போ ஸ்டெர்லிட் கரண் every கிராமத்தை வாங்க ஆரம்பிச்சிட்டான் நம்ம மக்களுக்கு 1000 ரூபாய் போதும் எல்லாத்தையும் வித்து விடுவாங்க ஒரு நாள் அந்த நடுறே(இயற்கை) வந்து படு படுத்தும் அப்போ தெரியும் மக்கா andavan thaan நம்ம மக்களை காப்பாத்தணும்

Rate this:
Ashok Sundaram - pondy,இந்தியா
06-ஜூலை-201815:40:29 IST Report Abuse

Ashok Sundaramபொய்யான செய்தி .

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-ஜூலை-201806:24:34 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்பிரதமர் சொன்ன வழியில் பக்கோடா கடை வைக்க சொல்லுங்களேன்.

Rate this:
மேலும் 231 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X