ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் ஹிந்தி திணிப்புக்கு கண்டனம் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில்
ஹிந்தி திணிப்புக்கு கண்டனம்

புதுடில்லி : ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், டிக்கெட் பதிவு செய்வதற்கான புதிய இணையதளம் மூலம், ஹிந்தி மொழியை திணித்து வருவதாக, தமிழகத்தை சேர்ந்த ரயில் பயணியர் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

IRCTC,hindi,ஐ.ஆர்.சி.டி.சி.,இணையதளம்,ஹிந்தி,ஹிந்தி திணிப்பு,கண்டனம்


ஐ.ஆர்.சி.டி.சி., மற்றும் ரயில்வே அமைச்சக அலுவலகத்துக்கு, கே.கே.டி.ஆர்.யு.ஏ., எனப்படும், கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்கம் எழுதிய கடித விபரம்: ரயில் டிக்கெட் முன்பதிவிற்காக, ஐ.ஆர்.சி.டி.சி., சமீபத்தில் துவக்கியுள்ள இணையதளத்தில், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கான வாய்ப்புகளே உள்ளன. நாட்டின் பிற பிராந்திய மொழிகளுக்கு

வாய்ப்பு தரப்படவில்லை. இந்த இணையதளத்தில், பல வழிகளில் ஹிந்தி மொழி திணிக்கப்படுகிறது.

பயணம் செய்ய வேண்டிய இடத்தை தட்டச்சு செய்தால், மீண்டும் ஹிந்தி மொழியில் வாசகங்கள் தோன்றுகின்றன. ஹிந்தி மொழிக்கென தனியாக இணையதளம் உள்ளபோது, ஆங்கிலத்தில் உள்ள இணையதளத்திலும், ஹிந்தி திணிப்பு செய்யப்படுகிறது.

ஹிந்தி பேசும் மக்கள், ஹிந்தி மொழி இணையதளத்தை பயன்படுத்த முடியும்; அப்படி இருக்கையில், ஆங்கில மொழி இணையதளத்திலும் ஹிந்தி மொழியை திணிப்பது அவசியம் அற்றது.

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம், ரயில் பயணியருக்கு டிக்கெட் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. ஹிந்தி மொழியை ஊக்குவிப்பது, அதன் வேலை அல்ல. அனைத்து மொழியினருக்கும் சமத்துவம் தரப்பட வேண்டும்; நுகர்வோர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

Advertisement


ஹிந்தி மொழி பேசாத மக்களிடம், ஹிந்தியை திணிப்பதை கைவிட வேண்டும். தமிழக பயணியருக்கான டிக்கெட் முன்பதிவுக்கென, தமிழில் தனி இணையதளம் துவக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கே.கே.டி.ஆர்.யு.ஏ., வின் தொடர் நடவடிக்கைகளால், ரிசர்வ் செய்யப்படாத டிக்கெட்டுகளை தமிழ் மொழியில் வழங்கும் திட்டம், சமீபத்தில் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
07-ஜூலை-201820:25:58 IST Report Abuse

balஎன்னவோ சென்னையில் உள்ள எல்லா பிள்ளைகளுக்கும் தமிழ் எழுத படிக்க தெரியுமாம்....10 % கூட எழுத படிக்க தெரியாது..ஏனெனில் பாவாடைகள் கான்வென்ட் கலாச்சாரம். மற்றும் வீட்டில் தங்கிலீஷ்தான். ஆங்கிலத்தை ஒத்துக்கொள்ளும்போது..ஏன் தேசிய மொழியை ஏற்கக்கூடாது...ஆங்கிலத்தையும் ஒழியுங்கள் பார்ப்போம். மும்பையில் படித்தாலும் ஏன் குடும்பத்துக்கு தமிழ் எழுத படிக்க தெரியும்....அந்த கொள்கை ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும்.

