பொது செய்தி

தமிழ்நாடு

ஓடையில் பிளாஸ்டிக் கழிவு

Added : ஜூலை 04, 2018
Advertisement

பொங்கலுார்:பொங்கலுார், அலகுமலையில் உற்பத்தியாகும் உப்புக்கரை ஓடை, அலகுமலை, கண்டியன்கோவில், படியூர், கத்தாங்கன்னி ஊராட்சி வழியே சென்று நொய்யலில் கலக்கிறது. பொங்கலுார் பகுதியில் உற்பத்தியாகும் பெரிய ஓடைகளில் இதுவும் ஒன்று.படியூர், கண்டியன்கோவில் ஊராட்சிக்குட்பட்ட தங்காய்புதுார் கரட்டு முனியப்பசுவாமி கோவில் அருகே, ஓடை புறம்போக்கு இடத்தில், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டியுள்ளனர். ஓடையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு, குளம், குட்டைகளில் தங்கி விடும்.
நீர் நிலை புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பு செய்வது; பாழ்படுத்துவது உள்ளிட்டவை கோர்ட் உத்தரவுக்கு எதிரானவை. கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்படாமல், அரசு அதிகாரிகளே முறைகேடான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 'நீர் நிலை புறம்போக்கு இடங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதிகாரிகளே பாழ்படுத்துவது, வேலியே பயிரை மேய்வது போல் ஆகி விட்டது. இவற்றை தனி மனிதர்களால் காப்பாற்ற இயலாது. அருகிலுள்ள ஊராட்சி குப்பையே இங்கு கொட்டப்பட்டுள்ளது. குப்பையை அகற்றவேண்டும்' என்று, இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.பொங்கலுார், ஜூலை 4--பொங்கலுார், அலகுமலையில் உற்பத்தியாகும் உப்புக்கரை ஓடை, அலகுமலை, கண்டியன்கோவில், படியூர், கத்தாங்கன்னி ஊராட்சி வழியே சென்று நொய்யலில் கலக்கிறது. பொங்கலுார் பகுதியில் உற்பத்தியாகும் பெரிய ஓடைகளில் இதுவும் ஒன்று.படியூர், கண்டியன்கோவில் ஊராட்சிக்குட்பட்ட தங்காய்புதுார் கரட்டு முனியப்பசுவாமி கோவில் அருகே, ஓடை புறம்போக்கு இடத்தில், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டியுள்ளனர். ஓடையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு, குளம், குட்டைகளில் தங்கி விடும்.
நீர் நிலை புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பு செய்வது; பாழ்படுத்துவது உள்ளிட்டவை கோர்ட் உத்தரவுக்கு எதிரானவை. கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்படாமல், அரசு அதிகாரிகளே முறைகேடான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
'நீர் நிலை புறம்போக்கு இடங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதிகாரிகளே பாழ்படுத்துவது, வேலியே பயிரை மேய்வது போல் ஆகி விட்டது. இவற்றை தனி மனிதர்களால் காப்பாற்ற இயலாது. அருகிலுள்ள ஊராட்சி குப்பையே இங்கு கொட்டப்பட்டுள்ளது. குப்பையை அகற்றவேண்டும்' என்று, இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X