சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

Added : ஜூலை 05, 2018
Advertisement
சொல்கிறார்கள்


அடி மாடுகளையும் வாங்கி பராமரிக்கிறோம்!


சென்னை, அயனாவரம் - கொன்னுார் பிரதான சாலையில் அமைந்துள்ள, 'தி மெட்ராஸ் பிஞ்ச்ராபோல்' டிரஸ்டில், மேலாளராக பணியாற்றி வரும், சுரேஷ்குமார்: 1906ல், 250 மாடுகளுடன் இந்த கோசாலை துவங்கப்பட்டது. இதை உருவாக்கியவர், குஷால்தாஸ். விலங்கு நல வாரியத்தின் அனுமதி பெற்ற, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கோசாலை இது.

பசு வதை கூடாது; பசுக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு, 100 ஆண்டுகளை தாண்டி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட, 2,000க்கும் அதிகமான மாடுகளை, இங்கே பராமரித்து வருகிறோம். மாடுகளுக்கு காலையில் பசுந்தழை, வைக்கோல், தண்ணீர் கொடுப்போம். மதியம், கோதுமைத் தவிடு, எள்ளுப் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு கலந்த மாட்டுத் தீவனம், பச்சைப் புல் கொடுப்போம். காலையில் இரண்டு மணி நேரம், 'ஷெட்'டுக்குள்ளேயே மாடுகளை திறந்து விடுவோம்.

நன்கொடையாளர்கள் பலர், தினமும் இங்கே வருவர். அவர்கள் குடும்பத்தினரின் பிறந்த நாள், திருமண நாள், இறந்து போன பெரியவர்களின் நினைவு நாள் போன்ற முக்கிய தினங்களில், பசுக்களுக்கு தேவையான வாழைப் பழங்கள், மாம்பழங்கள், காய்கறிகளை நன்கொடையாக தருவர்.மாடுகளைப் பராமரிக்க முடியாதவர்கள், இங்கே அழைத்து வந்து விட்டுச் செல்லலாம். பொருளாதார சூழல் காரணமாக பலர், அவற்றை அடிமாடுகளாக விற்பர். அவர்களுக்கு தேவையான பணத்தை நன்கொடையாளர்களிடம் இருந்து வாங்கி கொடுத்து, மாடுகளை பராமரித்து வருகிறோம்.

தொலைதுாரத்தில் இருந்து மாடுகளை அழைத்து வர சிரமப்படுவோருக்கும், நன்கொடையாளர்களிடம் நிதி பெற்று, மாடுகளை இங்கே அழைத்து வர ஏற்பாடுகளை செய்து தருவோம். திருவள்ளூர், பெரியபாளையம், தென்காசி, செங்கோட்டை என, தமிழகத்தின் பல பகுதி களைச் சேர்ந்த மாடுகளும், இங்கே கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்து அறநிலையத் துறையின் சார்பாகவும், பல மாடுகள் இங்கே விடப்பட்டிருக்கின்றன. நேர்ந்து விடப்படும் மாடுகளை, கோவில்களில் சரியாகப் பராமரிக்க முடியாமல் இங்கு விடுவதும் உண்டு.

மாடுகளை பராமரிக்க, 120 தன்னார்வலர்கள் உள்ளனர். இங்குள்ள மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணத்தையும், கோமியத்தையும் விவசாயப் பயன்பாட்டுக்கு கொடுக்கிறோம். குறைந்தபட்சம், 500 ரூபாயிலிருந்து, அதிகபட்சம், 2,500 ரூபாய் வரை, சாணமாகவும், மட்க வைத்து எருவாகவும் கொடுக்கிறோம். இதேபோல, கோமியத்தை, 300 மில்லி, 10 ரூபாய், 1 லி., 30 ரூபாய்க்கு கொடுக்கிறோம். மாடித் தோட்டம் வைத்துள்ளோர், கோமியத்தை, பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்துகின்றனர்.

சாணம், கோமியம் வாயிலாக வரும் தொகையை, மாடுகளின் தீவனத்துக்காகவும், பராமரிப்புக்காகவும் பயன்படுத்திக் கொள்கிறோம்.

தொடர்புக்கு: 98410 92085.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X