பொது செய்தி

தமிழ்நாடு

நீர் நிலைகளில் எச்சரிக்கை பலகை வைக்கலாமே!

Added : ஜூலை 04, 2018
Share
Advertisement
அவிநாசி:'அவிநாசி, சுற்றுப்புற பகுதிகளில், குளம், குட்டையில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக அறிவிப்பு வைக்க வேண்டும்' என, தீயணைப்பு துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.அவிநாசி சுற்றுப்புற கிராமங்களில், அதிகளவில் குளம், குட்டைகள் உள்ளன. கடந்தாண்டுகளில், மழையின்மையால் வறண்டு போயிருந்த அவை, பருவமழையால் நிரம்பியுள்ளன. இந்நிலையில், பள்ளி மாணவ,

அவிநாசி:'அவிநாசி, சுற்றுப்புற பகுதிகளில், குளம், குட்டையில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக அறிவிப்பு வைக்க வேண்டும்' என, தீயணைப்பு துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.அவிநாசி சுற்றுப்புற கிராமங்களில், அதிகளவில் குளம், குட்டைகள் உள்ளன. கடந்தாண்டுகளில், மழையின்மையால் வறண்டு போயிருந்த அவை, பருவமழையால் நிரம்பியுள்ளன. இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவியர், இளைஞர்கள் பலர், குளம், குட்டை அருகே விளையாடுவது, அதில் நீச்சலடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பள்ளி விடுமுறை நாட்களிலும், சிறுவர், சிறுமியர் பலர் குளம், குட்டையில் விளையாடுவதை, பொழுது போக்காக கொண்டுள்ளனர். கடந்த ஏப்., மே மாதங்களில், குளம், குட்டையில் தவறி விழுந்து இறந்த சிறுவர், சிறுமியரின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில், பேரிடர் மேலாண்மை சார்ந்த விஷயத்தில், மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.அவிநாசி சுற்றுப்புற பகுதியை பொறுத்தவரை, குளம், குட்டைகளால் ஏற்படும் உயிரிழப்பு தான், பேரிடர் சார்ந்த பிரச்னையாக உள்ளது. 'இது விஷயத்தில், உள்ளாட்சி அமைப்புகள், கவனம் செலுத்த வேண்டும்' என்ற யோசனை எழுந்துள்ளது.தீயணைப்புத் துறையினர் கூறுகையில், 'குளம், குட்டை உள்ள இடத்தில், இறங்கி விளையாடவோ, நீச்சலடிக்கவோ கூடாது என்பது போன்ற எச்சரிக்கை வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகையை, உள்ளாட்சி அமைப்புகள் வைக்க வேண்டும். இதன் மூலம், பெற்றோர் மத்தியிலும், விழிப்புணர்வு ஏற்படும்.'மேலும், ஒவ்வொரு குளம், குட்டையின் ஆழம், சேறு, சகதி நிறைந்துள்ள பகுதி குறித்த விவரத்தை, மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம், குளம், குட்டைகளில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க முடியும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X