பொது செய்தி

இந்தியா

செல்பி எடுப்பவர்களே உஷார்...கைரேகை திருடப்படலாம்

Added : ஜூலை 04, 2018 | கருத்துகள் (12)
Advertisement
செல்பி, கைரேகை, ரூபா

புதுடில்லி : கை விரலை காட்டி செல்பி எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும், அதனை பயன்படுத்தி உங்களின் கைரேகையை திருடிவிடுவார்கள் எனவும் கடந்த சில நாட்களாக வாட்ஸ்ஆப் போன்ற சமூகவலைதளங்களில் எச்சரிக்கை பரவி வருகிறது. பெரும்பாலானோர் இதனை வதந்தி என்றே கூறுகின்றனர்.

இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சிறை அதிகாரியாக இருந்து, பின்னர் சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் அளிக்கப்படுவதாக எழுந்த சர்ச்சையால் பிரபலமான ஐபிஎஸ் அதிகாரி ரூபாவும் தற்போது இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு அவர் விளக்கமும் கொடுத்துள்ளார்.

அதில், கை விரல்கள் தெரியும்படி போட்டோ எடுத்து பதிவேற்றம் செய்யும் போது, அவற்றில் உள்ள விரல்களை ஜூம் செய்து, கைரேகையை நகல் எடுக்க முடியும். தவறு நடக்கும் இடங்களில் இருந்து போலீசாரின் கவனத்தை திசை திருப்பி தப்பிக்க குற்றவாளிகள் அந்த ரேகைகளை விட்டுச் செல்ல வாய்ப்புள்ளது என்றார். இந்த தகவலை சமூகவலைதளங்களை பயன்படுத்துவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஜூலை-201806:16:18 IST Report Abuse
a.thirumalai தப்பு பண்றவனுக்கு தண்டனை மட்டும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் மக்களுக்கு எச்சரிக்கை மட்டும் கடுமையாக கொடுக்கப்படும். குற்றம் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை விரைவாக கொடுத்து பாருங்கள், எச்சரிக்கை செய்வது குறைந்து விடும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-201800:04:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அவ்வளவு கஷ்டப்படுவானேன்? பலநூறு ஆதார் விவரங்களை 500 ரூபாய் கொடுத்தால் தருகிறார்கள்.. கைரேகை, கருவிழி, அட்ரஸ், போன், ன்னு எல்லா தகவலும் கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Mohan Mg - Pondicherry,இந்தியா
04-ஜூலை-201821:59:43 IST Report Abuse
Mohan Mg தற்போதைய நிலையில் உண்மையாக தோன்றவில்லை , இதற்கு மிக மிக அதிக ரெஸலுஷன் கேமரா தேவை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X