சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ரத்தப் போக்கை கட்டுப்படுத்த மாத்திரை

Added : ஜூலை 05, 2018 | கருத்துகள் (1)
Advertisement

உலகெங்கும் ஆண்டுக்கு, 70 ஆயிரம் கர்ப்பிணிகள், பிரசவித்த பிறகு ஏற்படும் உதிரப் போக்கால் உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்க பரவலாக ஆக்சிடாசின் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது.
இந்த மருந்து, வெப்பத்தால் விரைவில் செயலிழந்துவிடும் தன்மையைக் கொண்டது. இதனால் மின் வசதியும், குளிர் சாதன வசதியும் தொடர்ந்து கிடைக்காத பகுதிகளில், இம் மருந்தை பயன்படுத்த முடிவதில்லை.
அண்மையில் உலக சுகாதார நிறுவனம், கர்ப்பிணிகளின் உதிரப் போக்கை தணிக்க ஒரு புதிய மருந்தை வெள்ளோட்டம் பார்த்துள்ளது.
பத்து நாடுகளில், 30,000 கர்ப்பிணிகளிடம் நடந்த வெள்ளோட்டத்தில் கார்பிடோசின் என்ற புதிய மருந்து, நல்ல பயனளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மருந்தை பராமரிக்க, குளிர் சாதனம் தேவையில்லை என்பதால், பல்லாயிரம் கர்ப்பிணிகளின் உயிர் காக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kaliyan Pillai - Chennai,இந்தியா
21-ஆக-201816:32:52 IST Report Abuse
Kaliyan Pillai சீக்கிரம் பயன்பாட்டுக்கு கொண்டுவாங்க. பாவம் தாய்மார்கள் நமக்கு உயிர் கொடுப்பவர்கள் உயிரைக் காக்கவேண்டியது நமது கடமையல்லவா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X