கல்வி உதவித்தொகை விண்ணப்பம் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித்தொகை விண்ணப்பம் வரவேற்பு

Added : ஜூலை 04, 2018

சிவகங்கை:அரசு மற்றும் உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் தனியார் தொழிற் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.முதுகலை, பாலிடெக்னிக் கல்லுாரி, தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களிலேயே விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். அவற்றை பூர்த்தி செய்து அக்., 15 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி கணக்கு எண் அவசியம் குறிப்பிட வேண்டும். அவற்றை கல்வி நிறுவனங்கள் www.tn.gov.in/bcmbcdept என்ற இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். புதுப்பித்தலை அக்., 15 க்குள், புதிய விண்ணப்பங்களை நவ., 30 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.விபரங்களுக்கு சிவகங்கை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம் என, கலெக்டர் (பொ) இளங்கோ தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X