அரசியல் நிறைந்த அடுத்த பதவி | Dinamalar

அரசியல் நிறைந்த அடுத்த பதவி

Added : ஜூலை 06, 2018
Advertisement
அரசியல் நிறைந்த அடுத்த பதவி

பல்வேறு மசோதாக்கள் பார்லிமென்டின் நடப்புக் கூட்டத்தில் நிறைவேறினால், பொருளாதார சீர்திருத்தங்கள் ஓரளவு எளிதாக அமலாகும்.லோக்சபாவில் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு மெஜாரிட்டி இருந்தபோதும், முந்தைய கூட்டத் தொடரில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, காங்கிரஸ் உட்பட கட்சிகள் மேற்கொண்ட அமளி, ஜனநாயகத்திற்கு முரணாக இருந்தன.பொதுவாக காரசார விவாதம் அல்லது வலு உள்ள எதிர்க்கட்சிகள், சபையின் தீர்மான கோரிக்கை அடிப்படையில், விவாதத்தை முன்வைக்கும் காலம் மாறிவிட்டது. பட்ஜெட் உட்பட பல விஷயங்கள், பொதுமேடை அல்லது அரைகுறையாக மீடியாக்களில் மட்டும் விவாதிக்கப்படும் காலமாகி உள்ளது துரதிர்ஷ்டம்.லோக்சபா அடுத்த கூட்டத்தொடர், வரும், 18ம் தேதி துவங்கும் போது, அதை எப்படி லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கையாளுகிறார் என்பது இனித் தெரியும்.
முற்றிலும் முடங்கிய சபை என்ற பெயரை, ராஜ்யசபா, நீண்ட நாளாக கொண்டிருக்கிறது. அதற்கு காங்கிரஸ் கட்சி, எம்.பி.,க்கள் மெஜாரிட்டியாக இருப்பதும், திரிணமுல் உட்பட சில கட்சிகள், தொடர் ஆவேச நடவடிக்கைகள் எடுப்பதும் காரணம் ஆனது.சபையின் நடுவே பதாகை ஏந்தி கோஷமிடுவது, எம்.பி.,க்கள் கலாசாரமாகி விட்டது. சபையின் துணைத் தலைவரான, பி.ஜெ.குரியன் பதவிக்காலம் முடிந்துள்ளது. ராஜ்யசபா துணைத்தலைவர் வெங்கையா, தனக்கு அடுத்த பதவியில் இருப்பவரை தேர்வு செய்ய, முதற்கட்ட ஆலோசனைகள் மேற்கொண்டது சுலபமாக இல்லை.
ராஜ்யசபாவில் மொத்தம் உள்ள சீட் எண்ணிக்கை, 245. இதில், பா.ஜ.,வுக்கு, 69 இடங்கள் உள்ளன. காங்கிரசுக்கு இனி, 50 இடங்கள் மட்டுமே இருக்கும். ஆனாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பார்வையில் பாதிக்குமேல் சபையில் ஆளும் தரப்பு அமைய வாய்ப்பு இல்லை.அது புதிய, எம்.பி.,க்கள் பதவியேற்பு, அதற்குப் பின் கட்சி மேற்கொள்ளும் அணுகுமுறைகள் ஆகியவற்றால் நிலைமை தெளிவாகும்.
காங்கிரஸ் மற்றும் திரிணமுல் ஆகிய இரு கட்சிகள், 63 சீட்டுகள் கொண்டிருக்கின்றன.அப்படிப் பார்க்கும் போது, சபையை பெரும்பான்மை அணி சார்பில் நடத்தும் புதிய துணைத் தலைவர் தேர்வு அவசியமாகிறது. முந்தைய துணைத் தலைவர் குரியனை, கேரளாவில் இருந்து, எம்.பி.,யாக தேர்வு செய்யாமல் காங்கிரஸ் தவிர்த்ததில் அரசியல் உண்டு. குரியன் வரக் கூடாது என்பதற்காக, இந்திய முஸ்லிம் லீக் வேட்பாளரை அக்கட்சி அனுமதித்தது.
மோடி அரசை எல்லா விஷயத்திலும் எதிர்ப்பதையே, காங்கிரஸ் கொள்கையாக கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது, விவாத அரங்காக ராஜ்யசபா வரும் கூட்டத்தொடரில் மாறுமா என்பதற்கு, அடுத்த துணைத் தலைவர் தேர்தல் ஒரு முக்கிய அம்சமாகும்.
ஜனாதிபதி பதவி, துணை ஜனாதிபதி ஆகிய ராஜ்யசபா தலைவர் பதவி ஆகிய இரு பதவிகளையும் அக்கட்சி கொண்டிருக்கும் போது, இப்பதவியை அக்கட்சி அடைவதை பல்வேறு கட்சிகள் ஆதரிக்காது. முன்பு வாஜ்பாய் கூட்டணி காலத்தில், காங்கிரஸ் யூகங்களை முறியடிக்க, அவர் ஜனாதிபதி பதவிக்கு டாக்டர் அப்துல் கலாமை முன்னிறுத்தி அடைந்த பெருமை, வரலாறு ஆகும்.
இன்று ராஜ்யசபா விதிகள் அறிந்த, உறுப்பினர் கள் மற்றும் கட்சிகளின் போக்கை அறிந்த ஒருவர், அப்பதவியில் அமர்ந்தாக வேண்டும். அதையும் தவிர, ராஜ்யசபா நெறிகளில், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள், ஏதாவது ரகளை செய்து, சபைக்கு குந்தகம் விளைவித்தால் கூட, அவர்களை வெளியேற்றம் செய்ய சபைவிதி கிடையாது.
இப்பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அதற்கு முதல்நாளன்று ஒரு, எம்.பி., சபையின் தலைமைச் செயலரிடம், குறிப்பிட்ட நபர் இப்பதவியில் அமர விருப்பம் என்று விண்ணப்பிக்கலாம். அதில் அதிக போட்டி இருப்பின் ஓட்டெடுப்பும், அதில் முடிவும் தேவை. அது, சபை துவங்கி ஒரு வாரத்தில் நடக்கும்.
பா.ஜ., தனது உத்தியாக பொதுவேட்பாளரை தேர்வு செய்ய விரும்புகிறது. இதில், அகாலி தளத்தைச் சேர்ந்த நரேஷ் அகர்வால் பெயர் அடிபடுகிறது. அவர் சபை நுணுக்கங்களை அறிந்த சிறந்த பார்லிமென்டரியன். ஆனால், திரிணமுல்கட்சி இதுகுறித்த முடிவை எடுக்கவில்லை.காங்கிரஸ் தனது வேட்பாளரை முன்னிறுத்த வாய்ப்பில்லை. ஏனெனில், இன்றைய நிலவரப்படி ஆளும் தரப்பிற்கு, 104 ஆதரவு எண்ணிக்கையும், எதிர் தரப்பிற்கு, 115 என்ற எண்ணிக்கையும் உள்ளது.
சபையில் இதுவரை, பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் பேசக்கூட முடியாத அவலம் இருந்திருக்கிறது. இவை போன்ற பல விஷயங்கள் முன்னுரிமை விவாதம் ஆகும்போது, இத்தேர்தலும் அதிக முக்கியத்துவம் பெற்றதாகிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X