சொர்க்கத்தை அடைவதற்காக 11 பேரும் தற்கொலை: சிசிடிவி.,யால் அம்பலம்

Added : ஜூலை 04, 2018 | கருத்துகள் (65)
Advertisement
CCTV,Delhi Family,Hanging,தற்கொலை,சிசிடிவி

புதுடில்லி : டில்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் மரணம் தற்கொலை தான் என சிசிடிவி மூலம் உறுதியாகியுள்ளது.

டில்லியின் புராரி பகுதியில், ஒரு வீட்டில், 10 பேர் துாக்கில் தொங்கிய நிலையிலும், 75 வயது மூதாட்டி, பக்கத்து அறையில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும் பிணமாக கிடந்தது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் அந்த வீட்டின் பின் பக்க சுவரிலிருந்து, 11, 'பைப்'புகள் மர்மமான முறையில், சுவரில் பொருத்தப்பட்டிருந்தது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

இந்நிலையில் 11 பேரின் மரணம் தற்கொலை தான் என சிசிடிவி மூலம் உறுதியாகியுள்ளது. 11 பேரின் மரணத்தில் எந்த சதியும் இல்லை என சிசிடிவி பதிவின் மூலம் போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர். இறந்த 11 பேரில் ஒருவரான மூத்த மருமகள், தற்கொலைக்கு நாற்காலியை கொண்டு செல்வதும், இறந்த 2 சிறுவர்கள் தற்கொலை செய்ய வயர்களை கொண்டு செல்வதும், அவர்களின் எதிர்வீட்டில் இருந்த சிசிடிவி.,யில் பதிவாகியுள்ளது. மேலும் சொர்க்கத்தை அடைவதற்காக 11 பேரும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-ஜூலை-201819:48:28 IST Report Abuse
Rafi இறைவன் கொடுத்த உயிரை மாய்த்து கொள்ள யாருக்கும் உரிமையில்லை. ஒரு முறை ஜனாஜா தொழுகைக்காக நபி அவர்கள் தலைமை ஏற்க தயாராக இருந்த போது மரணம் அடைந்தவர் தற்கொலை செய்துகொண்டுள்ளவர் என்ற தகவல் கிடைத்தவுடன் அந்த தொழுகையிலிருந்து விலகி விட்டார்கள். அவர்களுக்கு சுவர்க்கம் கிடைக்காது என்றார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
14-ஜூலை-201811:30:21 IST Report Abuse
Syed Syed படித்தவர்கள் . வசதியானவர்கள் எதற்கு தற்கொலை செய்யவேண்டும் அதுவும் குடும்பத்துடன். ஏதோ மர்மம் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
பொன் வண்ணன் - chennai,இந்தியா
05-ஜூலை-201816:44:32 IST Report Abuse
பொன் வண்ணன் பாதி பேரை ஆட்சியாளர்களே அவர்களது திட்டங்களால் சொர்கத்திற்கு அனுப்புகிறார்கள்... மீதி பேர் தாங்களாகவே போய் விடுகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X