Rate this:
05-ஜூலை-201820:22:58 IST Report Abuse

ருத்ராசுவாசிப்பது அந்தந்த மானில தாய் மொழியாகவும், வாசிப்பது மாணவர் விருப்ப மொழியாகவும் இருக்க வேண்டும்.

Rate this:
suresh - chennai,இந்தியா
05-ஜூலை-201821:07:21 IST Report Abuse

sureshபடித்ததில் பிடித்தது உங்கள் கருத்து...

Rate this:
R.Subramanian - Chennai,இந்தியா
05-ஜூலை-201815:58:14 IST Report Abuse

R.Subramanian ஹிந்தி படிக்க விருப்பம் இல்லாதவர்கள் படிக்க வேண்டாம் ஆனால் படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஏன் வசதி வாய்ப்புகளை மறுக்கிறீர்கள். தமிழக அரசு பள்ளிகளில் எதற்கு ஹிந்தியை தடுத்து இருக்கிறீர்கள், அரசு பள்ளி மட்டுமே இருக்கும் ஏழை கிராமப்புற மாணவன் ஹிந்தி படிக்க வசதி வேண்டும், தமிழக அரசு பள்ளிகளில் ஹிந்தி கற்கும் வாய்ப்பு வேண்டும், விருப்பம் இருப்பவர்கள் ஹிந்தி கற்று கொள்ளட்டும் விருப்பம் இல்லாதவர்கள் ஹிந்தி கற்க வேண்டாம்.

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
05-ஜூலை-201817:24:35 IST Report Abuse

BoochiMarunthuஅந்த மாதிரி யாரும் தடுக்கவில்லை ? ஹிந்தி படிக்க வேண்டும் என்றால் மக்கள் வரி பணத்தில் நடக்கும் ஹிந்தி பிரச்சார சபாவ்வில் படிக்கலாம் . அரசு பள்ளிகளில் கூட ஹிந்தி சொல்லிக்கொடுக்கிறார்கள் . நீ தமிழை ஓரங்கட்டிவிட்டு ஹிந்தி திணிப்பதை தான் எதிர்க்கிறார்கள்...

Rate this:
Stylish Tamilan - Ambur,இந்தியா
05-ஜூலை-201817:57:07 IST Report Abuse

Stylish Tamilanஇதே மாதிரி வடஇந்தியர்களை தமிழ் படிக்க சொல்லலாமா? சொன்ன அவங்க எப்படி கேப்பாங்க ஹிந்தி வாழனும் தமிழ் சாகணுமா? ஏற்கெனவே தமிழ் நெறய நோயோட சாகப்போற நாலா எண்ணிக்கிட்டு இருக்கு.. சமஸ்கிருதத்தை விட மிகவும் பழமையான மொழி தமிழ்.. youtube லே ஆதரம்கூட இருக்கு அப்படி பட்ட தமிழை புறக்கணிக்கக்கூடுமோ.....

Rate this:
suresh - chennai,இந்தியா
05-ஜூலை-201820:10:44 IST Report Abuse

suresh< விரும்புபவர்களுக்கு ஏன் வசதி வாய்ப்புகளை மறுக்கிறீர்கள். > விரும்கிறவர்கள் படிக்க ஹிந்தி பிரச்சார சபாவை இயங்க அனுமதிப்பட்டுள்ளது,,, ஹிந்தி கோச்சிங் கிளாஸ் என பல விளம்பரங்களை பல தமிழக வீட்டு வாசல்களில் போர்டுகளில் பார்க்கலாம்,,,குகுள் செர்ச் செய்தால் உங்கள் பகுதியில் யார் ஹிந்தி சொல்லி தருகிறார்கள் என்பதை அறியலாம்,,, படிக்க வேண்டும் என நினைப்பவர்களை யாரும் தடுக்கவில்லை,,, ஆனால் வேண்டாத ஹிந்தியை தான் திணிக்கிறார்கள்...

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-201820:19:53 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்பீகாருக்கு போய் தாராளமாக படிக்கலாமே சார்ர் ர்.....

Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X