பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

Added : ஜூலை 05, 2018
Share
Advertisement
விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரியில், கலைப்பிரிவிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது.விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாறு, பொருளியல், வணிகவியல் (பொது தொழிற்பிரிவு) ஆகிய கலை பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு மதிப்பெண் அடிப்படையில், நேற்று (5ம் தேதி) நடக்கும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, இரண்டாம்

விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரியில், கலைப்பிரிவிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது.விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாறு, பொருளியல், வணிகவியல் (பொது தொழிற்பிரிவு) ஆகிய கலை பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு மதிப்பெண் அடிப்படையில், நேற்று (5ம் தேதி) நடக்கும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, இரண்டாம் கட்ட கலைப் பிரிவு கலந்தாய்விற்கு கல்லுாரி நிர்வாகம் மூலம் 600 மாணவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, நேற்று கல்லுாரி முதல்வர் மணி முன்னிலையில் கலந்தாய்வு நடந்தது. இதில், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர்.இதேபோன்று, இன்று (6ம் தேதி) அறிவியல் பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணிப்பொறியியல், கணினி பயன்பாட்டியல், புள்ளியியல் ஆகிய பாடங்களுக்கு மதிப்பெண் அடிப்படையில், காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X